Friday, April 25

“எண்ணித் துணிக” திரைப்பட விமர்சனம்

Rain of Arrows Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக”

படத்தின் கதை ஆரம்பத்தில் வைரக் கொள்ளையில் துவங்கி பின் காதல் ட்ராக்கில் பயணிக்கிறது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள வைரங்கள் ஒரு அமைச்சரிடம் வருகிறது. அதை கைப்பற்ற எண்ண அவை இருக்கும் நகை கடை மீது தாக்குதல் நடத்தப்படும்போது கொலையும் நட க்கிறது தன் காதலியைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார் ஜெய். கொள்ளையர்கள் பிடிபட்டர்களா/ வைரம் கிடைத்ததா?, . ஜெய் பழிக்குப் பழி வாங்கினாரா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பலபடங்களில் காதல்நாயகனாய் நடித்திருந்த ஜெய் இந்தப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாய் வலம் வந்துள்ளார், இந்த வாய்ப்பை அவரும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்

ஜெய்யின் காதலியாக நர்மதா கதாபாத்திரத்தில் அதுல்யா ரவியும் ஜெனிஃபர் கதாபாத்திரத்தில் அஞ்சலிநாயரும் இருவரும் தங்களுக்கு உரிய காட்சிகளில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

மேலும் அமைச்சராக சுனில், அவரது ஆசை நாயகியாக வித்யா பிரதீப், நகைகளைக் கொள்ளையடிப்பவராக வம்சி ,மாரிமுத்து என மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பும் பாராட்டும் வகையில் உள்ளது

சாம் சி.எஸ் அவரின் இசையில், பிண்ணனி இசையும் பாடல்களும் கதையோட்டத்திருக்கு உதவும் வகையில்  மட்டும் உள்ளன தினேஷ்குமாரின் ஒளிப்பதிவும் ,சாபு ஜோசப்பின் படத்தொகுப்பும் ஒரு த்ரில்லர் படத்திருக்கு தேவையான விறுவிறுவிப்புக்கு துணை நின்றுள்ளன ,

‘எண்ணித் துணிக’ என துவங்கும் வள்ளுவரின் குறளை படத்தின் டைட்டிலாக வைத்துள்ள
இயக்குனர் வெற்றிச்செல்வன் எடுத்துக்கொண்ட ஆக்சன், திரில்லர் கதைக்கேற்ற கதாப்பாதிரங்கள், ,அதற்கேற்ற நடிகர்கள் என தன் முதல் அடியை சிறப்பாகவே வைத்துள்ளார் .இளம் வயது ஆடியன்களுக்கு ஏற்ற ரொமான்ஸ், ஆக்ஷன், திரில்லிங் என எல்லாம் கலந்த கலவைதான் இந்த “எண்ணித் துணிக” திரைப்படம் .

Spread the love