Friday, January 24

பத்மஜா பிலிம் பேக்டரி  (Padmaja Film Factory) என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர். ஹனுமந்த் ராவு  தயாரிக்கும் புதிய பான் இந்தியா திரைப்படம் “இக் ஷு ” (IKSHU).

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள பான் இந்தியா படம் “இக்ஷு ” (IKSHU).

விவி.ருஷிகா இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப் படம் இது. படப்பிடிப்பு நிறைவுற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் ராம் அக்னிவேஷ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். மற்றும் ராஜீவ் கனகலா, பாகுபலி பிரபாகர், சித்திரம் சீனு மற்றும் பலர் நடித்துள்ளார்.தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறது.

ஐந்து மொழிகளில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்குப் பிறகு படத்தின் முதல் பிரீமியர் செய்யப்பட்டது. வணிக ரீதியாக அதில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.படத்தின் OTT உரிமைக்காக பிரபல ott நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மீதமுள்ள வணிக நிகழ்ச்சிகள் அனைத்தையும் பத்மஜா ஃபிலிம் பேக்டரிக்காக presenter சாய் கார்த்திக் கவுட் நடத்தி வருகிறார். இப்படம் செப்டம்பர் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

Spread the love