Tuesday, June 2

சினிமா

இசையமைப்பாளர் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் புதிய பாடல் ‘ஹர் கர் திரங்கா’ வைரலானது

இசையமைப்பாளர் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் புதிய பாடல் ‘ஹர் கர் திரங்கா’ வைரலானது

சினிமா
'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்தி பாடல் சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் பாடிய இந்தப் பாடலை, பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கியுள்ள ராக்ஸ்டார் டிஎஸ்பி என்று அன்புடன் அழைக்கப்படும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய அரசிற்காக கைலாஷ் பிக்சர்ஸ் இந்தப் பாடலைத் தயாரித்துள்ளது. இதைப் பற்றி பேசிய டிஎஸ்பி, “இந்த வாய்ப்பு கிடைத்ததை நான் பெரிய பாக்கியமாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இப்பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக அமைந்துள்ளது. இதில் பணிபுரிந்துள்ள அற்புதமான மனிதர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இசையமைப்பில் உருவான 10 சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாக இடம்பெறும். மேலும் ...
கார்த்தி கூடிய விரைவில் தேசிய விருது வாங்குவார்-விருமன் பட விழாவில்,இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சு

கார்த்தி கூடிய விரைவில் தேசிய விருது வாங்குவார்-விருமன் பட விழாவில்,இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சு

சினிமா
இது மதுரை மண். என் சொந்த மண். ரசனைக்குப் பெயர் போன மண். மதுரையில் ஒரு படம் ரசிக்கப்படுகிறது என்றால், உலகம் முழுவதும் ரசிக்கப்படும் என்று அர்த்தம். என் பெருமைக்குரிய இடம் மதுரை. மேடையில், நான் சம்பிரதாயத்திற்குத்தான் பேசுவேன். ஆனால், சில படங்கள் தான் மூச்சுமுட்ட அமுக்கி விடும். அதுமாதிரியான படம் தான் விருமன். இந்த படத்தின் சிறப்பம்சங்கள் நிறைய இருக்கிறது. இவர்கள் 4வது தலைமுறை பிள்ளைகள். சூர்யா, கார்த்தி என் வீட்டில் விளையாடிய பிள்ளைகள். இன்று அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. உதவி இயக்குனராக இருந்தபோது, சிவக்குமார் திருமணமாகி வந்தார். அவருடைய பிள்ளைகள் இப்படி வருவார்கள் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஒழுக்கமுள்ள சிறந்த மனிதர் சிவகுமார். ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தவர் சிவகுமார். வசதியாக இருந்தாலும், பள்ளிக்கு கார் கொடுத்து அனுப்ப மாட்டார். ஷங்கரைப் பார்த்து பிரமித்தவன் நான்....
சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான். விருமன் பட விழாவில் நடிகர் சூர்யா  பேச்சு

சினிமாவிற்காகவும், சினிமாத்துறைக்காகவும் என்னை விட அதிகம் சிந்திப்பது கார்த்தி தான். விருமன் பட விழாவில் நடிகர் சூர்யா பேச்சு

சினிமா
உங்களை 5 மணியிலிருந்து கட்டி வைத்திருந்ததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முக்கியமானவர்கள் பேச வேண்டியிருந்ததால் உங்களை அமைதியாக இருக்க சொன்னேன். ஆனால், இப்பொழுது உங்களுடைய முழு அன்பையும் நான் எடுத்துக் கொள்கிறேன். இது இன்று நேற்று உறவல்ல; 25 கால உறவுகள்! அதில் போட்ட ஒரு சில பேரை நான் நான் கூற முடியும். மற்றவர்கள் தவறாக நினைக்கக் கூடாது. ஜோதிமுத்து, மனோஜ் போன்ற அனைவரும் 25 ஆண்டுகாலமாக இந்த உறவை கட்டிக் காப்பாற்றி இருப்பதை வார்த்தைகள் கூறி விட முடியாது. இந்த அன்பிற்கும் உறவிற்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். ராஜாவுடைய சொந்த ஊர் இதுதான். பள்ளிக்காலத்தில் கோயம்புத்தூருக்கு விடுமுறையில் செல்வது போல இங்கும் வந்திருக்கிறேன். அப்போது நான் நடிகன் கிடையாது. ஆனால், சித்தி பையன், பெரியம்மா பையன், மாமா பையன் என்று ராஜாவுக்குத் கொடுக்கும் அதே உறவை, எனக்கும் கொடுத்தார்கள். அதை நான் ...
‘சீதா ராமம்’ போன்ற காதல் கதையை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. –  துல்கர் சல்மான்

‘சீதா ராமம்’ போன்ற காதல் கதையை நாம் இதற்கு முன் பார்த்ததில்லை. –  துல்கர் சல்மான்

சினிமா
'நிறைய காதல் கதைகளில் நடித்திருந்தாலும் 'சீதா ராமம்' படத்தின் கதை, இதற்கு முன் நான் கேட்டிராத கதை. அதுபோன்ற காதல் கதை நாம் இதுவரை பார்த்ததில்லை.'' என 'சீதா ராமம்' படத்தின் நாயகனும், நடிகருமான துல்கர் சல்மான் தெரிவித்திருக்கிறார். மலையாள தேசத்து நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருவர். இவரது நடிப்பில் தயாரான 'சீதா ராமம்' எனும் திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகிறது. ஸ்வப்னா சினிமா என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் தயாரித்து, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் வெளியாகும் திரைப்படம் 'சீதா ராமம்'. தெலுங்கின் முன்னணி இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் படத்தை ரசிகர்களிடத்தில் அ...
 Pramod Films  பிரதீக் சக்ரவர்த்தி & ஸ்ருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள “ட்ரிகர்” படத்தின் செகண்ட் லுக்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

 Pramod Films  பிரதீக் சக்ரவர்த்தி & ஸ்ருதி நல்லப்பா வழங்கும், சாம் ஆண்டன் இயக்கத்தில், நடிகர் அதர்வா முரளி நடித்துள்ள “ட்ரிகர்” படத்தின் செகண்ட் லுக்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது !

