“ரூம் பாய்” – திரை விமர்சனம்
ஒரு சாதாரண கதையாக ஆரம்பித்து, காட்சிகள் செல்ல செல்ல சஸ்பென்ஸ் த்ரில்லராக மாறும் படம் தான் “ரூம் பாய்”.
கதையின் நாயகனான நிகில் கூர்நோக்கு மையத்தில் கல்வி கற்று முடித்த பின் ஏலகிரியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் ரூம் பாயாக பணிக்கு சேருகின்றார் அந்த சொகுசு விடுதி வெளிப்படையாக பார்ப்பதற்கு அழகாக தோன்றினாலும் , அதன் மறுபக்கம் கொடூரங்களின் கூடாரமாக உள்ளது, உள்ளே மனித நேயமே இல்லாமல் நடைபெறும் கொடுமைகள், பாலியல் அத்துமீறல்கள் ,அதிகார மீறல்கள் என அங்கு நடப்பவை அந்த சொகுசு விடுதியின் இருண்ட முகமாக இருக்கிறது .இந்த உண்மைகளை அங்கு ரூம் பாயாக பணியாற்றும் நிகில் கண்டுபிடிக்கிறார். இவைகளைக் கண்டு வெறும் சாட்சியமாக நின்று விடாமல் அந்த கொடுமைகளுக்கு எதிராக களம் இறங்கி ,அந்த சொகுசு விடுதியின் மேலாளரை கொலை செய்து விடுகிறார். இதற்கிடையில் கூர்மேற்கு மையத்தினுடைய காப்பாளரும் மாயமான வழக்கில் காவல்துறையும் ,க...









