Monday, September 9

இலக்கியம்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட சீனு ராமசாமியின் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட சீனு ராமசாமியின் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’

இலக்கியம், சினிமா
திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலினை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டார்.   தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.   இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன் நிகழ்த்தினார். கவிஞர் நந்தலாலா இந்த நூலுக்கான ஆய்வுரை அளிக்க..' மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக எழுத்தாளரும், இயக்குநருமான சீனு. ராமசாமி...
கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலில் வரும் டிஜிடல் அபொகலிப்ஸ்…எதிர்காலத்தில் நடக்கும் என சித்தரிக்கப்பட்டது தற்போது நடக்கிறது…

கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலில் வரும் டிஜிடல் அபொகலிப்ஸ்…எதிர்காலத்தில் நடக்கும் என சித்தரிக்கப்பட்டது தற்போது நடக்கிறது…

இலக்கியம்
உலகம் முழுக்க விண்டோஸ் மென்பொருள் பாதுகாப்பு சேவையில் ஏற்பட்ட குளறுபடியால் விமானம், வங்கி என பொதுமக்களின் அடிப்படை சேவைகள் முடங்கியிருக்கின்றன. இது தொழில் நுட்ப கோளாறா அல்லது திட்டமிட்ட இணையவெளி தாக்குதலா என்று வல்லுனர்கள் இந்த சூழலை விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் என்ற நாவலில் 2032 ஆம் ஆண்டு ஜெல்லி என்ற வைரஸ் ஊடுருவி பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் முடக்கப்படுவது போல எழுதப்பட்டிருக்கிறது. டிஜிட்டல் அபோகலிப்ஸ் எனும் மெய்நிகர் காவுகோள் குறித்து கபிலன் எழுதியிருக்கிறார். தற்போது அதே போன்ற சூழல் உருவாகியிருப்பதால் கபிலன் வைரமுத்துவின் நாவலை வாசகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். என்ன நடக்கிறது என்று பிரபல ஆங்கில எழுத்தாளர் சேதன் பகத் ட்விட்டரில் கேட்ட கேள்விக்கு கபிலன் வைரமுத்துவின் ஆகோள் நடக்கிறது என்று ஒரு தமிழ் வாசகர் கமெண்ட் செய்திர...
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024

இலக்கியம்
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும் சென்னை சிஐடி நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று (22.06.2024 - சனிக்கிழமை) நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, மிஷ்கின் , பிருந்தா சாரதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கவிஞர்கள் ஜெய பாஸ்கரன், மு. முருகேஷ், பதிப்பாளர் மு. வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பரிசாக ரூபாய் 25000, இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000, மூன்றாவது பரிசாக ரூபாய் பத்தாயிரம், பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் 50 கவிதைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் என ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 53 கவிதைகளையும் தொகுத்து நூலாகவும் வெளியிடப்பட்டது. நூலை இயக்குனர் மிஷ்கின் வெளியிட பேராசிரியை பர்வீன் சுல்தானா பெற்றுக்கொண்டார். முதல் பரிசு கவித...
இயக்குனர்/கவிஞர் சீனு ராமாசாமிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு

இயக்குனர்/கவிஞர் சீனு ராமாசாமிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு

இலக்கியம்
'இதயத்தை அசைத்தன' சீனு ராமாசாமிக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு இயக்குனர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய 'மாசி வீதியின் கல் சந்துகள்' என்ற அவரது நான்காவது கவிதை தொகுப்பை டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டது அந்த நவீன தமிழ்க் கவிதைகளை படித்து கவிஞர் வைரமுத்து அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அன்புமிகு சீனு! ‘மாசி வீதியின் கல் சந்துகள்’ பார்த்தேன். ஈரமும் சாரமும் மிக்க கவிதைகள். கவனம் ஈர்த்தன; புருவம் உயர்த்தின. சான்றாக, 'மணல் திருடனுக்கும் அஸ்தி கரைக்கத் தேவைப்படுகிறது நதி' 'ஏழையின் உடலை அவன் உறுப்புகள் கைவிடுதல் துயரம்' போன்றவை இதயத்தை அசைத்தன. தொகுப்பில் செம்மையை நோக்கிய நகர்வு தெரிகிறது. கலைத்துறை கவிதைத்துறை இரண்டிலும் உச்சம் தொடும் அசுரத்தனம் தெரிகிறது. வாழ்த்துக்கள். -வைரமுத்து...
இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின் கல்சந்துகள்.

இயக்குனர் / கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை நூல் மாசி வீதியின் கல்சந்துகள்.

இலக்கியம்
                                                                                                                                 மாசி வீதியின் கல்சந்துகள் #மாசி_வீதியின்_கல்_சந்துகள் என்ற இத்தொகுப்பினைக் குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இப்படிச் சொல்கிறார். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது.பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே. வெளியீடு : டிஸ்...
மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு #வைரமுத்து சமீபத்தில் எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்குகிறது.

மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு #வைரமுத்து சமீபத்தில் எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்குகிறது.

இலக்கியம்
மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு #வைரமுத்து சமீபத்தில் எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ வழங்குகிறது. இவ்விழா நாளை மலேசியாவில் தான்ஶ்ரீ டாக்டர் எஸ் .ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் முன்னிலையில் வழங்கப்படுகிறது. இந்த விருதினைப் பெற்றுக் கொள்ள இன்று மாலை மலேசியா வந்தடைந்தார் கவிப்பேரரசு வைரமுத்து மலேசியா வந்தடைந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு ‘டத்தோ’ ஶ்ரீ எம் சரவணன் அவர்கள் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் ஹோட்டல் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது....
கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன

இலக்கியம்
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூல் ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து இவ்விருதை வழங்குகின்றன. முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் மகா கவிதை. ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது. நிலம் - நீர் - தீ - வளி - வெளி என்ற ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு - சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெருங்கவிதை நூல் மகா கவிதை. அது சிறந்த தமிழ் நூலுக்கான ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது என்று மலேசிய இந்தியக் காங்கிரஸின் தேசியத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சென்னையில் அறிவித்தார். மலேசியப் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்களும், தேர்ந்த திறனாய்வாள...
கவிதைகளுக்கு இசை அமைக்கும் சின்னஞ்சிறு பாடல்கள்-கபிலன்வைரமுத்து பாலமுரளிபாலு மற்றும் இசைக் கலைஞர்களின் உருவாக்கம்

கவிதைகளுக்கு இசை அமைக்கும் சின்னஞ்சிறு பாடல்கள்-கபிலன்வைரமுத்து பாலமுரளிபாலு மற்றும் இசைக் கலைஞர்களின் உருவாக்கம்

இலக்கியம்
எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து, இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இணைந்து சின்னஞ்சிறு பாடல்கள் என்ற இசை ஆல்பம் ஒன்றைத் தயாரித்திருக்கிறார்கள். கபிலன்வைரமுத்து எழுதிய கடவுளோடு பேச்சுவார்த்தை, மனிதனுக்கு அடுத்தவன், மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை போன்ற பல்வேறு கவிதை நூல்களில் இருந்து ஐந்து கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை மூன்று நிமிடங்களுக்கு மிகாத சிறிய பாடல்களாக வடிவமைத்திருக்கிறார்கள். ‘அணுவைத் துளைத்து ஏழ்கடல் புகுத்துவது மாதிரி சிறிய பாடல்களுக்குள் ஆழ்மன உணர்வுகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான் எண்ணம்’ என்று இசை ஆல்பத்தின் அறிமுகக் காணொளியில் கபிலன்வைரமுத்து கூறியிருக்கிறார். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக விரும்பும் இளைஞர்கள் தங்கள் மாதிரி படப்பிடிப்புக்கு (show reels for profile purpose only) இந்த பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கபிலன்வைரமுத்து அனுமதி வழங்கியிருக்கிற...
வைகை நதிக்கரையில் இயங்கும் ஒரு பள்ளி உலக சிந்தனையை சிந்தித்து உலகத்தின் மொத்தத்திற்கும் தமிழை கொண்டு சேர்த்திருக்கிறது-கவிப்பேரரசு வைரமுத்து

வைகை நதிக்கரையில் இயங்கும் ஒரு பள்ளி உலக சிந்தனையை சிந்தித்து உலகத்தின் மொத்தத்திற்கும் தமிழை கொண்டு சேர்த்திருக்கிறது-கவிப்பேரரசு வைரமுத்து

இலக்கியம்
இந்தியா வல்லரசு ஆவதற்கான சூட்சுமங்களை பகிர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து-குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் யுனிசெஃப் பாராட்டு பெற்றது குறித்த நிகழ்ச்சியில் ருசிகரம் மதுரையில் வெற்றிகரமாக இயங்கி வரும் குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களின் தமிழ் கீதம் (வேர்ல்ட் ஸ்டூடென்ட் ஆந்தம்) மும்பையில் நடைபெற்ற யுனிசெஃப் (ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான அமைப்பு) உலகளாவிய குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களில் பாராட்டுப் பெற்றுள்ளது. இதைக் கொண்டாடும் வகையிலும் பாடலின் குழுவினரான கவிஞர் திரு. மதன் கார்க்கி, இசையமைப்பாளர் திரு. அனில் சீனிவாசன், பாடல் தயாரிப்பாளரும் பள்ளியின் நிர்வாக இயக்குநருமான திரு. அபிநாத் சந்திரன் உள்ளிட்டோர் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் சென்னையில் ஜனவரி 3 புதன்கிழமை அன்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த கவி...
கம்போடியா உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் நடிகர் விஜய் விஷ்வா !

கம்போடியா உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் நடிகர் விஜய் விஷ்வா !

இலக்கியம், சினிமா
நடிகர் விஜய் விஸ்வாக்கு ஒளிரும் நட்சத்திரம் கம்போடிய அரசு விருது வழங்கியது ! கம்போடியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் 2000 ஆண்டுகாலப் பாரம்பரியத் தொடர்பு உண்டு.வாணிபத் தொடர்பு வழியாகச் சென்று கலந்த தமிழர்களின் நாகரிகம் பண்பாடு போன்றவற்றின் தாக்கம் கம்போடியாவில் இன்றும் உண்டு.அங்கும் தமிழர்கள் வசிக்கிறார்கள்; தமிழ்க் கலைகளைக் கொண்டாடுகிறார்கள்.அதன் ஓர் அம்சமாக கம்போடியாவின் சியம் ரீப் நகரில் இரண்டாம் உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாடு நடைபெற்றது. நவம்பர் 21 முதல் 26 வரை நடைபெற்ற மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் கலந்து கொண்டார்கள்.ஜெர்மன் ஹம் நகரில் உள்ள காமாட்சி அம்மன் தலைமை ஆதீனம் சிவ ஸ்ரீ பாஸ்கர குருக்கள்,ஆஸ்திரேலிய எழுச்சிக் கவிஞரும் சிறை அதிகாரியுமான ரவிச்சந்திரன்,ஆசிரியையும் வானொலி ஒலிபரப்பாளருமான சாரதா ரவிச்சந்திரன்,சமூக செயற்பாட்டாளர் நாவ...