Wednesday, October 9

‘காட்டேரி’ திரைவிமர்சனம்

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் ‘காட்டேரி’ திரைப்படத்தில் நாயகன் வைபவ் தன்னுடைய நண்பர்கள் மற்றும் மனைவியுடன் சென்று நண்பன் ஒருவனை தேடி செல்லுகிறார்கள் இதன் மூலம் தங்கப்புதையலையும் அடைய நினைக்கிறார்கள்,அவர்கள் செல்லும் ஒரு கிராமத்தில் பல அமானுஷ்ய திருப்பங்கள் நடக்கிறது .கடைசியில் வைபவும், அவரது நண்பர்கள் மற்றும் மனைவியும் அந்த கிராமத்திலிருந்து தப்பித்தார்களா ? அந்த புதையல் கிடைத்ததா? இல்லையா ? என்னும் வினாக்களுக்கு திரையில் விடை சொல்லும் வகையில் படத்தின் கதை செல்லுகிறது .

 

பொதுவாக இது போன்ற திகில் காமெடிபடங்களுக்கு தேவையான அளவில் வைபவ் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.மற்றும் வைபவின் மனைவியாக நடித்து இருக்கும் சோனம் பஜ்வா மற்றும் ஆத்மிகா இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் தங்கள் பங்களிப்பை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் இந்த படத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் அழகான பேயாக வரும் வரலட்சுமியின் நடிப்பும் நிறைவாக உள்ளது மேலும் கருணாகரன், ரவி மரியா,ஜான் விஜய் , குட்டி கோபி என நட்சத்திர பட்டாளமே படம் முழுக்க நிறைந்துள்ளார்கள்

இதற்க்கு முன் யாமிருக்க பயமேன் என்ற படத்தை இயக்கியிருந்த இயக்குனர் டிகே இப்போது இந்த காட்டேரியை காமெடியுடன் கூடிய திகில் திரில்லர் பாணி படமாக இயக்கியுள்ளார் ,திரில்லர் பேய் கதைகளுக்கு பெரிதும் துணை நிற்பது ஒளிப்பதிவும் இசை மற்றும் படத்தொகுப்பும் ஆகும், அந்த வகையில் இந்த படத்திருக்கும் எஸ்.என். பிரசாத்தின் இசையும், விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவும், பிரவினின் படத்தொகுப்பும் இயக்குனருக்கு பெரிதும் பக்கபலமாய் நின்றுள்ளன.

 

பொதுவாக பேய்க்கதை பார்க்க வரும் ஆடியன்ஸ், லாஜிக் இல்லாத மாஜிக் காமெடியை பார்த்து ரசிக்கவே தியேட்டருக்கு வருவார்கள், அவர்களுக்கு இந்த காட்டேரியை கண்டிப்பாக பிடிக்கும் ,

Spread the love