
ZEE5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !!
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான "செருப்புகள் ஜாக்கிரதை" சீரிஸை வெளியிட்டுள்ளது.
S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்
ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசியதாவது...
கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, அந்த சீரிஸுக்கு நீ...