நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகிய திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயில் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும்.உலகப்புகழ்பெற்ற இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள் .
நினைத்தாலே முக்தி தரும் இந்த தலம் பற்றிய புராணம் யாதெனில் ,நான்முகனுக்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் ஏற்பட , இடையில் நெருப்புப் பிழம்பு தோன்ற நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிகிறாரோ அவரே நம்மில் பெரியவர் என உரைத்தனர். அதன் அடியைக் காண, திருமால் வராக வடிவெடுத்து நிலத்தினைக் குடைந்து சென்று பல காலம் பயணம் செய்தும் அடியைக் காண இயலாமல் திரும்ப, அன்னம் வடிவமெடுத்து முடியைக் காணச்சென்ற நான்முகன் , வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் நீ எங்கிருந்து வருகிறாய் என கேட்க அதற்கு அது நான் சிவனாரின் தலையிலிருந்து...
