Monday, April 20

Author: admin

நீ ஃபாரெவர் (Nee Forever)- திரை விமர்சனம்

நீ ஃபாரெவர் (Nee Forever)- திரை விமர்சனம்

சினிமா
காதலை நம்பாத ஒரு இளைஞன்… காதலை உணர விரும்பும் ஒரு இளம் இயக்குனர்… இருவரும் போலியாக தொடங்கும் தல் எப்படி உண்மையான காதலாக எப்படி மாறுகிறது என்பதை ரசிக்கும்படி திரைமொழியில் சொல்லுகிறது இந்த படம். காதல் திருமணத்திற்கு எதிரான குடும்பத்தில் வளர்ந்த ஐடி இளைஞன் அஜய் (சுதர்ஷன் கோவிந்த்) தான் கதையின் நாயகன் , காதல் அனுபவமே இல்லாமல் இருக்கும் அஜய், நீ ஃபாரெவர்’ என்ற டேட்டிங் செயலியை (APP ) உருவாக்குகிறார் . கதையின் நாயகியான மதி (அர்ச்சனா ரவி) இயக்குனராக உயர வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர் இவர் ஒரு உணர்ச்சிப் பூர்வமான காதல் கதைக்காக போலியாக காதலிக்க தீர்மானிக்கிறார் .இந்த இருவரும் தங்கள் உண்மையான அடையாளங்களை மறைத்து தொடங்கும் இந்த ‘போலி காதல்’, மெதுவாக உண்மையான உணர்வுகளாக மாறும் பயணம் தான் படத்தின் மீதிக்கதை . சுதர்ஷன் கோவிந்த் – ஐடி இளைஞனாக அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பை வெ...
ஹேப்பி ராஜ் -திரைவிமர்சனம்

ஹேப்பி ராஜ் -திரைவிமர்சனம்

சினிமா
தன்னுடைய உருவம் பிறரால் கேலி செய்யப்படக்கூடிய வகையில் உள்ள ஒரு தந்தை,அந்த தந்தையின் தோற்றத்தால் தான் அவமானப்படுவதாக நினைத்து அவரை விட்டு விலகி வாழும் மகன் இவர்களது வாழ்க்கைச் சம்பவங்களை இந்த படம் பேசுகிறது . .படத்தில் அன்பான தந்தையாக காத்தமுத்து என்னும் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் மரியன் நடித்துள்ளார்,தன்னுடைய உருவம் பிறரால் கேலிக்குள்ளாக்கப்பட்டாலும், தன்னுடைய மகன் மீது அளவற்ற பாசம் கொண்டவராக இருக்க கூடிய தந்தை. ஆனால் அவரது மகன் ஜிவி பிரகாஷ் அவரை விட்டு விலகி பெங்களூரில் வேலைக்கு செல்கிறார் ,அங்கு ஸ்ரீ கௌரி பிரியாவை காதலிக்கிறார், ஸ்ரீ கௌரி பிரியாவின் தந்தை அப்பாஸ் பெரும் செல்வந்தர். அவர் மகளின் காதலை ஏற்றுக் கொண்டாலும் ,ஜார்ஜ் மரியனின் உருவத்தை வைத்து அவரை அவமானப்படுத்தி விடுகிறார், இதனால் ஏற்படும் மோதலினால் திருமணம் நின்று போய் விடுகிறது. இதன் பிறகு ஜி வி பிரகாஷ் என்ன செய்கிறார் ? நின்று...
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!

சினிமா
*இராமாயணத்தின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் கீக் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டோமட்சு கோசானோவுக்கு ’சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தை பரிசளித்தார்!* இந்திய கலாச்சாரத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஜப்பானைச் சேர்ந்த கீக் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோமாட்சு கோசானோவை சந்தித்து உரையாடினார். இதுமட்டுமல்லாது, ‘சீதா ராம கல்யாணம்’ ஓவியத்தையும் அவருக்கு பரிசாக வழங்கினார். இந்திய கலாச்சாரத்தின் மீது நடிகர் அல்லு அர்ஜூன் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பையும் மரியாதையையும் இது பிரதிபலிக்கிறது. மேலும் இந்த சந்திப்பின் போது, இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் பற்றிய வரலாற்று மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தையும் அல்லு அர்ஜுன் பகிர்ந்து கொண்டார். இராமாயணத்தின் மதிப்பு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் ...
*Roll Time Studios* – தயாரிப்பில் ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

