துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலரின் நடிப்பில், இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கிருக்கும் திரைப்படம் சீதா ராமம்.இன்றைய டிஜிட்டல் கால உலகில் வாழும் இளைஞர்களை மட்டுமல்லாது, கடித்தை மட்டுமே தொடர்பு கருவியாக பயன்படுத்தி, அதன் மூலமே அன்பை பரிமாறியவர்களுக்கு இந்த கதை இன்னமும் கொஞ்சம் ஆழமாய் இதயத்தை தொடும் என்பது உண்மை.
தனக்கு யாரும் இல்லை என்ற உணர்வுடன் இருக்கும், இந்திய ராணுவ வீரரான துல்கரின் மீது காதல் கொள்ளும் மிருணாள் தாகூர், அவருக்கு காதல் கடிதங்களை எழுதுகிறார்.இதனிடையே வரும் போர் பணிக்காக துல்கர் கிளம்புகிறார், அவர் மீண்டும் திரும்பி மீண்டும் வந்தாரா… அந்த காதலின் நிலை என்னவாயிற்று ..? இந்த கதையோட்டத்தில் ,பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்னான ராஷ்மிகா மந்தனாவுக்கு தனது தாத்தா கொடுத்த கடிதம் ஒன்றை இந்தியாவில் இருக்கும் மிருணாள் தாகூரிடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு வருகிறது அதன்படி அவரும். மிருணாள் தாகூரை தேடி இந்தியா வருகிறார் அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது?கடைசியில் கடிதம் மிருணாள் தாகூரிடம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்ற பல கேள்விகளுக்கு பதில் தரும் கதைதான், சீதாராமம் படத்தின் கதை.
தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகர் துல்கர் சல்மான், தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கத்தில், இந்த படத்தில் கதையின் நாயகனாய் ,காதலை கவிதையாய் சொல்லும் கதாபாத்திரத்தில் தன் நடிப்பை சிறப்பாக பதிவு செய்துள்ளார் .இவருக்கு இணையாக மிருணாள் தாகூர் அழகுற நடித்திருக்கிறார். துல்கர் – மிருளாளினியின் இணையானது அந்த கதாபாத்திரங்களின் தன்மைக்கு மேலும் வலு சேர்க்கின்றது.
பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாஆகிய இருவரின் ஒளிப்பதிவு, பலவிதமான இடங்களின் சிறந்த காட்சிகளை எழிலுடன் பதிவு செய்திருக்கிறது, கால பதிவுகளுக்கு பொருத்தமான கலை இயக்கத்தின் பங்களிப்பும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் ,ரசிகர்களை கதை நடைபெறும் காலஓட்டத்தில் பயணிக்கவைக்கிறது
போர்க்கள பின்னணியில் பூவாய் அரும்பும் காதலை, தெளிந்த திரைக்கதையோட்டத்தின் வழியே சிறந்த காட்சிஅமைப்புகளுடன், நிறைவான படைப்பாய் தந்துள்ளார் இயக்குனர் ஹனு ராகவபுடி.
ஒன்றுபட்ட உணர்வுகளின் வழியே சங்கமிக்கும் இதயங்களின் காதலை அனைவரும் நிச்சயம் கண்டு ரசிக்கலாம்