ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் "விருமன்".
முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் விருமன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசும்போது,
முக்கியமான ஒரு விஷயத்தை நான் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கார்த்தி சாரின் ஸ்மைல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் நடித்த படத்தில், ஷங்கர் சார் உதவி இயக்குனராக இருந்தார். அவருடைய பெண் கதாநாயகியாக நடிப்பதில் வாழ்த்துகள் என்றார்.
இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கம்புலி பேசும்போது,
மதுரையிலேயே ...









