தடயம்- இணைய தொடர் விமர்சனம்
தொடர் கொலைகளை துப்பறியும் க்ரைம் திரில்லர் விறுவிறுப்பான தொடர் -தடயம்-
அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தோட எல்லை பகுதியில இருக்கும் தமிழக கிராமம் பகுதியில் 1999 வருடத்துல ,தொடர்ச்சியாக கொலைகள் நடந்துகிட்டு இருக்கு ,இதைப்பற்றி சமுத்திரகனி புலன் விசாரணையில் ஈடுபட்டு சில தடயங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார், இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதேபோல இன்னொரு தம்பதியும் கொலை செய்யப்படறாங்க, இந்த கொலை தொடர்களை விசாரிக்கிறதுக்கு இன்ஸ்பெக்டர் ஷிவதாவோட தலைமையில ஒரு குழு அமைக்கிறாங்க அந்தக் குழுவில் சமுத்திரகனிய சேர்த்துக்க கூடாது அப்படின்னு உயர் அதிகாரிகள் சொன்னாலும் இன்ஸ்பெக்டர் ஷிவதா, சமுத்திரகனியே தன்னோட குழுவுல சேர்த்துக்கிட்டு தொடர்ந்து அந்த கொலை வழக்குகளை புலனாய்வு செய்கிறப்ப ,அவங்க இந்த கொலைகளை மட்டும் இல்ல 60க்கும் மேற்பட்ட கொலை செய்து இருக்காங்க அப்படிங்கிற உண்மையும் தெரிய வருது ,எதற்காக இந்த ...









