லிங்கம்- வெப் சீரிஸ்-ன் பத்திரிகையாளர் சந்திப்பு
லிங்கம் தொடரில் கதிர் கண்களாலேயே மிரட்டியிருக்கிறார் - இயக்குனர் லட்சுமி சரவணன் என்னைப் போலவே என் மீது லட்சுமி சார் நம்பிக்கை வைத்திருந்தார் - நடிகர் கதிர்
விகடன் மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் தயாரிப்பில் லட்சுமி சரவணன் இயக்கத்தில், டோனி பிரிட்டோ இசையில், கதிர், திவ்யா, பூர்ணிமா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் லிங்கம் வெப் சீரிஸ்-ன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது:
விகடன் ராதா பேசும்போது,
தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு படைப்பு எப்போது முழுமையடையும் தெரியுமா? அந்த படைப்பு வெளியாகி வெற்றி பெறும் போது தான் என்றார்.
இசையமைப்பாளர் டோனி பேசும்போது,
இந்த சீரியஸுக்கு நான் வந்தது மேஜிக் தான். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பாடல்கள் கொடுத்திருக்கிறேன். இந்த சீரியஸ் எனக்கு சவாலாக தான் இருந்தது.
இத...









