நடிகர் ஆர்யாவின் “கேப்டன்” படப்பிடிப்பு நிறைவடைந்தது !
‘டெடி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர் தயாரிப்பாளர் சக்தி சௌந்தர் ராஜனும், ‘கேப்டன்’ என்ற அதிரடி சயின்ஸ்பிக்சன் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை Think Studios நிறுவனம் நடிகர் ஆர்யாவின் The Show People உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் படப்பிடிப்பின் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்திருப்பதால், நடிகர் ஆர்யா நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
‘கேப்ட...









