
‘ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.
தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வான 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார், கமல்ஹாசன் பங்கேற்கிறார்
முன்னணி தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI), சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ள 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.
தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி பிப்ரவரி 21-22 தேதிகளில் சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. துவக்க விழாவில் துணை முதல்வருடன் இந்நிகழ்வின் (MEBC)...