Thursday, January 23

யாரோ – விமர்சனம்

யாரோ – விமர்சனம்

ஊருக்கு வெளியே தனியாக இருப்பவர்களை கொலை செய்துவரும் சீரியல் கில்லர் செய்தியை கேட்கிறார் ஹீரோ . அது போலவே சில சம்பவங்களும் நடக்கிறது. எங்கே தனக்கும் அப்படித்தான் நடக்குமோ என்று ஒரு பக்கம் பயம். இன்னொரு பக்கம் வேலை செய்கிறார் . நம்மையும் அதே பதட்டத்திற்குள்ளாக்கி முதல் பகுதி முடிவடைகிறது . இரண்டாம் பகுதி அப்படியே கதையும் , திரைக்கதையும் தலைகீழாக மாறுகிறது . அந்த சைக்கோ கில்லர் வேறுயாரும் இல்ல ஹீரோ தான். ஏன் ?, எதனால் ? என்று இரண்டாம் பகுதியில் சொல்கிறார்கள் .

குறைவான கதாப்பாத்திரங்கள் கொண்டு , குறைந்த நேர அளவுக்குள் , விறுவிறுப்பாக எடுத்து இருக்கிறார் இயக்குனர்.படத்தின் ஹீரோ வெங்கட் ரெட்டி மொத்த பளுவையும் சுமந்து செல்கிறார். பல கெட்டப்பில் வருவது பொருந்தியிருக்கு .மற்ற கதாபாத்திரங்கள் வழக்கம் போலத்தான் .ஒளிப்பதிவும் , பின்னணி இசையும் படத்திற்கு பலம் .பாடல்,சண்டை,காமெடி என இவைகள் ஏதுமில்லாமல் தன் முதல் முயற்சியாக எடுத்துருக்கிறார் இயக்குனர் .
பின் குறிப்பு : படம் பாக்குறப்போ போன் வருதேன்னு வெளியேபோய் 5 நிமிடம் பேசிட்டு வராதீங்க . ஏன் என்ன ஆச்சின்னு யாரோ ஒருவரிடம் கேட்டுத்தான் தெரிஞ்சிக்கணும் .

Spread the love