Monday, June 1

சினிமா

அதிகரிக்கும் திரையரங்குகள் .. மகிழ்ச்சியில் சாயம் படக்குழு ..!

அதிகரிக்கும் திரையரங்குகள் .. மகிழ்ச்சியில் சாயம் படக்குழு ..!

சினிமா
சாயம் திரைப்படம் கடந்த பிப்ரவரி 4 அன்று தமிழகமெங்கும் 90 திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே தென் மாவட்டங்களில் இருந்து இயக்குனருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தது. அத்தனை எதிர்ப்புகளையும் மீறி பல திரையரங்குகளில் படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது சாயம் திரைப்படம். தென்மாவட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் படத்தில் காட்சிகள் இருப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இதனால் பல தியேட்டர்களில் காட்சிககள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் ரிலீஸ் அன்று திரையிடப்படாத பல தென் மாவட்ட தியேட்டர்கள் கடந்த திங்கள் முதல் படத்தை திரையிட துவங்கியுள்ளனர். படத்தின் வெற்றியை உணர்ந்த மதுரை சண்முகா (மாப்பிள்ளை விநாயகர் ), வத்தலகுண்டு சீனியப்பா, திருநெல்வேலி, சுரண்டல் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் ஒரு தியேட்டர் என தியேட்டர் உரி...
இருமொழிகளிலும் இதயம் கவரும்  அழகான படைப்பு  “நித்தம் ஒரு வானம்”

இருமொழிகளிலும் இதயம் கவரும் அழகான படைப்பு “நித்தம் ஒரு வானம்”

சினிமா
Viacom18 studios மற்றும் Rise East Entertainment நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” ! பாலிவுட்டில் பிரமாண்ட படங்களை தந்து மிகப்பெரும் நிறுவனமாக உலகெங்கும் புகழ்பெற்றிருக்கும் Viacom18 studios, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றிக்கு பிறகு தென்னிந்தியாவில் நேரடியாக தயாரிக்கும் திரைப்படத்திற்கு “நித்தம் ஒரு வானம்” என தமிழிலும் “ஆகாஷம்”என தெலுங்கிலும் தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழில் தரமான படங்களை வழங்கி வரும் Rise East Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் Ra.கார்த்திக் இயக்கியுள்ளார். “நித்தம் ஒரு வானம்” நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமாக உருவாகி வருகிறது. அசோக் செல்வன் நாயகனாக...
அருள்மிகு அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

அருள்மிகு அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

சினிமா
  படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண்விஜய். நடிகர் அருண் விஜய் ,தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் 'பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார். இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். நேற்று முன் தினம் இரவு (05/02/2022) ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார்....
என்னை அறிந்தால்’ படத்தின் 7ஆம் ஆண்டினை இயக்குனருடன் கொண்டாடிய அருண் விஜய்

என்னை அறிந்தால்’ படத்தின் 7ஆம் ஆண்டினை இயக்குனருடன் கொண்டாடிய அருண் விஜய்

சினிமா
அஜித்குமார் - அனுஷ்கா - த்ரிஷா நடிப்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு வெளியான ‘என்னை அறிந்தால்’திரைப்படத்தை கவுதம் மேனன் திறம்பட இயக்கியிருந்தார் இந்தப் படத்தில் அருண் விஜய், விக்டர்மனோகரன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி ,தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ,ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றிருந்தார், தற்போது இந்தத் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி என்னை அறிந்தால் படத்தின் இயக்குநரான கவுதம் மேனனை நடிகர் அருண் விஜய் சந்தித்திருக்கிறார். மகிழ்வான இந்த சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி பரவி வருகிறது.ஆண்டுகள் 7 ஆனால் என்ன? என்றைக்கும் ரசிகர்களுக்கும் அதில் பணிபுரிந்த கலைஞர்களுக்கும் என்னை அறிந்தால் படம் என்றும் மறக்கமுடியாத படம்தானே!...
யாரோ – விமர்சனம்

யாரோ – விமர்சனம்

சினிமா
யாரோ - விமர்சனம் ஊருக்கு வெளியே தனியாக இருப்பவர்களை கொலை செய்துவரும் சீரியல் கில்லர் செய்தியை கேட்கிறார் ஹீரோ . அது போலவே சில சம்பவங்களும் நடக்கிறது. எங்கே தனக்கும் அப்படித்தான் நடக்குமோ என்று ஒரு பக்கம் பயம். இன்னொரு பக்கம் வேலை செய்கிறார் . நம்மையும் அதே பதட்டத்திற்குள்ளாக்கி முதல் பகுதி முடிவடைகிறது . இரண்டாம் பகுதி அப்படியே கதையும் , திரைக்கதையும் தலைகீழாக மாறுகிறது . அந்த சைக்கோ கில்லர் வேறுயாரும் இல்ல ஹீரோ தான். ஏன் ?, எதனால் ? என்று இரண்டாம் பகுதியில் சொல்கிறார்கள் . குறைவான கதாப்பாத்திரங்கள் கொண்டு , குறைந்த நேர அளவுக்குள் , விறுவிறுப்பாக எடுத்து இருக்கிறார் இயக்குனர்.படத்தின் ஹீரோ வெங்கட் ரெட்டி மொத்த பளுவையும் சுமந்து செல்கிறார். பல கெட்டப்பில் வருவது பொருந்தியிருக்கு .மற்ற கதாபாத்திரங்கள் வழக்கம் போலத்தான் .ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் படத்திற்கு பலம் .பாடல்,சண்டை,கா...
‘கணம்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமை! – நடிகை அமலா

