Thursday, April 16

தடயம்- இணைய தொடர் விமர்சனம்

தொடர் கொலைகளை துப்பறியும் க்ரைம் திரில்லர் விறுவிறுப்பான தொடர் -தடயம்-


அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தோட எல்லை பகுதியில இருக்கும் தமிழக கிராமம் பகுதியில் 1999 வருடத்துல ,தொடர்ச்சியாக கொலைகள் நடந்துகிட்டு இருக்கு ,இதைப்பற்றி சமுத்திரகனி புலன் விசாரணையில் ஈடுபட்டு சில தடயங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார், இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதேபோல இன்னொரு தம்பதியும் கொலை செய்யப்படறாங்க, இந்த கொலை தொடர்களை விசாரிக்கிறதுக்கு இன்ஸ்பெக்டர் ஷிவதாவோட தலைமையில ஒரு குழு அமைக்கிறாங்க அந்தக் குழுவில் சமுத்திரகனிய சேர்த்துக்க கூடாது அப்படின்னு உயர் அதிகாரிகள் சொன்னாலும் இன்ஸ்பெக்டர் ஷிவதா, சமுத்திரகனியே தன்னோட குழுவுல சேர்த்துக்கிட்டு தொடர்ந்து அந்த கொலை வழக்குகளை புலனாய்வு செய்கிறப்ப ,அவங்க இந்த கொலைகளை மட்டும் இல்ல 60க்கும் மேற்பட்ட கொலை செய்து இருக்காங்க அப்படிங்கிற உண்மையும் தெரிய வருது ,எதற்காக இந்த கொலைகள் செய்யப்பட்டது அப்படிங்கிறத கண்டுபிடிக்கிறது தான் இந்த தொடரோட மீதி முழு கதை.

கதையின் நாயகனா சமுத்திரகனி நடிச்சிருக்காரு, இது போன்ற கதாபாத்திரங்களில நடிக்ககிறது அவருடைய உடல் மொழிக்கும், தோற்றத்திற்கும் 100% பொருந்தக் கூடியது. அந்த வகையில் இந்த இணைய தொடரிலும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்து, தன்னுடைய அதியமான் எஸ் .ஐ கதாபாத்திரத்திற்கு மேலும் மெருகு சேர்த்து இருக்காரு சமுத்திரக்கனி .அவருக்கு அடுத்தபடியாக லட்சுமி என்னும் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிற ஷிவதாவும் தன்னுடைய பங்குக்கு,தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு தக்க வகையில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்காங்க. மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் ராஜ் அவரது தம்பியாக நடித்திருக்க கூடிய பிரேம், காவல்துறை உயர் அதிகாறியாக நடித்திருக்கக்கூடிய மூணாறு ரமேஷ் ,மற்றும் புலிப்பாண்டி,கார்த்தி, சுவர்ணா, தயாளன் என பிற கதாபாத்திரங்களில் நடித்து இருக்கக்கூடியவர்களும் அவரவர் தாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குறைவில்லாத நடிப்பை நிறைவாக தொடர் முழுவதும் கொடுத்து இருக்கிறாங்க .

க்ரைம் திரில்லர் ஜானலில் பயணிக்கும் தொடர்களுக்கு, ஒளிப்பதிவும் இசையும் இரு கண்களாக செயல்பட்டால் அது தொடருக்கு தேவையான வேகத்தையும் விறுவிறுப்பையும் ரசிகர்களுக்கு நிச்சயம் கொடுக்கும் .அந்த வகையில் ஒளிப்பதிவாளர் கே கே யின் காட்சிப்படுத்தலும், விபின் பாஸ்கரின் பின்னணி இசையும் ,கதை ஓட்டத்திற்கு மிகவும் உறுதுணையான பங்களிப்பை கொடுத்துள்ளது.

இந்த இணைய தொடர்ல இரண்டாவது எபிசோடுலேயே கொலை செய்து யார் ?அப்படிங்கறத வெளிப்படுத்திட்டு ,அந்த கொலைக்கான முக்கிய காரணங்கள் என்ன? அப்படிங்கறது பத்தி அடுத்து வரும் தொடர்களில சொல்லி இருக்காரு இந்த இணைய தொடரை இயக்கியிருக்கும் நவீன்குமார் பழனிவேல். அது மட்டுமில்லாம ,ஒவ்வொரு அத்தியாயத்திலும் ரசிகர்களின் மனதில் எதிர்பார்ப்புகளை உருவாக்கி, அதற்கு ஈடு செய்யும் வகையில் தொடரின் காட்சிகளை படமாக்கி உள்ளார்.

மொத்தத்தில் இந்த தடயம் இணையத் தொடர் வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த சிறப்பான பொழுதுபோக்கு தொடர்.

Spread the love