Saturday, May 30

‘பிளாஸ்ட்’-திரை விமர்சனம்

அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிப்பில் ஒரு குடும்பமே களமிறங்கும் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம்தான் ‘ப்ளாஸ்ட்’

கராத்தே மாஸ்டராக உள்ள அர்ஜுனின் மனைவி அபிராமி ,அவர்களின் மகள் பிரீத்தி .கராத்தே மாஸ்டரான அர்ஜுன், தனது மகள் ப்ரீத்தி முகுந்தனை தைரியமாகவும், நீதிக்காக குரல் கொடுப்பவளாகவும் வளர்க்கிறார். இந்நிலையில் பல கோடி மதிப்புள்ள சுரங்கத்தின் ஒப்பந்தத்தை எடுக்க கூடிய வில்லன் ஜான் கொக்கனிடம் மந்திரி லஞ்சம் கேட்க ,அதற்கான பணத்தை கொடுப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்படுகிறது ஆனால் அந்த பணம் அமைச்சரை சென்று சேராமல் போகிறது, இதில் அர்ஜுன் குடும்பமும் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறது அதன்பின் என்ன நடந்தது ?என்பதுதான் படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாக ராஜாராம் என்னும் கதாபாத்திரத்தில் , சில வருட இடைவேளைக்கு பிறகு ஆக்ஷன் கிங் ஆக அர்ஜுன் மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தன்னுடைய ஆக்ஷன் மற்றும் அனுபவ நடிப்பினை நிறைவான முறையில் வழங்கியுள்ளார் .அதே போல முதலில் குடும்பத்தை காப்பாற்ற அமைதியை வலியுறுத்தும் அம்மாவாகவும், பின்னர் சூழ்நிலை காரணமாக களத்தில் இறங்கும் போராளியாகவும் அபிராமி மிக சிறப்பாக ,அதிலும் குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் நன்றாக நடித்து திரை ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் .படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று ப்ரீத்தி முகுந்தன் ,இவர் சண்டைக்காட்சிகளில் காட்டும் வேகம், உடல் மொழி, தன்னம்பிக்கை அனைத்தும் பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் ஈர்க்கிறது. மேலும் ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் திறம்பட நடிப்பினை வெளிபடித்தியுள்ளார்கள்.

படத்தின் ஆக்‌ஷன்காட்சிகளை நேர்த்தியான முறையில், பல கோணங்கள் மற்றும் சீரிய ஒளிஅமைப்புகள் மூலமாக நன்கு பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன்.

ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தின் வேகத்திற்கு ஏற்ற விறுவிறுப்பினை கொடுத்துள்ளது .சண்டைப்பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவின் உழைப்பு பாராட்டகூடியது . குறிப்பாக பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் மிகவும் சிறப்பு. படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ.ராகவ், காட்சிகளின் வேகத்துக்கு பக்க பலமாக காட்சிகளை தொகுத்து ,இயக்குனரின் கதையோட்டத்துக்கு உறுதுணையாக பணியாற்றியுள்ளார்.

ஆக்‌ஷன், பரபரப்பு, குடும்ப பாசம் இவை யாவும் கலந்த விறுவிறுப்பான திரைக்கதையில் , இடைவிடாத ஆக்‌ஷன் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் மட்டுமின்றி அதோடு அனுபவ நடிகர்கள் மற்றும் இளம் கலைஞர்கள் என கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை படத்தில் பயன்படுத்தி உள்ளது போன்ற அனைத்து அம்சங்களும் ,இயக்குநர் சுபாஷ் கே.ராஜூக்கு பாராட்டினை பெற்று தரும் வகையில் உள்ளது.

மொத்தத்தில் இந்த ‘பிளாஸ்ட்’ஆக்‌ஷன் திரில்லர் திரை விருந்து.

Spread the love