எமோஜி தமிழ் வெப் சீரிஸ்- விமர்சனம்
எமோஜி தமிழ் வெப் சீரிஸ்- விமர்சனம்
மஹத் ,தேவிகா சதீஷ் மானசா ,இவர்களுடன் ஆடுகளம் நரேன், வி.ஜே ஆஷிக் மற்றும் பலர் நடித்துள்ள எமோஜி தமிழ் வெப் சீரிஸுக்கு ஒளிப்பதிவு ஜலந்தர் வாசன் இசை: சனத் பரத்வாஜ் ,ரமணா ஆர்ட்ஸ் சார்பில் ஏ .எம். சம்பத் குமார் தயாரிப்பில், ஆஹா ஒரிஜினல் ஓடிடி வெளியீட்டில், இந்த வெப் சீரிஸ் இன்றைய கால கட்ட வாழ்வியலை யதார்த்தமாய் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது, இயக்கம் ஷென் எஸ்.ரெங்கசாமி.
ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் வேலை செய்யும் மஹத் ,மானசாவை காதலிக்கிறார், சில நாட்களுக்குப் பிறகு அவர்களுக்குள் பிரிவு ஏற்படுகின்றது இந்த பிரேக் அப், மகத்துக்கு மன அழுத்தத்தை தருகிறது , இதன் பின் தேவிகாவுடன் பழகும்போது மன அழுத்ததிலிருந்து மீள்வதை உணர்ந்த இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.அதற்க்கு பிறகு இந்த வாழ்வும் விவாகரத்துவரை செல்ல நேரிடுகிறது , இவர்களது மன உறவு மண பிர...









