Tuesday, October 20

சினிமா

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6-வது ஆண்டு கூட்டம்… சென்னையில் ஒன்று கூடிய TFAPA!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 6-வது ஆண்டு கூட்டம்… சென்னையில் ஒன்று கூடிய TFAPA!

சினிமா
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM) இன்று சென்னை, வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தமிழ் திரையுலகம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், சங்கத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் குறித்து விவாதித்து, உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது வழக்கம். இவ்வாண்டு கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ் திரையுலகின் முக்கிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதுடன், தயாரிப்பாளர்களுட...
காதலும் உறவுகளும் பேசும் புதிய கதை… ‘#Love’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியானது!

காதலும் உறவுகளும் பேசும் புதிய கதை… ‘#Love’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியானது!

சினிமா, வெப் சீரிஸ்
*கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு!* சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில் *நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது..,* “நெட்ஃப்ளிக்ஸின் முத...
சத்யஜோதி ஃபிலிம்ஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி… ‘SK27’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

சத்யஜோதி ஃபிலிம்ஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி… ‘SK27’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

சினிமா
*சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK27’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!* தமிழ் திரையுலகில் பல தசாப்தங்களாக வித்தியாசமான கதைக்களங்களையும், தரமான படைப்புகளையும் வழங்கி வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகிறது. தற்காலிகமாக ‘SK27’ என அழைக்கப்படும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. டி.ஜி. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் – கயாது லோகர் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பரிதாபங்கள்’ புகழ் சுதாகர் மற்றும் ஜார்ஜ் மரியான் ஆகியோரும் இப்படத்தில்...
‘லெனின் பாண்டியன்’- திரை விமர்சனம்

‘லெனின் பாண்டியன்’- திரை விமர்சனம்

சினிமா
இயற்கையை பாதுகாக்க போராடும் ஒரு மனிதனின் குரலும், அந்தக் குரலை காப்பாற்ற நிற்கும் ஒரு காவலரின் கடமையும் இணையும் கதையே  ‘லெனின் பாண்டியன்’. ஆற்றில் இருந்து மணல் அள்ளப்படுவதை பார்த்துக்கொண்டு அமைதியாக கடந்து செல்பவர்களுக்கு மத்தியில், அதற்கு எதிராக புகார் கொடுக்கிறார் விவசாயி கங்கை அமரன். அவர் அளிக்கும் புகார், சாதாரண புகாராக இல்லாமல் ஒரு மிகப்பெரிய சட்டப் போராட்டத்திற்கான தொடக்கமாக மாறுகிறது.அவரது புகாரின் பேரில் விசாரணை நடத்தும் பெண் அதிகாரி படுகொலை செய்யப்படுகிறார் அதன் பின்னும் கங்கை அமரன் பின்வாங்கமல் நீதிமன்றத்தின் கதவைத் தட்டுகிறார். அவரது போராட்டத்தின் விளைவாக வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. அதோடு, அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை கருத்தில் கொண்டு, ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பும் வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது.அந்தப் பாதுகாப்புப் பொறுப்பு கிடைப்பது காவலர் தர்ஷனுக்க...
‘டோரதி’ – திரை விமர்சனம்

‘டோரதி’ – திரை விமர்சனம்

சினிமா
உயிருக்கு உயிரான நண்பன்… அவனையே கொல்ல வேண்டிய சூழ்நிலை! இந்த எதிர்பாராத திருப்பத்துடன் பயணிக்கிறது ‘டோரதி’. மதுரையின் 1990-களின் பின்னணியில், அந்த காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மனிதர்களுக்குள் இருந்த அன்பான நட்பும் ,ஆழமான பாசமும் கலந்து கதையாக சொல்லுகிறது இந்த ‘டோரதி’. சிறு வயது முதலே உயிருக்கு உயிராக பழகும் கார்த்திக் (ரிஷிகாந்த்), சுப்பு (சனந்த்) இருவரும் ஒன்றாகவே வளர்கிறார்கள். நட்பின் பெயரில் அடிதடி, மோதல் என ஆவேசமான இளைஞர்களாக மாறும் இவர்களின் வாழ்க்கையில், எதிர்பாராத ஒரு சம்பவம் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்துகிறது.நண்பனிடமிருந்து பிரிந்து வாழும் கார்த்திக், கடந்த கால நினைவுகளுடன் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அப்போது, அவனுடைய முன்னாள் நண்பன் சுப்புவையே கொலை செய்யச் சொல்லி சுப்புவின் தந்தையே கார்த்திக்கை அணுகுகிறார்.நண்பனை கொல்லச் சொன்னால் கார்த்திக் என்ன செய்வார்?சுப்புவ...
சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு!