‘கணம்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்தப் பெருமை! – நடிகை அமலா

சினிமா
ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘கணம்’. இந்தப் படத்திலிருந்து சமீபத்தில் அம்மா பாடல் வெளியிடப்பட்டது. இதற்கு இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அதன் பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார். அம்மா பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அமலா அக்கினேனி. ‘கணம்’ படத்தில் சர்வானந்திற்கு அம்மாவாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் அமலா நடித்துள்ளார். தற்போது கிடைத்துள்ள இந்த வரவேற்பு தொடர்பாக அமலா கூறியிருப்பதாவது: “மகனுக்கும், அம்மாவுக்கும் இடையிலான அன்பு என்றும் அழியாது என்பதைச் சொல்வதற்காகவே அம்மா பாடல் உருவாக்கப்பட்டது. ஜேக்ஸ் பிஜாயும், பாடகர் சித் ஸ்ரீராமும் உண்மையிலேயே ஒரு மாயாஜாலத்தைச் செய்துள்ளனர். முதல் முறை அந்தப் பாடலைக் கேட்ட போது இதமாக, மென்மைய...
“அஷ்டகர்மா” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

“அஷ்டகர்மா” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

சினிமா
  மிஷ்ரி என்டெர்ப்ரைசெஸ் சார்பில் C.S.பதம்சந்த், C.அரிஹந்த் ராஜ் C.S.கிஷன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் “அஷ்டகர்மா”.  ஹாரர் ஜானரில், மாயங்கள் மிகுந்த சைக்கலாஜிகல் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் நடித்துள்ளனர்.  கிஷன் நாயகனாக நடித்துள்ளார். நந்தினி ராய், ஷ்ரதா நாயகிகளாக நடித்துள்ளனர். விஜய் தமிழ்செல்வன் இயக்கியுள்ளார். உலகமெங்கும் 2022 பிப்ரவரி 11 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.  இந்நிலையில் படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர்   A.M.A.மாலிக் பிரபலங்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவினில்… இசையமைப்பாளர் L.V.முத்து பேசியதாவது… இந்த வாய்ப்பு  தந்த கிஷன் அவர்களுக்கு நன்றி. எங்கள் இசையில் ...
FIR எஃப் ஐ ஆர் திரைப்பட டிரைலர் வெளியீடு

FIR எஃப் ஐ ஆர் திரைப்பட டிரைலர் வெளியீடு

சினிமா
  விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் திரைப்படம் “எஃப் ஐ ஆர் (FIR)”, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பரபரப்பான கமர்ஷியல்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் இப்படத்தின் டிரைலரை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.   இந்நிகழ்வில் இயக்குனர் மனு ஆனந்த் பேசியதாவது… 2006 ல...
முதன் முறையாக தன்ஷிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் ” மனோகரி ” படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று துவங்கியது.

முதன் முறையாக தன்ஷிகா இரட்டை வேடங்களில் நடிக்கும் ” மனோகரி ” படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று துவங்கியது.

சினிமா
மகேஷ்வரன் நந்தகோபால் தனது சூர்யா பிலிம் புரொடக்ஸன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், அஜி ஜான், I.M.விஜயன் ஆகியோரது நடிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் " சிட்தி " படத்தை தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் திரையரங்கிற்கு வரவிருக்கிறது " சிட்தி " இதை தொடர்ந்து தற்போது தன்ஷிகா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் " மனோகரி " என்ற படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார். முக்கிய வேடத்தில் கவிஞர் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, ஆதித்யா கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன், குடந்தை முத்து இவர்களுடன் பிரபலமான கராதே மணியின் மகனான ராஜ்குமார் பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்திக்கிறார் அவர் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். ஆண்டி இந்தியன் ஜெயராஜ் ,தியேட்டர் ஆர்டிஸ்ட் ஜெகதீஸ்வரன், ஜாஹீர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதி...
தெலுங்கு ரசிகர்களுடன் “வீரமே வாகை சூடும்” திரைப்பட வெளியீட்டை கொண்டாடும் விஷால் !

தெலுங்கு ரசிகர்களுடன் “வீரமே வாகை சூடும்” திரைப்பட வெளியீட்டை கொண்டாடும் விஷால் !

சினிமா
விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக இன்று 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. இப்பட வெளியீட்டை தனது தெலுங்கு ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்து கொண்டாடவுள்ளார் நடிகர் விஷால். நடிகர் விஷால் பொதுவாக தனது அனைத்து பட வெளியீட்டுக்கும் தமிழகத்தில் தான் இருப்பார் இங்கு ரசிகர்களுடன் பத்திரிகை நண்பர்களுடனும் பிஸியாக பட வெளியீட்டை கொண்டாடுவார் ஆனால் இந்த முறை அவர் ஹைதராபாத்தில் அவரது அடுத்த படமான #லத்தி ஷீட்டிங்கில் பிஸியாக மாட்டிக்கொண்டார். 20 நாள்களாக “லத்தி” படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. பீட்டர் ஹெய்ன் பங்கேற்க, விஷால் பங்கேற்கும் சண்டைக்காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் நடிப்பில் வீரமே வ...