Thursday, December 5

அருள்மிகு அண்ணாமலையாரிடம் தரிசனம் பெற்ற நடிகர் அருண்விஜய்

 

படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண்விஜய்.

நடிகர் அருண் விஜய் ,தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் ‘பார்டர்’, ‘யானை’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார்.

இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என வேண்டிக் கொண்டதாகப் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

நேற்று முன் தினம் இரவு (05/02/2022) ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் கிரிவலம் மேற்கொண்டார்.

Spread the love