சினிமா
சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தொடர்ந்து ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான புதிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்று வருகிறார். தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தில் நடிக்கும் திரைப்படம் SK27. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சித்தார்த் தயாரிக்கின்றனர்.இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிரட்டலான போஸ்டருடன் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒவ்வொரு படமும் அவரை ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ‘அமரன்’ படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கி...
‘தி கிராண்ட் மாஸ்டர்’-திரை விமர்சனம்

‘தி கிராண்ட் மாஸ்டர்’-திரை விமர்சனம்

சினிமா
சதுரங்கத்தில் வெற்றி பெற ஒவ்வொரு காயையும் சரியான நேரத்தில் நகர்த்த வேண்டும். ஆனால், சிலரது வாழ்க்கையில் முதல் காயை நகர்த்துவதற்கே சமூகத்தின் தடைகளை கடக்க வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு போராட்டத்தை சதுரங்கப் பலகையின் பின்னணியில் பதிவு செய்யும் படைப்பாக உருவாகியிருக்கிறது ‘தி கிராண்ட் மாஸ்டர்’. கதையின் மைய கதாபாத்திரத்தில் துப்புரவுத் தொழிலாளியாக நடித்துள்ள அபர்ணதி ,தனது கணவரை இழந்த நிலையில் வாழும் சூழ்நிலையில், மகனை நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று கனவு காண்கிறார். ஆனால், மகனுக்கோ படிப்பை விட சதுரங்கத்தின் மீதுதான் அதிக ஆர்வம். அந்த விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் ஆக வேண்டும் என்பதே அவனது கனவு.கனவு இருக்கிறது. ஆனால் அவனது தாயார் செய்யும் பணியினை காரணம் காட்டி, சமூகத்தின் ஒரு பகுதி அவனை ஒதுக்கும்போது, அந்த நிராகரிப்பை எதிர்த்து மகனின் கனவுக்காக தானே களத்தில...
*இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!*

*இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!*

சினிமா
*சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தில் ஆலியா பட்டின் இதுவரை காணாத நியூ ஜெனரேஷன் கேபரேட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!* சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படம் குறித்த ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல் போஸ்டர் வெளியானது முதலே இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, படத்தில் ரன்பீர் கபூர் இடம்பெறும் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது, ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான நியூ ஜெனரேஷன் கேபரேட் அவதாரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவன...
*80-களின் பின்னணியில் ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வுகளுடன் வெளியாகியுள்ள ‘பத்தா’ டிரெய்லர்*

*80-களின் பின்னணியில் ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வுகளுடன் வெளியாகியுள்ள ‘பத்தா’ டிரெய்லர்*

சினிமா
*‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்* மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ (Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios)மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இரண்டு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீர பிரதாபங்களைப் பற்றி விவாதிப்பதுடன் தொடங்குகிறது ‘பத்தா’ டிரெய்லர். யாராலும் தொட முடியாதவர், அசைத்து பார்க்க முடியாதவர் என பத்தாவின் வீரத்தைப் பற்றிப் பலரும்  பேச அப்படி...
காதல், நிராகரிப்பு, உண்மை… பல கேள்விகளுடன் வரும் ‘Pooja Meri Jaan’ – அக்டோபர் 2 முதல் ZEE5-ல்!

காதல், நிராகரிப்பு, உண்மை… பல கேள்விகளுடன் வரும் ‘Pooja Meri Jaan’ – அக்டோபர் 2 முதல் ZEE5-ல்!

சினிமா
*ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை: ‘Pooja Meri Jaan’ திரைப்படம் அக்டோபர் 2 முதல் Hindi Zee 5-ல் வெளியாகிறது* National, செப்டம்பர் 24, 2026: ஒவ்வொரு கதையும் எளிதான பதில்களை வழங்குவதற்காக உருவாக்கப்படுவதில்லை. சில கதைகள் நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, நாம் ஏற்றுக்கொள்வதை கேள்விக்குள்ளாக்கி, நாம் பார்க்காமல் தவிர்க்க விரும்பும் உண்மைகளை எதிர்கொள்ள வைக்கின்றன. Navjot Gulati இயக்கத்தில், Dinesh Vijan மற்றும் Amar Kaushik தயாரிப்பில், Maddock Films நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘Pooja Meri Jaan’ திரைப்படம் 2026 அக்டோபர் 2-ம் தேதி Hindi Zee 5-ல் வெளியாகிறது. இந்த தீவிரமான டிராமா திரைப்படம் Pooja-வை மையமாகக் கொண்டு நகர்கிறது. தொடர் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், நிராகரிப்பு, வெறித்தனமான காதல், சம்மதம் மற்றும் உண்மையில் என்ன நடந்தது என்...