Friday, May 15

சாத்தான் – தி டார்க்- திரைவிமர்சனம்

கடவுள் மறுப்பு… சாத்தான் வழிபாடு… மர்ம மரணங்கள்! மனித பலி நம்பிக்கையில் வாழும் கிராமத்தின் இருண்ட கதை.ஒரு கிராமத்துல கடவுள் மேல நம்பிக்கை இல்லாத மக்கள் சாத்தான் மேல நம்பிக்கை வைக்கிறாங்க ,அந்த சாத்தான் கிட்ட கேட்டதெல்லாம் கிடைக்கிறதுக்காக ஆடு, மாடு போன்ற உயிரினங்களுக்கு அப்பால் மனிதர்களையும் பலி கொடுக்குறாங்க ,இது போன்ற சூழல் இருக்கக்கூடிய கிராமத்துல பல வருடங்களுக்கு அப்புறமா திரும்பவும் நிறைய அசம்பாவிதங்கள் நடக்க ஆரம்பிக்கிறதுனால நிறைய மர்ம மரணங்களும் தொடர்ந்து நடக்குது,இந்த மரணங்களை எல்லாம் விசாரிக்கறதுக்கு வர்ற காவல் அதிகாரி தன்னோட ஒவ்வொரு முயற்சிகளிலேயும் பல அதிர்ச்சியான உண்மைகளை சந்திக்கிறாரு ,இந்த சமயத்துல நாயகி ஐரா யோட அம்மா மோன பத்ரேவின் நடவடிக்கைகளில் நிறைய மாறுபாடுகள் ஏற்படுது ,அவர் தன்னை யாரோ கட்டுப்படுத்தறாங்க அப்படின்னு சொல்றாங்க, இதைப் பற்றி எல்லாம் கேள்விப்பட்ட ஐராவோட காதலரான எஃப்.ஜெ ,ஐரா வீட்டுக்கு வராரு, அப்ப அந்த வீட்டில ஒரு மர்மமான, கொடூரமான ஒரு உருவத்தை பார்க்கிறாரு , அதற்குப் பிறகு அவருடைய நடவடிக்கைகளிலேயும் , செயல்களிலேயும் நிறைய மாற்றம் ஏற்படுது, இதற்குப் பிறகு என்ன நடந்தது ?அந்த மர்ம மரணங்கள் தடுக்கப்பட்டதா? இதற்கெல்லாம் காரணம் என்ன ?நாயகன் எஃப்.ஜெ அதற்கு பிறகு என்ன ஆனார்? அந்த உருவத்தின் பின்னணி என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு விடையினை படத்தின் மீதி கதை சொல்கிறது.

கதையின் நாயகனாக பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் எஃப்.ஜெ நடித்திருக்கிறார். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு தக்கபடி இயல்பான நடிப்பை அவர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். அதே போல நாயகியாக நடித்திருக்கும் ஐராவும் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஐராவினுடைய அம்மாவாக மோனபத்ரே நடித்துள்ளார் , இவரும் கிளைமாக்ஸில் வரக்கூடிய சாந்தினி தமிழரசனும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதுபோன்ற கதைக்களம் அமையப்பெற்றுள்ள திரைப்படங்களுக்கு ஒளியும் ஒலியும் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்க வேண்டும், அப்பொழுதுதான் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்த கதை நிகழும் சூழலை பெரிதும் உணர முடியும் .அந்த வகையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் பாலா.ஜி ராமசாமி,கதைக்கும் காட்சிகளுக்கும் தேவையான கேமரா கோணங்களையும், ஒளி அமைப்புகளையும் நன்கு உருவாக்கியுள்ளார் .இசையமைப்பாளர் அஸ்வின் கிருஷ்ணாவின் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான பின்புலத்தை கொடுத்து ரசிகர்களை காட்சிகளுடன் ஒன்றிப்போக வைக்கிறது.

படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் மணிகண்டன் ராமலிங்கம் .எடுத்துக்கொண்ட கதை சரியான தேர்வாக இருந்தாலும் ,அதை திரைக்கதையாக்கி சொல்வதில் இன்னமும் கவனம் எடுத்து இருந்தால் அது ரசிகர்களுக்கு படம் குறித்த ஆர்வத்தை மேலும் அதிகரித்து கொடுத்திருக்கக்கூடும் இருப்பினும் ஒரு நல்ல ஹாரர் என்டர்டைன்மென்ட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற இயக்குனரின் முயற்சி வீண் போகவில்லை என்று சொல்லலாம் .

மொத்தத்தில் இந்த சாத்தான், ஹாரர் கதை பெரியவர்களுக்கு நல்லதொரு விஷுவல் ட்ரீட்.

Spread the love