Tuesday, October 20

சினிமா

அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் கூட்டணியில் ‘அன்பில் அவன்’… திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தையபிரம்மாண்ட அறிமுக விழா!

அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் கூட்டணியில் ‘அன்பில் அவன்’… திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தையபிரம்மாண்ட அறிமுக விழா!

சினிமா
*‘அன்பில் அவன்' திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா* அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் 'அன்பில் அவன்'. ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய,  மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ்  சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார். *இவ்விழாவில் ஹேப்பி ஹை பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது,* "இந்தப் படம் எடுக்க முடிவு செய்வதற்...
*‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.*

*‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.*

சினிமா
*‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.* ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பர அம்சங்களுக்கு  நீங்கள் அளித்து வரும் அளவற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைத்து தளங்களிலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு உண்மையிலேயே எங்களை நெகிழச் செய்துள்ளது. நீங்கள் எங்கள் மீது பொழிந்து வரும் நம்பிக்கைக்கும் அன்புக்கும் நாங்கள் எப்போதும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் 25 செப்டம்பர் 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைத்து வரும் அபாரமான வரவேற்பும், எங்கள் விநியோக கூட்டாளர்களிடம் உருவாகியுள்ள அதிக அளவிலான ஆர்வமும் நம்பிக்கையும், இப்படத்தை இன்னும் பெரிய அளவிலும், பரந்த அளவிலும் ...
செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் திரைக்கு வரும் ரிமா தாஸின் “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  ( Village Rockstars 2) !!

செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் திரைக்கு வரும் ரிமா தாஸின் “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  ( Village Rockstars 2) !!

சினிமா
செப்டம்பர் 25 முதல் நாடு முழுவதும் திரைக்கு வரும் ரிமா தாஸின் “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  ( Village Rockstars 2) !! தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற இயக்குநர் ரிமா தாஸின்  “வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2”  ( Village Rockstars 2)  திரைப்படம் செப்டம்பர் 25, 2026 முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இப்படம் வெளியாக உள்ளது. அசாமில் வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, MAMI Independent திரைப்பட விழாவிலும் இப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அசாமின் கிராமப்புறப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், இளம்பெண் ஒருவரின் நட்பு, கனவுகள் மற்றும் வளரிளம் பருவத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு மாற்றங்களை மையமாகக் கொண்டுள்ளது. தனது தாயுடனான பாசமான உறவு, இசை மீதான ஆர்வ...
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்

தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்

சினிமா
UAE: திரைப்பட தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு விநியோகத்தில் கவனம் செலுத்தி வரும் Triple M Production LLC, தமிழ் திரையுலகில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. UAE-யை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தை அதன் Executive Director ஜி. பாபு ராமகிருஷ்ணன் வழிநடத்தி வருகிறார். UAE, கத்தார், இந்தியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் FMCG வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறையில் அனுபவம் பெற்ற அவர், Triple M Production மூலம் சினிமா மற்றும் பொழுதுபோக்குத் துறையிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளார். Irani, Niram Marum Ulagil, Ace, Akkenam, Bun Butter Jam உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களுடன் Triple M Production இணைந்து பணியாற்றியுள்ளது. UAE, சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் உள்ளிட்ட GCC நாடுகளிலும் திரைப்பட வெளியீடு மற்றும் விநியோக பணிகளை நிறுவனம் ம...
அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டியுடன் கைகோர்க்கும் ஜீவன்… ‘லவ்வர் பாய்’ படத்தில் புதிய கூட்டணி!

அர்ஜித் சங்கர் – க்ரித்தி ஷெட்டியுடன் கைகோர்க்கும் ஜீவன்… ‘லவ்வர் பாய்’ படத்தில் புதிய கூட்டணி!

சினிமா
*நடிகர்கள் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி நடிக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தி்ல் இணைந்த ‘காக்க காக்க’, ‘நான் அவனில்லை’ படங்கள் புகழ் ஜீவன்!* ‘காக்க காக்க’ திரைப்படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ திரைப்படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜீவன் தற்போது பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அசோக் குமார் இயக்கும் ‘லவ்வர் பாய்’ படத்தில் இணைந்துள்ளார். ‘காக்க காக்க’ திரைப்படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், வழக்கமான கதைக்களங்களைத் தாண்டி வித்தியாசமான கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்து ஹீரோவாகவும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் நடிகர் ஜீவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். அசோக் குமார் இயக்கத்தில், அர்ஜித் சங்...
தென்காசியில் தொடங்கியது ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’… டார்க் ஹியூமருடன் களமிறங்கும் ராஜு ஜெயமோகன்!

தென்காசியில் தொடங்கியது ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’… டார்க் ஹியூமருடன் களமிறங்கும் ராஜு ஜெயமோகன்!

சினிமா
*பிக்பாஸ் ராஜு ஜெயமோகனின் இயக்கி, நடிக்கும் டார்க் ஹியூமர் கதையான ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது!* பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது படக்குழு தென்காசியின் அழகிய இயற்கைச் சூழலில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மொட்டை மற்றும் இடிந்த கரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘...
*தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!*

*தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!*

சினிமா
*தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!* குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் உன்னி முகுந்தன் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) உடன் இணைந்து புதிய மலையாள திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை உன்னி முகுந்தன் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் முதன்முறையாக ஒரு திரைப்படத்திற்காக இணைகின்றன. பான் இந்திய அளவில் ரசிகர்களை சென்றடையும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நிறுவனங்களின் நோக்கம். விமர்சன ரீதியாகவும் வர்த்த ரீதியாகவும் புகழ்பெற்ற பல திரைப்படங்களை தயாரித்த முன்னணி ...
காதல் தோல்விக்கு குத்து இசை ட்ரீட்மென்ட்… எதிர்பாராத திருப்பங்களுடன் ‘விட்ரா மச்சா’!

காதல் தோல்விக்கு குத்து இசை ட்ரீட்மென்ட்… எதிர்பாராத திருப்பங்களுடன் ‘விட்ரா மச்சா’!

இசை
*அவள் சொன்னது ’பிரேக்’...அவனுக்கு கேட்டது ’பிரேக் அப்’!*   தமிழில் இசை சார்ந்த கதையாடலுக்கான புதிய களமாக சுயாதீன இசை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. திரைப்படப் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நிகராக, சுயாதீன பாடல்களையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் காதல், காதல் தோல்வி, நகைச்சுவை மற்றும் அதிரடியான குத்து இசை ஆகியவற்றை வித்தியாசமான முறையில் இணைக்கும் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது ஆஷிக் மற்றும் ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடலுக்கு, ரூபேஷ் திவாரி இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். ஆட்டம் போட வைக்கும் துள்ளலான இசையும், நகைச்சுவை கலந்த இசை அணுகுமுறையும் கொண்ட இந்தப் பாடல், வழக்கமான காதல் தோல்விப் பாடல்களில் இருந்து வேறுபட்ட ஒன்றாக உள்ளது. ஒரு இளம் காதல் ஜோடிக்கு இடையேயான தொலைபேசி உரையாட...
ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்!

ரசிகர்களின் வரவேற்பால் அதிகரிக்கும் திரையரங்குகள்… ‘என்ன விலை’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்!

சினிமா
*நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான, ‘என்ன விலை’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது!* சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அதன் விறுப்பான கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் இந்த வரவேற்பு படக்குழுவினரையும் உற்சாகப்படுத்டியுள்ளது. ஊடகங்கள் மத்தியிலும் இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இயக்குநரின் அணுகுமுறை, நடிகர்களின் நடிப்பு மற்றும் வலுவான உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கதை சொல்லல் ஆகியவற்றுக்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ரசிகர்களிடையே உருவாகியுள்ள நேர்மறையான ‘வேர்ட் ஆஃப் மவுத்’ வரவேற்பும் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்து வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பல்வேறு பகுதிகளில் ...
*தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!*

*தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!*

சினிமா
*தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!* நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ள அவர், திரையுலகில் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார். அதிக படங்களில் நடிக்க வேண்டும், தொடர்ந்து வளர வேண்டும், தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அவரது நோக்கம். நிதி அகர்வாலை பொறுத்தவரை, வெற்றி என்பது அவர் நடிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கையை மட்டுமே சார்ந்தது அல்ல. ஒரு நடிகையாக வளர்வதற்கான பயணம், உழைப்பு மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளே அவருக்கு முக்கியம். ‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் ‘தி ராஜா சாப்’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பின்போது, ஒரே நேரத...