Sunday, May 31

சினிமா

தமிழர் திருநாளில் ‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு

தமிழர் திருநாளில் ‘மாயோன்’ படக்குழுவினர் வழங்கும் இசைப் பரிசு

சினிமா
தமிழ் திரையிசை ரசிகர்களிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயோனே..’ எனத் தொடங்கும் முதல் பாடலுக்கு பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், இந்த படத்தில் இடம்பெறும் 'சிங்கார மதன மோகனா..' எனத்தொடங்கும் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த ...
சூர்யாவின் ‘ஜெய் பீம்’  படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்தது.

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம் ஆஸ்காரின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் இடம்பிடித்தது.

சினிமா
சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார். 'சீன் அட் த அகாடெமி' என்ற பிரிவின் கீழ் இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ஆஸ்க...
பலரின்  பாராட்டுகளை  பெற்ற  அமேசான் ஒரிஜினல் தொடர் ‘புத்தம் புது காலை விடியாதா..’வின் இயக்குநர்களின் கருத்துக்கள்

பலரின் பாராட்டுகளை பெற்ற அமேசான் ஒரிஜினல் தொடர் ‘புத்தம் புது காலை விடியாதா..’வின் இயக்குநர்களின் கருத்துக்கள்

சினிமா, செய்திகள்
  'புத்தம் புது காலை' என்ற தமிழ் தொடர் வெளியான பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று 'புத்தம் புது காலை விடியாதா' என்ற அதன் இரண்டாம் பாகம் வெளியானது. இந்தத் தொடரை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வெற்றி அடைய செய்திருக்கிறார்கள். லாக்டவுன் சமயத்தில் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட அனுபவத்துடன் மிகவும் தொடர்புபடுத்தக் கூடியதாக படைப்புகள் இருந்ததால் பார்வையாளர்களுக்கு, கதைகளை காட்சிப்படுத்துவதில் இயக்குநர்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. எதிர்மறையான விளைவுகளை மட்டும் சிந்திக்காமல், லாக்டவுனை நேர்மறையான முறையில், அனைத்து கதைகளும் விவரிக்கிறது. சமீபத்தில் வெளியான தொகுப்புகளில் சிறந்ததாக புத்தம் புது காலை விடியாதா குறிப்பிட்டு பாராட்டப்படுவது தொடர்பாகவும், இயக்குநர்கள் கதைகள் மற்றும் அவற்றை படமாக்குவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் பேசுகிறார்கள். தலைசிறந்...
எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்கும் அஜய் பிரதீப்

எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்கும் அஜய் பிரதீப்

சினிமா, செய்திகள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளது. ‘ஜெனோவா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன் தான் அஜய் பிரதீப். இவரது தந்தையான கிருஷ்ணன் தமிழகத்தின் தலை சிறந்த புகைப்படக் கலைஞர்களின் ஒருவராவார். இவர் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர் ஆவார். பழம்பெரும் ஒளிப்பதிவாளரான கே எஸ் பிரசாத்தின் உதவியாளராக பணிபுரிந்துள்ள அஜய் பிரதீப், எண்ணற்ற விளம்பர படங்கள் மற்றும் அரசு மற்றும் இதர ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். ஸ்ரீநிதி அஜய் தயாரிக்கும் இப்படத்தை எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் வழங்குகின்றன. பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த அகில இந்திய படம் ஐந்து மொழிக...
மறந்துபோன உறவுகள மனசுல வரவழைக்கும்  கார்த்தி நடிக்கும் விருமன்

மறந்துபோன உறவுகள மனசுல வரவழைக்கும் கார்த்தி நடிக்கும் விருமன்

சினிமா
    நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிப்பான ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கிராமத்து நாயகனாக கார்த்தி நடிக்கும் “விருமன்” படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக்குழு உற்சாகமாக உள்ளது. இந்த படத்தில் கார்த்தி, அறிமுகம் அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைத்துள்ளார். கலை: ஜாக்கி, Pro: ஜான்சன், இணை தயாரிப்பு:ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன். படத்தின் இசை மற்றும் டிரெயலர் வெளியீடு குறித்த...
சுந்தர். சி நடிக்கும் புதிய படம்

சுந்தர். சி நடிக்கும் புதிய படம்

சினிமா
  24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் "ஒன் 2 ஒன்" எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்க்கு ஒளிப்பதிவு விக்ரம் மோகன், இசை சித்தார்த் விபின் .இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது...
வைகைப்புயல் வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

வைகைப்புயல் வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

சினிமா, செய்திகள்
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்துக்கொள்ள படக்குழுவினர் விரும்பினர். இதனை ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்த...
RB சௌத்திரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜன்  இயக்கத்தில், ஜீவா நடிக்கும்  “வரலாறு முக்கியம்”

RB சௌத்திரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்”

சினிமா, செய்திகள்
நடிகர் ஜீவா 'வரலாறு முக்கியம்' என்ற புதிய படம் மூலம் ரசிகர்கள் கூட்டத்தின் கவர இருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் RB சௌத்திரி தயாரிக்கிறார். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் NB (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (...