Wednesday, April 15

காக்கி சர்க்கஸ்’- இணையத் தொடர் விமர்சனம்

நகைச்சுவையும் ,திரில்லிங்கும் கலந்த புதுமையான கதைக்களத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் காக்கி சர்க்கஸ்.

முனீஸ் காந்த் சிறையில் ஜெயலராக இருக்கிறார். அவருடன் சுபாஷ் செல்வம் காவலராக பணிபுரிந்து வருகிறார், முனீஸ் காந்த் நூகம் ஒன்றை சிறைச்சாலையில் உருவாக்கிக் கொண்டு ,அங்கு வரும் சிறை கைதிகளிடம் தனது புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்கிறார் .அதுமட்டுமின்றி குற்றவாளிகளின் குற்ற செயல்களுக்கு சரியான தீர்வுகளையும் புத்தகங்களின் வாயிலாகவே தேடி கண்டுபிடிக்கும் முயற்சிகளிலும் அவர் ஈடுபடுகிறார் ,அந்த சிறைச்சாலைக்குள் இருக்கும் ஒரு கோயிலின் உண்டியலில் இருந்து பணம் களவாடப்பட்டு விடுகிறது .உண்டியல் பணத்தை களவாடிய குற்றவாளி யார் ?என்பதை கண்டுபிடிக்க அங்குள்ள காவல் அதிகாரிகள் முயற்சி ஈடுபடுகிறார்கள். இதன்பின் என்ன நடந்தது ?குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டானா ? இல்லையா? இது போன்ற கேள்விகளுக்கு விடையினை சொல்கிறது இணைய தொடரின் மீதிக்கதை .

றைச்சாலையில் கண்காணிப்பாளராக ,கதையின் நாயகர்களில் ஒருவராக முனிஷ்காந்த் சிறப்பாக நடித்துள்ளார். படத்திற்கு படம் தன்னுடைய நடிப்பில் மெருகேற்றிக் கொண்டிருக்கும் முனிஷ்காந்த் அவர்களுக்கு ,இந்தப் படத்தின் கதாபாத்திரமும் ,அதனை அவர் சிறப்பாக கையாண்டு வெளிப்படுத்தி இருக்கும் விதமும் பாராட்டக்கூடியது .அதேபோல மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய சுபாஷ் செல்வம் தானும் தன் பங்குக்கு குறைவில்லாத நடிப்பை கொடுத்து, படத்தின் காட்சிகளுக்கு தேவையான பங்களிப்பை கொடுத்துள்ளார். மற்றும் திருடன் கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய ராஜேஷ் மாதவனின் நிறைவான நடிப்பையும் இந்த படத்தில் பார்க்கலாம், மேலும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் கௌதமி மற்றும் சாவித்திரி,, மருது பாண்டியன் விக்னேஸ்வர் போன்ற பிற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும்,அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

தொடர் முழுமைக்கும் சிறப்பான ஒளிப்பதிவினை கொடுத்திருக்கக் கூடிய நீரஜ் ரவி மற்றும் காட்சிகளுக்கு தேவையான பின்புலத்தை சரியான விகிதத்தில் கொடுத்து, ரசிகர்களை தொடரோடு பயணிக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர்  விபின் பாஸ்கர், தொடரின் வேகத்திற்கும், விறுவிறுப்புக்கு பக்க பலமாக உழைத்திருக்கக்கூடிய படத்தொகுப்பாளர் அர்ஜுன் பாபு இம்மூவரின் பணியும் இயக்குனருக்கு பக்கபலமாக அமைந்திருந்தது .சமீப காலங்களில் அதிகரித்து வரும் இணைய தொடர்களின் வரவினால் சின்னத்திரையிலும், வெள்ளி திரையிலும் சொல்ல முடியாத, பார்க்க முடியாத பல கதைக்களங்களில் தொடர்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் வித்தியாசமான கதை களத்தோடு இந்தத் தொடரை இயக்கி இருக்கும் இயக்குனர் அமீன் பாரிஃப், தொடரின் அனைத்து அத்தியாயங்களையும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் வகையில் தொய்வின்றி கதை நகரும் வண்ணம் சிறப்பாக படமாக்கி உள்ளார் .

மொத்தத்தில் ’காக்கி சர்க்கஸ்’ ரசிகர்களுக்கு விறுவிறுப்பான பொழுது போக்கை தரக்கூடிய சிறப்பான தொடர்.

Spread the love