*Roll Time Studios* – தயாரிப்பில் ரியோ ராஜ் – சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

சினிமா
*Roll Time Studios* - தயாரிப்பில் ரியோ ராஜ் - சானியா ஐயப்பன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. *Roll Time Studios* தயாரிப்பில் புதிய திரைப்படமான "movie title" சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்தத் திரைப்படத்தை கலை அரசு தயாரிக்குகிறார். அறிமுக இயக்குனரான கார்த்திகேயன் BK இப்படத்தினை இயக்குகிறார். இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணை இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண் பாவம் பொல்லாதது, ஸ்வீட் ஹார்ட், ஜோ போன்ற வெற்றி படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். இருகப்பற்று, சொர்க்கவாசல் படத்தின் நாயகியாக நடித்த சானியா ஐயப்பன் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் முக்க...
*’ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*

*’ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!*

சினிமா
*'ஹபீபி’ திரைப்படத்திற்கு தனது அனுபவம் மூலம் வழிகாட்டி வலுசேர்த்துள்ளார் கஸ்தூரி ராஜா!* ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம். வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது. ’ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது. படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவ...
*ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு*

*ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு*

சினிமா
*ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு* 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் - பி. அஜித் குமார் இயக்கத்தில் ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் மார்ச் மாதம் 27 ஆம் தேதி முதல் வெளியாகும் 'முத்து என்கிற காட்டான்' பத்து அத்தியாயங்கள் கொண்ட இணையத் தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி. அஜித் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'முத்து என்கிற காட்டான்' இணையத் தொடரில் விஜய் சேதுபதி, மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், முத்துக்குமார், சிங்கம் புலி, கலைவாணி பாஸ்கர், வி ஜே பார்வதி, ரிஷா ஜேக்கப், வடிவேல் முருகன், அபி நட்சத்திரா உள்ளிட்ட பலர் நடி...
*சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*சமுத்திரக்கனி – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்’ கார் மேனி செல்வம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

சினிமா
*சமுத்திரக்கனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும்' கார் மேனி செல்வம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி-கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷ‌ன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம்...
*சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா!*

*சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா!*

சினிமா
*சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் பாரத் – சான்வே மேக்னா நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா!* தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா. தனது தனித்துவமான இசைக்காக கொண்டாடப்படும் அவர் தமிழ் திரையுலகின் இசையுலகில் புத்துயிர் ஊட்டியதாக பாராட்டப்படுகிறார். அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா. அந்த வரிசையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக இணை...
‘லவ் ஓ லவ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

‘லவ் ஓ லவ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

சினிமா
‘லவ் ஓ லவ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் Love Oh Love திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்த படத்தில் பவிஷ் நாராயணன் மற்றும் நாக துர்கா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ஒரு சிறப்பு மற்றும் நினைவாக இருக்கும் தருணமாக, படக்குழுவினர் விஜய் சேதுபதி அவர்களை, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் அவரது புதிய திரைப்படமான 'பாக்கெட் நாவல்' படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர். அங்கு அவர் மனமுவந்து “லவ் ஓ லவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, முழு படக்குழுவிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்...
மக்கள் நீதி மய்யம் தேர்தலில் நேரடி போட்டிஇல்லை. தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையின்றி அழுத்தமான ஆதரவு.

மக்கள் நீதி மய்யம் தேர்தலில் நேரடி போட்டிஇல்லை. தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு நிபந்தனையின்றி அழுத்தமான ஆதரவு.

செய்திகள்
அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது - கமல்ஹாசன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எங்களின் அடையாளமான பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஒருமித்த முடிவு. நாங்கள் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடவில்லை எனவும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும், மதவாத சூழ்ச்சியில் இருந்து விழிப்புணர்வு பெறவும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதையாக கருதுகிறேன். என்னைப் புரிந்துகொண்டு சுயநலமின்றி என்னோடு பயணிக்கும் எனது தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகள...