மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் புரோமோ தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது!
தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வெப் சீரிஸ் 'ஹார்ட் பீட்'. இதன் இரண்டாவது சீசன் புரோமோ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். பல எமோஷனலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் 'ஹார்ட் பீட்'டுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. வரவிருக்கும் இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தர இருக்கிறது.ஆர்கே மருத்துவமனையில் மூத்த மருத்துவராக ரீனா 2.0 இருக்கும்படியாக இந்த புரோமோ தொடங்குகிறது. தனது புதிய அணியை மிகவும் கட்டுபாடுடனும் அமைதியாகவும் வழிநடத்துகிறார். ஆனால், இந்த மருத்துவர் உலகத்திற்கு அப்பால் ரீ...








