*நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்தனார்’ திரைப்பட டிரெய்லர் ரசிகர்களுக்கு விஷூவல் விருந்தாக வெளியாகியுள்ளது!*
*நடிகர்கள் ஜெயசூர்யா, பிரபுதேவா, அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கத்தனார்’ திரைப்பட டிரெய்லர் ரசிகர்களுக்கு விஷூவல் விருந்தாக வெளியாகியுள்ளது!*
புதுமையான கதை சொல்லல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளால் இந்திய திரைப்படத் துறையில், தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன். இவரது தயாரிப்பு நிறுவனம் தற்போது நடிகர்கள் ஜெயசூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரபுதேவா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘கத்தனார்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 நிமிடம் 49 விநாடிகள் ஓடும் இந்த டிரெய்லரில் கண்கவர் காட்சிகள், மனதை மயக்கும் இசை, தெளிவான ஒலி வடிவமைப்பு மற்றும் முன்னணி நடிகர்களின் திறமையான நடிப்பு என பழங்கால ...