நாகசைதன்யா- வெங்கட்பிரபு படத்தின் தொழில்நுட்ப குழு மற்றும் கிரியேட்டிவ் குழு விவரம் அறிவிப்பு!
நடிகர் நாகசைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன்னுடைய 'NC22' படத்தின் படப்பிடிப்பை துவக்கி இருக்கிறார். இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவலாக இருக்கும். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் இதுதான் முதல் தெலுங்கு படம். இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
ஸ்ரீனிவாசா சித்தூரி 'ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனர்'ரின் கீழ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். படத்தில் இன்னொரு நல்ல செய்தி 'மாஸ்ட்ரோ' இளையராஜாவும், 'லிட்டில் மாஸ்ட்ரோ' யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு படத்தின் ஆல்பத்தில் பணிபுரிவது இதுவே முதல்முறை. நடிகர் நாகசைதன்யா இதுவரை கதாநாயகனாக நடித்த படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும்.
அழகான காட்சிகளை படமாக்குவதில் திறமையான ஒளிப்பதிவாளரான SR கதிர் இந்தப் படத்தில் இணை...









