Saturday, April 25

Author: admin

குந்தவையின் தைரியத்தை போல் நானும் தைரியமாக இருப்பேன்.. #பொன்னியின்செல்வன் திரிஷா

குந்தவையின் தைரியத்தை போல் நானும் தைரியமாக இருப்பேன்.. #பொன்னியின்செல்வன் திரிஷா

சினிமா
குந்தவையின் தைரியத்தை போல் நானும் தைரியமாக இருப்பேன்.. #பொன்னியின்செல்வன் திரிஷா   நாங்கள் அனைவரும் நடிகர்கள். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்துக்குள் நுழைந்து விட்டால் நாங்கள் அனைவரும் கதாபாத்திரமாக மாறி விடுவோம்.ஆதலால் இரண்டு படங்களில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து விட்டு, இப்படத்தின் சகோதரியாகவும் நடிக்க முடிந்தது. பொன்னியின் செல்வன் வரலாற்று மற்றும் கமர்ஷியல் இரண்டும் இணைந்த படம். எனவே, எனது நடை, உடை, பாவனை, தோற்றம், குரல், பார்வை என அனைத்தையும் மொத்தமாக மாற்ற வேண்டியிருந்தது. குந்தவையின் தோற்றத்திற்காக 6 மாதங்களாக வீட்டு பாடம் செய்து பல பார்வைகளை பரிசோதித்து பார்த்தோம். கிட்டத்தட்ட 100 க்கும் மேக்கப் உடைகள் நகைகள் அணிந்து, அதில் வெவ்வேறு விதமான தோற்றங்கள் மற்றும் பார்வைகளை வரிசையாக பரிசோதித்தோம். குந்தவைக்கு இதுதான் சரியான பார்வை தேர்ந்தெடுக்கும் வரை ஒவ்வொன்ற...
 மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ பட சிங்கிள் ட்ராக் வெளியீடு

 மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ பட சிங்கிள் ட்ராக் வெளியீடு

சினிமா
 மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்' பட சிங்கிள் ட்ராக் வெளியீடு மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் 'காட்ஃபாதர்' படத்தில் இடம்பெற்ற ''தார் மார் தக்கரு மார்...' என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் 'தார் மார் தக்கரு மார்..' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த பாடலில் சிரஞ்சீவி, சல்மான் கான், பிரபுதேவா ஆகியோர் இணைந்து, நடன கலைஞர்களுடன் நடனமாடுவது பிரமிப்பாகவும், ரசிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. மெகா ஸ்டார்கள், ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருவரும் தனித்துவமாகவும், ஒப்பற்ற வகையிலும் நடனமாடி...
இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத இன்டர்வெல் காட்சி ;  சாமான்யன் -ராமராஜன்

இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத இன்டர்வெல் காட்சி ;  சாமான்யன் -ராமராஜன்

Uncategorized, சினிமா
வித்தியாசமான கதைக்களத்துடன் நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் தயாராகும் படம் சாமான்யன். கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப்பிறகு மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன் இந்தப்படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர். இந்த படத்தில் கதாநாயகியாக நக்சா சரண் என்பவர் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அச்சுராஜாமணி இசை அமைக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத்தொகுப்பை ராம்கோபி கவனிக்கிறார்.. சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைக்கிறார். இந்தப்படத்தின் பாடல்களை சினேகன் மற்று...
சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல்

சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல்

சினிமா
வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் ‘ஆதார்’ திரைக்கதைப் புத்தகம் வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய 'ஆதார்' படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் திரைக்கதையை நூலாக பதிப்பித்து, வெளியிடும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. 'பாரதி', 'பெரியார்', 'களவாணி', 'அழகர்சாமியின் குதிரை', 'அந்த நாள்', 'சத்தம் போடாதே' பாலு மகேந்திராவின் 'சந்தியா ராகம்', வசந்த்தின் 'ரிதம்', கமல்ஹாசனின் 'ஹே ராம்', வசந்தபாலனின் 'அங்காடித்தெரு', மிஷ்கினின் 'அஞ்சாதே', சமுத்திரக்கனியின் 'அப்பா' என ஏராளமான வெ...
ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை பார்த்து, ரசித்து வெகுவாக பாராட்டிய கமல்ஹாசன்

ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை பார்த்து, ரசித்து வெகுவாக பாராட்டிய கமல்ஹாசன்

சினிமா
திரு ஒய்ஜிபி துவங்கிய யுஏஏ குழுவின் 70-ம் ஆண்டு, நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61-ம் ஆண்டு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக உலகநாயகன் கமல்ஹாசன் சாருகேசி நாடகத்தை நேற்று நேரில் சென்று கண்டு மகிழ்ந்தார். நாடகம் முடிந்த உடன் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார். இது குறித்து ஓய் ஜி மகேந்திரன் கூறுகையில், "நாடகத்தை பார்த்த கமல்ஹாசன் வெகுவாக பாராட்டினார். இது போன்ற நாடகங்கள் தனக்கு மிகவும் புடிக்கும் என்று அவர் தெரிவித்தார். எங்கள் இருவருக்கும் 50 வருட கால நட்பு. மேலும் 20 படங்கள் மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். எங்களுக்கிடையே இருக்கும் நட்பை பற்றியும் அவர் நினைவுகூர்ந்தார்," என்றார். தொடர்ந்து பேசிய மகேந்திரன், "சாருகேசி நாடகத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை க...
தமிழக முதல்வரிடம் பொதுக்குழு தீர்மானங்களை வழங்கினார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்

