Saturday, April 25

Author: admin

செல்லம்மா நாயகன் அர்ணவ்வுடன் செவ்வந்தி நாயகி திவ்யா திருமணம்

செல்லம்மா நாயகன் அர்ணவ்வுடன் செவ்வந்தி நாயகி திவ்யா திருமணம்

சினிமா
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா.அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ,அதேபோல தற்போது செல்லமா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் அர்ணவ்.கேளடி கண்மணி தொடரில் நடித்தபோது அதில் கதாநாயகனாக நடித்த அர்ணவ்வுக்கும் இவருக்கும் இடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மலர்ந்தது. கடந்த ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அர்ணவ் முஸ்லிம் என்பதால் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி தங்களது திருமணத்தை நடத்திய இவர்கள் முறைப்படி பதிவுத் திருமணமும் செய்துள்ளனர். இந்த நிலையில் தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் திவ்யா....
சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள “ரவாளி” படத்தின் பாடல் இசையை இயக்குனர் கஸ்தூரி ராஜா வெளியிட்டார்.

சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள “ரவாளி” படத்தின் பாடல் இசையை இயக்குனர் கஸ்தூரி ராஜா வெளியிட்டார்.

சினிமா
நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர்! ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் "ரவாளி" படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் இந்திக்கார பையனை காதலிக்கும் தமிழ் பெண், அவனோடு ஓடி திருமணம் செய்தவுடன், அவன் காணாமல் போக, அவனை தேடும் கதை தான் "ரவாளி". கதாநாயகன் கதைப்படி, தமிழ் நாட்டில் வாழும் இந்திக்கார பையன் என்பதால், இயக்குனர் ரவி ராகுல், கதாநாயகன் ஆர்.சித்தார்த்க்கு நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்து, கதாநாயகனையே படத்திற்கு டப்பிங் பேச வைத்துள்ளார். ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஷா நைரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், பூ விலங்கு மோகன், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் ந...
வரலக்‌ஷ்மி சரத்குமாரின் ‘சபரி’ படத்தின் முக்கிய ஷெட்யூல் கொடைக்கானலில் நிறைவு!

வரலக்‌ஷ்மி சரத்குமாரின் ‘சபரி’ படத்தின் முக்கிய ஷெட்யூல் கொடைக்கானலில் நிறைவு!

சினிமா
'மஹா மூவிஸ்' பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் 'சபரி' படத்தில் நடிக்கும் வரலக்‌ஷ்மி சரத்குமார் இதற்கு முன்பு ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை மகரிஷி கொண்டலா வழங்குகிறார். இதன் படபிடிப்பு மிக விரைவாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கட்டத்தை சமீபத்தில் படக்குழு முடித்துள்ளது. இதன் முக்கிய காட்சிகள் இரண்டு வாரங்களாக கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கொடைக்கானல் ஷெட்யூலில் நடிகை வரலக்‌ஷ்மி மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய நடிகர்கள் நடித்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் மகேந்திர நாத் கொண்டலா தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசும்போது, "படத்தின் ஒரு பாடல், க்ளைமாக்ஸ் காட்சிகள் மற்றும் முக்கிய காட்சிகளை இந்த 14 நாட்களில் கொடைக்கானலின் அழகான இடங்களில் படமாக்கியுள்ளோம். சுசித்ரா சந்திரப...
ட்ரிகர்- திரைவிமர்சனம்

ட்ரிகர்- திரைவிமர்சனம்

சினிமா
காவல்துறையில் நேர்மையாக பணிபுரிந்து வரும் அதர்வா, ஒரு ஆபரேஷனில் தன்னிச்சையாக செயல்பட்டதால் பணி நீக்கம் செய்யப்பட , அவர் செய்த வேலைக்குத் தண்டனையாக, காவல் நிலையங்களையே கண்காணிக்கும் சிறப்பு வேலையை ரகசியமாக கொடுக்கிறார் போலீஸ் கமிஷனர் அழகம்பெருமாள்.வெளியே ரெஸ்ட்டாரண்ட் போல காணப்படும் ஒரு இடத்தில் சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அன்பு தாசன், அறந்தாங்கி நிஷா கூட்டணியில் ஐக்கியமாகிறார் அதர்வா.அங்கிருந்து அவர் நகரத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கிறார். இந்த சூழ்நிலையில் அதர்வா அந்தப் பணியில் இருக்கும் போது ஒரு குழந்தைக் கடத்தலைப் பற்றி விசாரிக்கச் செல்லும்போது குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அந்தக் கட த்தல் கூட்டத்தை பற்றிய விசாரணையில் ஈடுபடும்போது அந்த கூட்டத்துடன் உள்ள வேறு தொடர்புகளை கண்டுபிடிக்கிறார். கடத்தல், குற்றங்களைச் செய்யும் மைக்கேலாக ராகுல் தேவ் ஷெட்டி என்பதைய...
‘விஷ் 22’ கல்லூரி கலை விழாவில்  நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

‘விஷ் 22’ கல்லூரி கலை விழாவில் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சினிமா
மகளிர் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட துருவ் விக்ரம் சென்னையிலுள்ள எம் ஓ பி வைஷ்ணவ மகளிர் கல்லூரில் நடைபெற்ற ‘விஷ் 22’ (Vish 22) எனும் கல்லூரி கலை விழாவில் தமிழ் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமான இளம் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை மாநகரிலுள்ள மகளிர் கல்லூரிகளில் ஆண்டுதோறும் பல்வேறு பெயரில் கலைவிழாக்கள் நடைபெறுவது இயல்பு. இவ்விழாக்களில் பிரபலங்கள் கலந்து கொண்டு, மாணவிகளை உற்சாகப்படுத்துவதும் இயல்பு. மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க எம் ஓ பி வைஷ்ணவ கல்லூரியில் நடைபெற்ற ‘விஷ் 22’ என்ற கலைவிழாவில் இளம் நடிகர் துருவ் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் மாணவிகளின் குறும்புத்தனமான கேள்விகளுக்கு துருவ் விக்ரம் சிரித்துக்கொண்டே பதிலளித்தார். அத்துடன் அவர் எழுதி பாடிய 'மனசே..' என்ற சுயாதீன இசை ஆல்பப் பாடலையும் பாடினார். பிறகு...
ஸ்டார் விஜய் பிரத்யேகமாக ‘விஜய் டக்கர்’ எனும் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்க உள்ளனர்!!

ஸ்டார் விஜய் பிரத்யேகமாக ‘விஜய் டக்கர்’ எனும் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்க உள்ளனர்!!

சினிமா
ஸ்டார் விஜய் தமிழில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்குகிறது. இது குறித்து வெளியான பரபரப்பான டீசரைத் தொடர்ந்து, மிக அட்டகாசமான ப்ரமோ ஸ்டார் விஜய் மற்றும் அதன் சமூகக் வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ‘விஜய் டக்கர்’ தமிழக மண்ணின் இளைஞர்களை கவரும் வகையிலான பல அட்டகாசமான உள்ளடக்கத்தை கொண்டிருக்கும். புதிய இளமை எனும் டேக் லைனுடன்  இளைஞர்களுக்கான புதிய சேனலாக இது வருகிறது. விஜய் டக்கர் - ‘இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’ விஜய் டக்கர் சேனல் இன்றைய இளைஞர்களுக்கான ஒரு பொழுது போக்கு பிராண்டாக  இருக்கும். பொழுதுபோக்கு துறையில் டிரெண்ட்செட்டராக செயல்படும் சேனலாக இது இருக்கும். அதற்கு ‘விஜய் டக்கர் - இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’ என்ற டேக்லைன் மிகப் பொருத்தமானதாக இருக்கும். ‘விஜய் டக்கர்’  Non Fiction வகையில், திரைப்படங்கள் மற்றும் இசை என இளைஞர்களுக்கான  முழுக்கலவையை  கொண்டுள்ள...
RAJTV நெட்வொர்க் RAJ DIGITAL TV APPஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் டிஜிட்டல் OTT தளத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது

RAJTV நெட்வொர்க் RAJ DIGITAL TV APPஐ அறிமுகப்படுத்தியதன் மூலம் டிஜிட்டல் OTT தளத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது

சினிமா
ராஜ் தொலைக்காட்சி நெட்வொர்க் (RAJTV) தமிழ், தெலுங்கு மற்றும் பிற மொழித் திரைப்படங்கள் என அருமையான திரைப்படங்களின் தொகுப்புடன் கூடிய முன்னணி தனியார் தொலைக்காட்சிகளில் ஒன்று. ராஜ் டிஜிட்டல் டிவியை அறிமுகப்படுத்தியதன் மூலம் சந்தா அடிப்படையிலான வீடியோ ஆன் டிமாண்ட் சந்தையில் இந்நிறுவனம் நுழைகிறது, மற்ற சந்தா சேவைகளைப் போலவே, இதுவும் Android, iOS மற்றும் இணையத்தில் கிடைக்கும். RAJ DIGITAL TV OTT, AIRTEL IQ உடன் தொழில்நுட்பக் கூட்டணி அமைத்துள்ளது. ராஜ் டிஜிட்டல் டிவி OTT ஆனது சிறந்த தொழில்நுட்பத்துடன் Airtel IQ ஆல் உருவாக்கப்பட்டது. ராஜ் டிஜிட்டல் டிவி தமிழ் மொழியில் 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் தொகுப்பை வழங்குகிறது, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 4 தென்னிந்திய மொழிகளில் இசை வீடியோக்கள், சுவாரசியமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி தொலைக்காட்சி (Live T...
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சினிமா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழில் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நடிகைகள் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பின்னனி இசையை விஷால் சந்திரசேகர் கவனித்து கொள்ள பாடல்களை அஜ்மல் இசையமைத்திருக்கிறார். டார்க் காமெடி ஜானரில் தயாராகி இருக...
‘பபூன்’- திரைவிமர்சனம்

‘பபூன்’- திரைவிமர்சனம்

சினிமா
காரைக்குடி பகுதியில் நாடக குழு ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும் குமரன் (வைபவ்) மற்றும் முத்தையா(ஆத்தங்குடி இளையராஜா) இருவரும் தற்போதய காலசூழ்நிலையில் நாடக தொழில் மக்களி டையே ஆதரவை இழந்து வருவதால் அயல்நாடு சென்று சம்பாதிக்க முடிவெடுக்கின்றனர் ஆனால் வெளிநாடு செல்லுவதற்கான பணம் இல்லாததால் ஒரு கடத்தல் கும்பலிடம் தற்காலிகமாக லாரி ஓட்டுநராக குமரனும், முத்தையாவும் வேலைக்கு சேர்கின்றனர்.அவர்கள் செல்லும் லாரியில் போதைப்பொருள் இருப்பதை காவல் துறை கண்டுபிடித்துவிட, அவர்களிடமிருந்து தப்பித்து செல்லுகின்றனர், இறுதியில் அவர்களை காவல்துறை கண்டுபிடித்ததா? கடத்தல் கும்பலிலிருந்து அவர்கள் தப்பித்தார்கள்? - என்னும் வினைகளுக்கு விடை தரும் படம்தான் 'பபூன்'. தான் நடிக்கும் படங்களில் தன் பங்கை குறைவில்லாமல் வெளிப்படுத்தி நடிக்கும் வைபவ் இந்த படத்திலும் வாழ்க்கை போராட்டத்தில் போராடி வெற்றிபெறும் இளைஞனை பிரத...
ஆதார்- திரை விமர்சனம்

ஆதார்- திரை விமர்சனம்

சினிமா
ஒரு கார்பரேட் கம்பெனியை காப்பாற்ற, அதிகாரம், அரசியல், பணம் இவற்றை பயன்படுத்துதன் மூலம் ஒரு சாமன்யனின் வாழ்க்கை எப்படி நிலைகுலைகிறது என்பதே இப்படத்தின் மையக்கதை அன்றாடம் வேலை செய்து உழைத்து தன மனைவி மக்களை காப்பாற்றும் நாயகனை அதிகாரவர்க்கமும் பணபலமும் சேர்ந்து உண்மையை பொய் என சொல்ல சொல்லும் கதையில் நிறைவான நடிப்பை தந்து ரசி கர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் கருணாஸ் .மனைவியை இழந்து கைக்குழந்தையோடு சட்டப் போராட்ட த்துடன் சரியான தீர்வு தேட நினைக்கும் நாயகனை அதிகாரவர்க்கம் சமாளிக்கிறதே தவிர, அவருக்கு சரியான நீதியை தரவில்லை ,இப்படிப்பட்டமொத்த திரைக்கதையையும் சுமந்து படம் முழுவதும் கருணாஸ் திறம்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சென்னையில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்க்கும் பச்சை முத்து (கருணாஸ்) தன் மனைவியை (ரித்விகா) மகப்பேற்றுக்காக மருத்துவமனையில் சேர்கிறார். குழந்தை பிறந்த பிறகு அவரத...