Tuesday, October 20

சினிமா

சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு!

சினிமா
சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தொடர்ந்து ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான புதிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்று வருகிறார். தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தில் நடிக்கும் திரைப்படம் SK27. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சித்தார்த் தயாரிக்கின்றனர்.இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிரட்டலான போஸ்டருடன் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒவ்வொரு படமும் அவரை ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ‘அமரன்’ படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கி...
‘தி கிராண்ட் மாஸ்டர்’-திரை விமர்சனம்

‘தி கிராண்ட் மாஸ்டர்’-திரை விமர்சனம்

சினிமா
சதுரங்கத்தில் வெற்றி பெற ஒவ்வொரு காயையும் சரியான நேரத்தில் நகர்த்த வேண்டும். ஆனால், சிலரது வாழ்க்கையில் முதல் காயை நகர்த்துவதற்கே சமூகத்தின் தடைகளை கடக்க வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு போராட்டத்தை சதுரங்கப் பலகையின் பின்னணியில் பதிவு செய்யும் படைப்பாக உருவாகியிருக்கிறது ‘தி கிராண்ட் மாஸ்டர்’. கதையின் மைய கதாபாத்திரத்தில் துப்புரவுத் தொழிலாளியாக நடித்துள்ள அபர்ணதி ,தனது கணவரை இழந்த நிலையில் வாழும் சூழ்நிலையில், மகனை நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று கனவு காண்கிறார். ஆனால், மகனுக்கோ படிப்பை விட சதுரங்கத்தின் மீதுதான் அதிக ஆர்வம். அந்த விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் ஆக வேண்டும் என்பதே அவனது கனவு.கனவு இருக்கிறது. ஆனால் அவனது தாயார் செய்யும் பணியினை காரணம் காட்டி, சமூகத்தின் ஒரு பகுதி அவனை ஒதுக்கும்போது, அந்த நிராகரிப்பை எதிர்த்து மகனின் கனவுக்காக தானே களத்தில...
*இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!*

*இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!*

சினிமா
*சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ படத்தில் ஆலியா பட்டின் இதுவரை காணாத நியூ ஜெனரேஷன் கேபரேட் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது!* சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படம் குறித்த ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், முதல் போஸ்டர் வெளியானது முதலே இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, படத்தில் ரன்பீர் கபூர் இடம்பெறும் கதாபாத்திர தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது, ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக்  போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான நியூ ஜெனரேஷன் கேபரேட் அவதாரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களின் கவன...
*80-களின் பின்னணியில் ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வுகளுடன் வெளியாகியுள்ள ‘பத்தா’ டிரெய்லர்*

*80-களின் பின்னணியில் ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வுகளுடன் வெளியாகியுள்ள ‘பத்தா’ டிரெய்லர்*

சினிமா
*‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்* மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ (Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios)மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இரண்டு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீர பிரதாபங்களைப் பற்றி விவாதிப்பதுடன் தொடங்குகிறது ‘பத்தா’ டிரெய்லர். யாராலும் தொட முடியாதவர், அசைத்து பார்க்க முடியாதவர் என பத்தாவின் வீரத்தைப் பற்றிப் பலரும்  பேச அப்படி...
காதல், நிராகரிப்பு, உண்மை… பல கேள்விகளுடன் வரும் ‘Pooja Meri Jaan’ – அக்டோபர் 2 முதல் ZEE5-ல்!

காதல், நிராகரிப்பு, உண்மை… பல கேள்விகளுடன் வரும் ‘Pooja Meri Jaan’ – அக்டோபர் 2 முதல் ZEE5-ல்!

