மனிதன் தெய்வமாகலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா
மனிதன் தெய்வமாகலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா
செல்வராகவன், கௌசல்யா, Y.Gee.மஹேந்திரன், Mime.கோபி, குஷி ரவி நடிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், A.K.பிரியன் இசையமைப்பில், சதீஷ் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் "மனிதன் தெய்வமாகலாம்". இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துக்கொண்ட விருந்தினர்கள் பேசியபோது,
இயக்குனர்/நடிகர் செல்வராகவன் பேசுகையில்,
முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும். நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்து பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள்; ஆனால் எதை எடுத்தாலும் அதைக் பெரிய அளவில், தரமாக மக்கள் முன் கொண்டு சேர்ப்பார்கள். அந்த பேனரில் ஒரு படத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்காக மிக்க நன்றி, சார்.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்...









