ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் ‘போலீஸ் போலீஸ்’ ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!
ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!
தற்போது வெளியாகி இருக்கும் புது புரோமோ வெளியீட்டு தேதியை அறிவிப்பதோடு, வழக்கறிஞர் லலிதாம்பிகா கதாபாத்திரத்தில் ஷபானா ஷாஜகானையும் அறிமுகப்படுத்துகிறது!
சென்னை, ஆகஸ்ட் 29, 2025: ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற இதன் முதல் புரோமோவில் மிர்ச்சி செந்தில் (ராஜா) மற்றும் ஜெயசீலன் தங்கவேல் (முரளி) இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது இடம் பெற்றிருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் ஷபானா ஷாஜகான் நேர்மையான வழக்கறிஞர் லலிதாம்பிகா கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
கலகலப்பான இ...