சினிமா
"ட்ரிகர்" படத்தின் செகண்ட் லுக் சமீபத்தில் வெளியான "ட்ரிகர்"  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர் அதர்வா முரளியின் 'ஆங்கிரி யங் மேன்' தோற்றம்  ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொது பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் இப்படத்திற்கு  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தின் செகண்ட் லுக்  அதர்வா கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட செகண்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. Romeo Pictures ராகுல் படத்தை தமிழகம் முழுவதும் செப்டம்பர் 2022 இல் வெளியிடுகிறார். படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். "ட்ரிகர்"  இயக்குநர்  சாம் ஆண்டன் எழுதி இயக்கியிருக்கும் ஒரு அவுட் அண்ட் அவுட் ஆக...
பூஜையுடன் துவங்கியது சமுத்திரக்கனி- தம்பி ராமையா கூட்டணியின் ‘ராஜா கிளி’

பூஜையுடன் துவங்கியது சமுத்திரக்கனி- தம்பி ராமையா கூட்டணியின் ‘ராஜா கிளி’

சினிமா
'மாநாடு' என்கிற மிகப்பெரிய வெற்றி பெற்ற கமர்ஷியல் படத்தை மட்டுமல்ல, 'கங்காரு', 'மிகமிக அவசரம்' என எளிய மனிதர்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சொல்லும் கருத்தாழம் கொண்ட படைப்புகளையும் தயாரித்து வெளியிட்ட வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படம் ‘ராஜா கிளி’ இந்தப் படத்தின் பூஜை இன்று மிக எளிய முறையில் நடைபெற்றது. 'சாட்டை', 'அப்பா', சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய 'வினோதய சித்தம்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது. ஒரே ஒரு சிறிய மாற்றமாக இந்தப் படத்தை தம்பி ராமையா இயக்குகிறார். சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். நடிப்பும் அதேசமயம் தமிழ் வசனங்களை அழகாக உச்சரிக்க தெரிந்த நடிகைய...
A.S. என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிக்க  விக்ராந்த் நடிக்கும்  புதிய படத்தின் துவக்க விழா

A.S. என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிக்க விக்ராந்த் நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா

சினிமா
தென் மாவட்ட பின்னணியில் சமூக அக்கறையுடன் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விக்ராந்த் A.S. என்டர்டெயின்மென்ட் சார்பில் S. அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த படத்தை இயக்குனர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியவர் விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார்.மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்து அதே சமயம் குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இரு...
ஆடி தள்ளுபடி, அடுத்தடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்

ஆடி தள்ளுபடி, அடுத்தடுத்த புது திரைப்படங்கள், அறிவிப்புகளால் ரசிகர்களை அசத்தும் ஆஹா ஓடிடி தளம்

சினிமா
தமிழகத்தில் தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ஆஹா ஓடிடி தளம், ரசிகர்களின் பேராதரவை பெற்று, முன்னணி ஓடிடி தளங்களுக்கு இணையாக வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. சிறந்த கதைகள் கொண்ட தொடர்கள் மற்றும் வெற்றி திரைப்படங்களால் பார்வையாளர்களை அசத்தி வரும் ஆஹா, அடுத்ததாக பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய திரைப்படமாக, சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற, நடிகை ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடித்த, “மஹா” படம் வெளியாகிறது. இதனை தொடர்ந்து, இம்மாதம் நடிகர் அருள்நிதி நடிப்பில், வெளியாகும் “டைரி” திரைப்படம், திரையரங்கு ஓட்டத்திற்கு பிறகு விரைவில் ஆஹா தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து மஹத் நடிப்பில் உருவாகி வரும் எமோஜி திரைப்படம் ஆஹா ஒரிஜினலாக வெளியாகிறது. ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ஜீவி 2 ...
மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் தயாராகும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர்

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் தயாராகும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் அனுபம் கேர்

சினிமா
ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும், மாஸ் மகாராஜாவுமான ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் முதல் பான் இந்திய திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கம் இந்திய திரையுலகின் பேசு பொருளாக மாறியது. தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிப்பில் தயாராகி வரும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் லேட்டஸ்ட்டாக சிறந்த நடிப்பிற்க...
‘இரவின் நிழல்’ திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் – இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!

‘இரவின் நிழல்’ திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் – இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!

சினிமா, செய்திகள்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு. க ஸ்டாலின் அவர்கள், இயக்குனர் _ நடிகர் திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார். திரைப்படத்தைப் பார்த்ததும் , முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள்பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி, "இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில் அற்புதம் !" என்று பாராட்டி , பார்த்திபனையும் படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார்.முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் 'நேற்றைய அரசியல் வரலாறு - 2092 "எனும் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து முதல்வரிடம் வழங்க, அதை ரசித்து பெற்றுக் கொண்டார். இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4 வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இரவின் நிழல் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது....