Tuesday, October 20

சினிமா

திரையரங்குகளை நோக்கி ‘லெனின் பாண்டியன்’… மதுரையில் தர்ஷன் கணேசனுக்கு மாஸ் வரவேற்பு!

திரையரங்குகளை நோக்கி ‘லெனின் பாண்டியன்’… மதுரையில் தர்ஷன் கணேசனுக்கு மாஸ் வரவேற்பு!

சினிமா
*மதுரையில் கிடைத்த அன்பு… ‘லெனின் பாண்டியன்’ மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!* தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக தரமான படைப்புகளையும், வித்தியாசமான கதைக்களங்களையும் தயாரித்து வரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ், அடுத்ததாக ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தை திரைக்கு கொண்டு வருகிறது. அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மணல் கொள்ளையை மையமாகக் கொண்டு நம் மண்ணின் வாழ்வியலையும், எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. செப்டம்பர் 25-ஆம் தேதி ‘லெனின் பாண்டியன்’ திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படக்குழுவினர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ரசிகர்களையும், திரையரங்கு ...
விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணியின் ‘பத்தா’… பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணியின் ‘பத்தா’… பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

சினிமா
*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில்,  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.* படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்டார் ஸ்டுடியோ 18  (Star Studio18) மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் ( A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்  Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவும் அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அம...
‘தி டார்க் ஹெவன்’ – திரை விமர்சனம்

‘தி டார்க் ஹெவன்’ – திரை விமர்சனம்

சினிமா
ஒரு கிராமம்… ஒரு மர்ம சாபம்… தொடரும் கொலைகள்… உண்மையை தேடும் ஒரு காவல் அதிகாரி! ங்களுக்கு ஒருமுறை… ஏழாவது மாதத்தில்… அந்த மலை கிராமத்தில் ஆண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள்! இதற்க்கு காரணம் யார் மனிதர்களா? இல்லை அது வனதேவதையின் சாபமா?இந்தக் கேள்வியுடன் தொடங்கி, ஒவ்வொரு கொலையின் பின்னாலும் ஒளிந்திருக்கும் மர்மத்தை நோக்கி பார்வையாளர்களையும் அழைத்துச் செல்லும் திரைப்படம்தான் ‘தி டார்க் ஹெவன்’. மலைப்பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக வருகிறார் சித்து. தனது மனைவி தர்ஷிகா மற்றும் குழந்தையுடன் அந்த ஊரில் குடியேறும் அவருக்கு, அங்கு நிலவும் விசித்திரமான நம்பிக்கைகள் புதிராக இருக்கின்றன.ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஆண்கள் மர்மமான முறையில் இறப்பது, வனதேவதையின் சாபம்தான் இதற்குக் காரணம் என்று ஊர் மக்கள் நம்புவது என அந்தப் பகுதியே ஒரு மர்ம உலகமாக இருக்கிறது. ஆனால், காவல்த...
‘கோல்டு கால்’ – திரை விமர்சனம்

‘கோல்டு கால்’ – திரை விமர்சனம்

சினிமா
நான்கு நண்பர்கள்… ஒரு கடத்தல் வழக்கு… பின்னால் துரத்தும் போலீஸ்! தங்கள் மீது விழுந்த பழியை துடைக்க, குற்றவாளியைத் தேடி இவர்களே களத்தில் இறங்குகிறார்கள். இதுதான் ‘கோல்டு கால்’!இப்படி ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளும் நான்கு விற்பனை பிரதிநிதிகளின் ஓட்டமும், அவர்களின் நட்பும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் இணைந்து உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘கோல்டு கால்’. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றுகிறார்கள். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேலை பார்க்கும் இடத்தில் உருவான நட்பு இவர்களை நெருங்கிய நண்பர்களாக மாற்றுகிறது.ஆனால், நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விற்பனை இலக்குகளை எட்ட முடியாமல் போக, மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகிறார்கள். ...
*பாவனா ஸ்டுடியோஸின் அடுத்தபடம்   ‘பிக்னிக்’ (Picnic): ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட் ‘புகழ் பிரபல கதாசிரியர் கிரண் ஜோசி இயக்குகிறார்!*

*பாவனா ஸ்டுடியோஸின் அடுத்தபடம்   ‘பிக்னிக்’ (Picnic): ‘பிரேமலு’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட் ‘புகழ் பிரபல கதாசிரியர் கிரண் ஜோசி இயக்குகிறார்!*

சினிமா
*அண்மையில் தங்கள் தயாரிப்பில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தைத் தொடர்ந்து புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸின் அடுத்த படமாக   'பிக்னிக்' (Picnic) உருவாகிறது.* இந்தப் படத்தின் மூலம் 'பிரேமலு' மற்றும் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படங்களின் இணை எழுத்தாளராகப் பணிபுரிந்த கிரண் ஜோசி இயக்குநராக அறிமுகமாகிறார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சமீபத்தில் உலகளாவிய வெற்றி பெற்ற 'பெத்லகேம் குடும்ப யூனிட்' படத்தினைத் தொடர்ந்து, முன்னணித் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ், சந்தீப் பிரதீப், இந்திரஜித் சுகுமாரன் மற்றும் திலீஷ் போத்தன் ஆகியோருடன் இணைந்து ஒரு பிரம்மாண்டமான  நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான குடும்பக் கதை கொண்ட திரைப்படத்தை உருவாக்க உள்ளது. இப்படம் 2027 ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகரமான படங்களை...
“யாராலும் ஒரு படத்தை தூக்கி நிறுத்த முடியாது… உழைப்பு மட்டுமே வெற்றியைத் தரும்!” –*’கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில்  சமுத்திரக்கனி பேச்சு

“யாராலும் ஒரு படத்தை தூக்கி நிறுத்த முடியாது… உழைப்பு மட்டுமே வெற்றியைத் தரும்!” –*’கஸ்தூரி வீடு’ திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சமுத்திரக்கனி பேச்சு

சினிமா
*'கஸ்தூரி வீடு' திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!* ரென்டெக் ஃபிலிம் , லயன் வி ஃபிலிம்ஸ் , அன்னை சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து வழங்க, விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகி பாபு,தம்பி ராமையா,டேவிட் டிட்டோ,தனுஜா,ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கஸ்தூரி வீடு'.இத்திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது. படத்தில் ஒளிபரப்பப்பட்ட ட்ரெய்லர் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக இருந்ததாக விழாவில் கலந்து கொண்டவர்கள் பேசிக் கொண்டனர். *இவ்விழாவில் தயாரிப்பாளர் லயன் டாக்டர் வகேஷ் வரவேற்புரையாற்றிப் பேசும் போது..,* "இந்த படம் ஆரம்பித்தது ஒரு பிசினஸ் மீட்டிங்கில் தான் அப்பொழுதுதான் இயக்குநரின் அறிமுகம் கிடைத்தது. அரை மணி நேரத்தில் கதையை விளக்கினார். எவ்வளவோ படங்கள் பார்த்து இ...
*நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’*

*நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’*

சினிமா
*நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’* மிகவும் எதிர்பார்க்கப்படும் துல்கர் சல்மான் நடிக்கும் ஆகாசம்லோ ஓக தாரா ‘AOT’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. ‘AOT’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், படக்குழு சிறப்பான புரமோஷன் பணிகளைத் திட்டமிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசி...
காதலுக்கு ஒரு புதிய டச்… ‘#Love’ அக்டோபர் 2 முதல் Netflix-ல் மட்டும்!

காதலுக்கு ஒரு புதிய டச்… ‘#Love’ அக்டோபர் 2 முதல் Netflix-ல் மட்டும்!

சினிமா
*#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்* *கெமிஸ்ட்ரியா... பொருத்தமா....பந்தயம் வைக்கும் 'லவ்" (#Love)* இன்றைய காலகட்டத்தில் காதலும் உறவுகளும் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன. நேரில் சந்தித்து காதல் வளர்ந்த காலம் மாறி, டேட்டிங் ஆப்கள் மூலம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ளும் காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என காதலின் தொடக்கமே தற்போது டிஜிட்டல் உலகில் இருந்து வருகிறது. இப்படியான நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’. ஷோ-ரன்னர் , சௌந்தர்யா ரஜினிகாந்த்  தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள இந்தத் தொடரில், இருவருக்கும் இடையிலான உறவு கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. FOUND மற்றும் Fi...
*அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!*

*அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!*

சினிமா
*சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் ( Silver Tree Studios) தயாரிக்கும் முதல் திரைப்படம் – ரஞ்சித் ஜெயக்கொடி (Ranjit Jeyakodi) இயக்கத்தில் உருவாகிறது!* விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் Silver Tree Studios. படைப்பாற்றல் மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு களங்களில் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது. சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் (Silver Tree Studios) வழங்கும் – புரொடக்ஷன் no.1 (Production No.1), POP Entertainment நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழ் தி...
“‘பைசன் காளமாடன்’ நடிப்புக்கு மகுடம்… SIIMA விருதை வென்ற துருவ் விக்ரம்!”

“‘பைசன் காளமாடன்’ நடிப்புக்கு மகுடம்… SIIMA விருதை வென்ற துருவ் விக்ரம்!”

சினிமா
*‘பைசன் காளமாடன்’ படத்திற்காக சைமா (SIIMA AWARD) சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம் – இளம் நடிகருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை!* தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். இளம் நடிகராக தனது திரைப்பயணத்தில் துருவ் விக்ரமுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அவரது திறமைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது. தனது முதல் படத்திலிருந்தே மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து ,நடிப்பில் கவனம் செலுத்தி வரும் துருவ் விக்ரம், ஒவ்வொரு படத்திலும் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் தனது ந...