Sunday, April 19

Author: admin

இன்று திருவள்ளுவர் தினம்

இன்று திருவள்ளுவர் தினம்

இலக்கியம்
உலக பொது மறை நூலான திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார் . தனி சிறப்போடு திகழும் திருக்குறள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியதாக கருதப்படுகிறது. திருக்குறளில் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன. 133 அதிகாரங்கள் 1330 குறள்கள் கொண்ட திருக்குறள் உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, மேலும் திருக்குறளில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய குறிப்பு என்னவெனில் தமிழ் என்ற சொல் அதில் பயன்படுத்தபடவேயில்லை என்பதாகும் . வாழ்வியல் நெறி முறைகளை வையகத்தில் வாழும் மாந்தர்க்கு ரத்னசுருக்கமாக உவமைகளுடன் விளக்கி சொல்லும் திருக்குறள் ,ஆங்கில மொழியில் முதன்முதலாக ஜி .யு . போப் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டது . மதம், மொழி, இனம் என்ற எந்த பாகுபாடும் இன்றி எல்லா மக்களுக்கும் பொதுவான முறையில் நல்ல சிந்தனைளை தரக்கூடிய திருக்குறளை தந்த வள்ளுவப்பெருமகனார்க்கு மேலும் சிறப்பு சேர்க்...
சுந்தர். சி நடிக்கும் புதிய படம்

சுந்தர். சி நடிக்கும் புதிய படம்

சினிமா
  24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் K.திருஞானம் எழுதி இயக்கும் "ஒன் 2 ஒன்" எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது. திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குனர் K.திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகும் இப்படத்தில் சுந்தர்.C க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கின்றார். விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்க்கு ஒளிப்பதிவு விக்ரம் மோகன், இசை சித்தார்த் விபின் .இம்மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது...
வைகைப்புயல் வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

வைகைப்புயல் வடிவேலுவுக்காக லண்டனில் கம்போசிங் செய்த சந்தோஷ் நாராயணன்

சினிமா, செய்திகள்
இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இதில் 'வைகைப்புயல்' வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் 'குக் வித் கோமாளி' புகழ் நடிகை சிவாங்கி, 'டாக்டர்' பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்துக்கொள்ள படக்குழுவினர் விரும்பினர். இதனை ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்த...
RB சௌத்திரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜன்  இயக்கத்தில், ஜீவா நடிக்கும்  “வரலாறு முக்கியம்”

RB சௌத்திரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்”

சினிமா, செய்திகள்
நடிகர் ஜீவா 'வரலாறு முக்கியம்' என்ற புதிய படம் மூலம் ரசிகர்கள் கூட்டத்தின் கவர இருக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் RB சௌத்திரி தயாரிக்கிறார். நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, TSK, E ராமதாஸ், லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் NB (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (...
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

ஆன்மீகம்
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகிய திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.உலகப்புகழ்பெற்ற இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் . நினைத்தாலே முக்தி தரும் இந்த தலம் பற்றிய புராணம் யாதெனில் ,நான்முகனுக்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் ஏற்பட , இடையில் நெருப்புப் பிழம்பு தோன்ற நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிகிறாரோ அவரே நம்மில் பெரியவர் என உரைத்தனர். அதன் அடியைக் காண, திருமால் வராக வடிவெடுத்து நிலத்தினைக் குடைந்து சென்று பல காலம் பயணம் செய்தும் அடியைக் காண இயலாமல் திரும்ப, அன்னம் வடிவமெடுத்து முடியைக் காணச்சென்ற நான்முகன் , வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என கேட்க அதற்கு அது நான் சிவனாரின் தலையிலிருந்து...