Tuesday, October 20

சினிமா

*ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!*

*ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!*

சினிமா
*அசத்தலான போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோவுடன் ‘ராவடி’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!* பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அசத்தலான புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து (Gujilimasthu) வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. ‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் மற்றும் குஜிலிமஸ்து வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ ரசிகர்களின் கவனத்தை வருகிறது. ...
*மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு*

*மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு*

சினிமா, வெப் சீரிஸ்
*மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு* *ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள 7 எபிசோடுகள் கொண்ட Tamil Zee 5 Original தொடரில் அஷ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன் மற்றும் கலைவாணி பாஸ்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்* தேசியம், செப்டம்பர் 18, 2026: பல்வேறு வகைகளில் சிறப்பான பிராந்தியக் கதைகளை வழங்கி, Original Series பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி வரும் Tamil Zee 5, தற்போது ‘Octopus’ எனும் பரபரப்பான Suspense Thriller தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரத் தயாராகியுள்ளது. வழக்கமான கதை சொல்லும் முறைகளுக்கு மாறாக, வலுவான பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் தொடர், மர்மம், உணர்வு மற்றும் சுவாரஸ்யத்தை ஒன்றிணைக்கிறது. ஜெயச்சந்திர ஹாஷ்மி இயக்கியுள்ள ‘Octopus’ 7 எபிசோடுகளைக் கொண்ட T...
கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கும் “மறுஜென்ம காதல்”!

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கும் “மறுஜென்ம காதல்”!

சினிமா
கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கும் "மறுஜென்ம காதல்"! இந்தியன் டிஜிட்டல் பிலிம்ஸ் வழங்கும், வித்யா பிரேம் தயாரிப்பில், வந்தை பிரேம் எழுதி, இயக்கும் 'மறுஜென்மம் காதல்' படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச்செல்வன், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கூல் சுரேஷ், முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா, இயக்குநர் E.V.கணேஷ் பாபு மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு, வாழ்த்தினார்கள்! பாவிக்கும், ஆவிக்கும் நடக்கும் சண்டை மற்றும் உண்மையான காதல் எத்தனை ஜென்மங்கள் எடுத்தும் சேரும் என்பதே 'மறுஜென்ம காதல்'! வந்தை பிரேம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யாதாரி நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக கூல் சுரேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்ஷராய் விஜய் நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா ஆகியோர் ...
இரா.சரவணன் – நிவாஸ் கே. பிரசன்னா கூட்டணியில் ‘நந்தன் 2’… மீண்டும் அதிர வைக்கும் படைப்பு!

இரா.சரவணன் – நிவாஸ் கே. பிரசன்னா கூட்டணியில் ‘நந்தன் 2’… மீண்டும் அதிர வைக்கும் படைப்பு!

சினிமா
*இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.* ‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை தற்போது உருவாக்கி வருகிறார். இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இப்படத்தின் முதல் டைட்டில் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டர், வழக்கமான திரைப்பட போஸ்டர்களில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது. முழுவதும் கருப்பு-வெள்ளை பின்னணியில், ஒரு சிறுமியின் கையில் தண்ணீர் ஏந்திப் பிடித்திருக்கும் உலோகப் பாத்திரத்தின் பிரதிபலிப்பில் கேமராக்களுடன் செய்தியாளர்கள் மற்றும் படக்குழுவினர் இடம் பெறுவது போன்ற காட்சி ...
‘சிக்மா’வாக தொடங்கும் ஜேசன் சஞ்சய்யின் திரைப்பயணம்… டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா கோலாகலம்!

‘சிக்மா’வாக தொடங்கும் ஜேசன் சஞ்சய்யின் திரைப்பயணம்… டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா கோலாகலம்!

சினிமா
*'சிக்மா' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!* லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் இரண்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. தயாரிப்பாளர் தமிழ்குமரன் பேசியதாவது, “'சிக்மா' படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கு இந்த படம் எவ்வளவு முக்கியமானதோ, அதுபோலவே லைகா நிறுவனத்திற்கும் இந்த படம் மிக முக்கியமானது. ஏனெனில், அவருடைய அப்பா இன்றைய தமிழக முதல்வர் விஜய் அவர்களின் 'கத்தி' படம் தயாரித்து தான் நாங்கள் திரைத்துறைக்கு அறிமுகமானோம். இப்பொழுது அவர் மகனை நாங்கள் அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி. இயக்குநராக சஞ்சய் மீது நாங்கள் வ...
இளையராஜா இசையுடன் தமிழ்நாட்டைச் சுற்றும் ‘டோரதி’… செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில்!

இளையராஜா இசையுடன் தமிழ்நாட்டைச் சுற்றும் ‘டோரதி’… செப்டம்பர் 25 முதல் திரையரங்குகளில்!

சினிமா
*ஓரம் போ, ஓரம் போ!! ‘டோரதி’ வண்டி வருது!* கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. மதுரையில் இருந்து ஸ்பெஷலான லாரி ரோடு ட்ரிப் தொடங்கியுள்ளது. திரைப்படத்தின் உலகையும், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையையும் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்தப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை ஒளியின் வேகத்தைவிட வேகமாகப் பயணித்து வருகிறது. தலைமுறைகள், புவியியல் எல்லைகள், மொழிகள் என அனைத்தையும் கடந்து அனைவருடனும் கலந்துள்ள அந்த இசை, இப்போது ‘டோரதி’ திரைப்படத்திற்கும் சிறப்பு சேர்த்துள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கேரவன் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கிறது. ‘டோரதி’ திரைப்படத்தின் கதையுலகில் முக்கியமான இடம்பெற...
‘நல்ல படம்’ – திரை விமர்சனம்

‘நல்ல படம்’ – திரை விமர்சனம்

சினிமா
ஒரு பக்கம் மது இல்லாமல் வாழ முடியாத நிலை… மறுபக்கம் மதுவைத் தொலைத்த பிறகு மீண்டும் கிடைக்கும் குடும்ப மகிழ்ச்சி… அந்த மகிழ்ச்சிக்கு நடுவே மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்படும் சூழல் என, மதுப்பழக்கத்தின் தாக்கத்தை மையமாக வைத்து பயணிக்கிறது ‘நல்ல படம்’. கதையின் நாயகன் ஹரிஷ், ‘மது பிரியர்கள் மறுமலர்ச்சி சங்கம்’ என்ற அமைப்பை தொடங்கி அதன் தலைவராக இருப்பவர். மதுவின் மீது தீராத காதல் கொண்ட இவர், எந்நேரமும் போதையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்.அவரது இந்தப் பழக்கத்தால் காதலி ஒருபக்கம், குடும்பத்தினர் மறுபக்கம் என அனைவரும் அவரை மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால், எத்தனை அறிவுரைகள் சொன்னாலும், எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஹரிஷின் மதுப்பழக்கத்தை மட்டும் மாற்ற முடியவில்லை.அப்போது எதிர்பாராத விதமாக நாடு முழுவதும் மதுவிலக்கு அமலுக்கு வருகிறது.கையில் மது இல்லை… கடைகளும் இல்லை… இனி என்ன செய்வது?வேறு வழியில்லாம...
’பீப்’ (Beep) -திரைப்பட விமர்சனம்

’பீப்’ (Beep) -திரைப்பட விமர்சனம்

சினிமா
ஒரு புகைப்படத்தை பார்த்தால் அதில் இருக்கும் மனிதர்களை மட்டும் பார்க்க முடியாது... அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தால்? அப்படியொரு விசித்திரமான சக்தி கொண்ட ஒருவனிடம், மர்மமான ஒரு கொலை வழக்கு சிக்குகிறது. இறந்தவர் யார் என்பதைவிட... அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதே பெரிய கேள்வியாக மாற, புகைப்படங்களுக்குள் பயணித்து உண்மையை தேடுகிறார் நாயகன். அந்த மர்மப் பயணம்தான் ‘பீப்’. ஒரு புகைப்படத்தை பார்த்தவுடன் அதற்குள் பயணித்து, அந்தக் காட்சியின் பின்னணியில் நடந்த சம்பவங்களை அறிந்துகொள்ளும் திறன் கொண்டவர் ராகவ். இந்த வித்தியாசமான சக்தியுடன் வாழும் அவருக்கு யாமினி லக்‌ஷ்மணன் அறிமுகமாகிறார்.பாலியல் தொழிலாளியான யாமினிக்கும், ராகவுக்கும் நட்பு ஏற்படுகிறது ,ஆனால், எதிர்பாராத நேரத்தில் யாமினி அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியில் இருந்து கீ...
‘என்ன விலை’ – திரை விமர்சனம்

‘என்ன விலை’ – திரை விமர்சனம்

சினிமா
வாழ்க்கையில் சிலருக்கு நேர்மை ஒரு கொள்கை... சிலருக்கு அதுவே வாழ்க்கை. ஆனால், அந்த நேர்மையே அவர்களை சிக்கலில் தள்ளிவிட்டால்? ராமேஸ்வரம் கடலில் சில்லறைக் காசுகளை சேகரித்து குடும்பத்தை காப்பாற்றும் ஒரு எளிய மனிதனின் கையில் கிடைக்கும் விலை உயர்ந்த பொருள், அவரது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு அவர் சந்திக்கும் போராட்டத்தையும், நீதிக்கான பயணத்தையும் உணர்வுப்பூர்வமாக சொல்லும் படம்தான் ‘என்ன விலை’. ராமேஸ்வரம் கடற்கரையில் பக்தர்கள் வீசும் சில்லறைக் காசுகளை கடலுக்குள் இறங்கி சேகரித்து, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார் தவசி (கருணாஸ்). பெரிய கனவுகளோ, வசதியான வாழ்க்கையோ இல்லாத அவர், தன் உழைப்பையும் நேர்மையையும் மட்டுமே நம்பி வாழும் எளிய மனிதர்.ஒருநாள் வழக்கம்போல் கடலுக்குள் இறங்கும் தவசியின் கைகளில் எதிர்பாராத விதமாக விலை உயர்ந்த பொருள் ஒன்ற...
சண்டக்காரி – திரை விமர்சனம்

சண்டக்காரி – திரை விமர்சனம்

சினிமா
லண்டன் டு தஞ்சாவூர்... காதலும் காமெடியும் கலந்த ‘சண்டக்காரி’ லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருப்பவர் ஸ்ரேயா. அவருக்கு உதவியாளராக வேலைக்கு சேர்கிறார் விமல். பொறியியல் பட்டதாரியான விமல், தான் உருவாக்கிய செயலியை நிறுவனத்தில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். ஆனால், எப்போதும் கோபத்துடனும் அதிகாரத் தோரணையுடனும் இருக்கும் ஸ்ரேயாவிடம் வேலை செய்வது அவருக்கு எளிதானதாக இல்லை.இதற்கிடையில் ஸ்ரேயாவின் லண்டன் விசா பிரச்சினை அவரது தொழில் வாழ்க்கைக்கே தடையாகிறது. எதிர்பார்க்கும் சி.இ.ஓ பதவியை இழக்கும் சூழல் உருவாக, நிரந்தர லண்டன் குடியுரிமை பெற்ற விமலை திருமணம் செய்து கொண்டதாக நாடகம் நடத்தினால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று திட்டமிடுகிறார். விமலும் இந்தத் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். ஆனால், அதற்குப் பின்னால் அவருக்கும் ஒரு தனி கணக்கு இருக...