தமிழக முதல்வரிடம் பொதுக்குழு தீர்மானங்களை வழங்கினார் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்

சினிமா, செய்திகள்
18 .09 .2022 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அரசு வழங்கும் சிறுமுதலீட்டு படங்களுக்கான மானியத் தொகையையும், 2015ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆண்டு வரைக்கான திரைப்பட விருதுகளையும், பையனூரில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் தயாரிப்பாளர்களுக்கு அடுக்கு மாடி வீடுகட்ட உதவியும், சங்க அலுவலகத்திற்கு சொந்த இடம் வழங்கக்கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்களிடம் சங்கத் தலைவர் என்.ராமசாமி வழங்கினார் அருகில், அமைச்சர் கே.என்.நேரு, சங்க செயலாளர் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் திரு.எஸ்.கதிரேசன் பொருளாளர் திரு.சந்திரபிரகாஷ் ஜெயின் செயற்குழு உறுப்பினர் திரு.விஜயமுரளி தயாரிப்பாளர் திரு.கருணாகரன் ஆகியோர் உள்ளார்கள்...
வெந்து தணிந்தது காடு” திரைப்பட நன்றி அறிவிப்பு  விழா !!!

வெந்து தணிந்தது காடு” திரைப்பட நன்றி அறிவிப்பு  விழா !!!

சினிமா
Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களை குவித்து வரும் நிலையில், படக்குழுவினர் நேற்று    பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இவ்விழாவினில்எடிட்டர் ஆண்டனி பேசியதாவது … “ இந்த படத்தை வெற்றியடைய வைத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி. ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூறியதாவது.., “ இந்த படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி. சிலம்பரசன், கௌதம் மேனன், ஏ ஆர் ரகுமான் உடன் இணைந்து இந்த படத்தில் பணிபுரிந்தது பெருமையாக இருக்கிறது. இது எனது முதல் படம், ஆனால் அதை பற்றிய பதட்ட...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்….

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்….

சினிமா, செய்திகள்
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்....பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கே.பாக்கியராஜ்..., கலைஞரின் எழுத்தால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. எனக்கு தனிப்பட்ட முறையில் கலைஞரின் எழுத்தை அதிகம் ரசிப்பவன், என்னுடைய எழுத்தை அதிகம் மதிப்பவர் கலைஞர் உடனான நட்பு நீண்டகாலமாக தொடர்பில் இருந்தவர். அதே போல் கலைஞர் எம்ஜி ஆர் ஆகிய இருவர் நிகழ்விலும் சமமாக பங்கேற்றவன் நான்..,தமிழ் திரையை பொறுத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயர் கலைஞர் பெயர்.சங்க தேர்தலுக்கு உறுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி.சமீபகாலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை ந...
வினய் ராய் நடிப்பில் கிரைம் திரில்லராக தயாராகும் ‘மர்டர் லைவ்’

வினய் ராய் நடிப்பில் கிரைம் திரில்லராக தயாராகும் ‘மர்டர் லைவ்’

சினிமா
வினய் ராய் நடிக்கும் 'மர்டர் லைவ்' நடிகர் வினய் ராய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படத்திற்கு 'மர்டர் லைவ்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் எம்.ஏ. முருகேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மர்டர் லைவ்'. இதில் நடிகர் வினய் ராய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ஷர்மிளா மாண்ட்ரே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஹாலிவுட் நடிகை நவோமி வில்லோ அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். பிரசாந்த் டி. மிஸாலே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை மதன் கவனிக்க, கிராபிக்ஸ் காட்சிகளை இங்கிலாந்தைச் சேர்ந்த டி கிரியேட்டிவ் எனும் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தை டாட் காம் எண்ட...
 ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ‘பணம் முக்கியமில்லை’ என்ற பஞ்ச் லைனுடன் வெளியாகியுள்ள ட்ரால் பாடல்!

 ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ‘பணம் முக்கியமில்லை’ என்ற பஞ்ச் லைனுடன் வெளியாகியுள்ள ட்ரால் பாடல்!

சினிமா
ஜெயந்திரா இயக்கத்தில், சயத் கான் மற்றும் சோனால் மாண்டெய்ரோ நடித்துள்ள பான் இந்தியா படமான ‘பனாரஸ்’ வருகிற நவம்பர் மாதம் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இப்போது ‘பனாரஸ்’ படத்தில் இருந்து ட்ரால் என தலைப்பிடப்பட்டுள்ள புதிய பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது. அஜ்னேஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜெஸ்ஸீ கிஃப்ட் பாடியுள்ளார். ஜெஸ்ஸீ கிஃப்ட்டின் கிறங்கடிக்கும் குரல் பார்ட்டி பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது. இளைஞர்கள் பார்ட்டியில் நிச்சயம் இந்த பாடலும் இனி இடம் பிடிக்கும். பாடலில் இடம்பெற்றுள்ள ‘பணம் முக்கியமில்லை’ என்ற பன்ச் லைன் இப்போது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ’பனாரஸ்’ திரைப்படம் ஒரு புதிரான காதல் கதையை கொண்டது. படத்தின் புரோமோஷன் மற்றும் விளம்பர உத்திகள் மக்களிடையே படம் குறித்தான எதிர்ப்பார்ப்பை ஏ...