சினிமா
*ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை: ‘Pooja Meri Jaan’ திரைப்படம் அக்டோபர் 2 முதல் Hindi Zee 5-ல் வெளியாகிறது* National, செப்டம்பர் 24, 2026: ஒவ்வொரு கதையும் எளிதான பதில்களை வழங்குவதற்காக உருவாக்கப்படுவதில்லை. சில கதைகள் நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, நாம் ஏற்றுக்கொள்வதை கேள்விக்குள்ளாக்கி, நாம் பார்க்காமல் தவிர்க்க விரும்பும் உண்மைகளை எதிர்கொள்ள வைக்கின்றன. Navjot Gulati இயக்கத்தில், Dinesh Vijan மற்றும் Amar Kaushik தயாரிப்பில், Maddock Films நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘Pooja Meri Jaan’ திரைப்படம் 2026 அக்டோபர் 2-ம் தேதி Hindi Zee 5-ல் வெளியாகிறது. இந்த தீவிரமான டிராமா திரைப்படம் Pooja-வை மையமாகக் கொண்டு நகர்கிறது. தொடர் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், நிராகரிப்பு, வெறித்தனமான காதல், சம்மதம் மற்றும் உண்மையில் என்ன நடந்தது என்...
நயன்தாரா – கவின் கூட்டணியின் ‘Hi’… செப்டம்பர் 25 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

நயன்தாரா – கவின் கூட்டணியின் ‘Hi’… செப்டம்பர் 25 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்!

சினிமா
*காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5* *நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த இளம் தலைமுறைக்கான காதல் திரைப்படம், நவீன உறவுகள்,காதல் மற்றும் அவற்றுடன் வரும் சிக்கல்களைப் பேசுகிறது* இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள மிகவும் பாராட்டப்பட்ட வெற்றித் திரைப்படங்களைத் தொடர்ந்து ரசிகர்களிடம் கொண்டு வரும் தமிழ் ZEE5, தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள Hi திரைப்படத்தைத் திரையிடத் தயாராகியுள்ளது. வழக்கமான காதல் கதைகளிலிருந்து மாறுபட்ட வகையில், நவீன உறவுகள் குறித்த புதிய பார்வையை வழங்கும் அதே நேரத...
வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘ராட்சசியே’… வெளியானது ‘மண்டவெட்டி’ முதல் பாடல்!

வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘ராட்சசியே’… வெளியானது ‘மண்டவெட்டி’ முதல் பாடல்!

சினிமா
*தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!* சரண்ராஜ் செந்தில்குமாரின் சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படமான ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘மண்டவெட்டி’ படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியாகியுள்ளது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் உணர்வுப்பூர்வமான குரல், தீபக் வேணுகோபாலின் இசை மற்றும் தமிழ்மணி எழுதியுள்ள பாடல் வரிகள் ஆகியவை இணை...
பக்தி மணம் கமழும் ‘ஜெய் ஜெய் ராம்’… ‘ராமாயணம்’ முதல் பாடல் வெளியானது!

பக்தி மணம் கமழும் ‘ஜெய் ஜெய் ராம்’… ‘ராமாயணம்’ முதல் பாடல் வெளியானது!

சினிமா
*ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!* செப்டம்பர் 25, 2026: ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியாகியிருப்பதன் மூலம் அதன் இசைப்பயணம் தொடங்கியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் ஆன்மீக அழைப்பாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும், திரையிசையின் அழகையும் ஒன்றிணைக்கிறது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை பாடல் வரிகள் பிரதிபலிக்கின்றன. பாடல் முழுவதும் மீண்டும் மீண்டும் ஒலிக்கும் ஸ்ரீ ராமரின் திருநாமம் பாடலில் பக்தி மணம் பரப்புகிறது. இயக்குநரும் தயாரிப்பாளருமான நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “தலைமுறை தலைமுறையாக, வாழ்க்கையின் ஒவ்வ...
*ஏழு கடல் ஏழு மலை தமிழ் சினிமாவுக்கான என் கம்பேக்!” – நடிகர் நிவின் பாலி மகிழ்ச்சி!*

*ஏழு கடல் ஏழு மலை தமிழ் சினிமாவுக்கான என் கம்பேக்!” – நடிகர் நிவின் பாலி மகிழ்ச்சி!*

சினிமா
*“ராம் - யுவன் காம்பினேஷன் எப்போதுமே மேஜிக்கல்!” - கதாநாயகி அஞ்சலி புகழாரம்!*   வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார். சமீபகாலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தில் எலியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையைத் தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவ...
தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56!

தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56!

சினிமா
மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !! தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் இப்ப...