Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில், அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இத்திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சக்தி என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரராக அதர்வா நடித்திருக்கும் இப்படத்தில் அவரின் கபடி அணியை வெல்ல பல வருடங்களாய் எதிரணி ஒன்று முயற்சிக்கிறது .அந்த அணியில் இருப்பவர் கண்ணா ரவி இவரின் அம்மாவான ராதிகா, ஊருக்கே பெரிய தாதாவாக இருப்பவர், கதையின் ஊடே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தை ஒன்றின் மீது அன்பு வைத்துள்ளார் அதர்வா ,,கதையோட்டத்தில் மோதல் ,சண்டை, அதர்வா கைதாகும் சூழ்நிலை என கதை நகர, ஒருகட்டத்தில் அதர்வாவுக்கு உதவி செய்து நண்பராகிறார் கண்ணா ரவி, இவர்களது நட்பை விரும்பாத எதிர் அணியினர் சூழ்ச்சியால் கொலை செய்யப்பட்டுகிறார் கண்ணா ரவி. இதற்க்குப்பின் ராதிகா மற்றும் அதர்வாவின் நிலைப்பாடுகள் என்ன? கதையின் இறுதி ஆட்டத்தில் அதர்வா வென்றாரா ? என்பதே மீதி கதை.
கிராமத்து கதை நாயகனுக்குரிய உடல்மொழியுடன் யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார் அதர்வா … வெண்ணிலா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர்.தன்னுடைய காட்சிகளில் குறைவின்றி நடித்துள்ளார் .
காந்திமதி எனும் கதாபாத்திரத்தில் ராதிகா பாசமாவாகவும், கெத்தான தாதாவாகவும் சிறப்பாக நடித்துள்ளார், ராதாரவி குறைவான காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனதில் நிறைகிறார், மற்றும் கண்ணா ரவி , வாட்சன் சக்கரவர்த்தி, பேபி திவ்யதர்ஷினி இவர்களின் நடிப்பும் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது .
8 தோட்டாக்கள் திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ், ஆக்ஷன் , செண்டிமெண்ட், எமோஷன் கலந்த திரைப்படமாக இந்த குருதி ஆட்டத்தை உருவாக்கியுள்ளார், இவரது முதல் படம் தந்த எதிர்பார்ப்பு, இந்த பட த்திற்க்கு நிறையவே இருந்தது,தொடரும் படங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இவர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கலாம். யுவனின் இசையில் ஏ… ரங்கராட்டினம் போலே உன்னை வட்டம் போடுதே காலு… என்னும் பாடல் யுகபாரதி வரியில் அந்தோணிதாசன் குரலில் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் உள்ளது .
குருதி ஆட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் வெல்லும்