நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படம் ‘ரெஜினா’.க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. ஸ்டார்’ போன்ற படங்களின் மூலம் மலையாள திரையுலகில் நன்கு அறியப்பட்ட டொமின் டி’சில்வா இதனை இயக்குகிறார். ‘பிப்பின் சுவத்திலே பிராணாயாம்’ ஹிட் மலையாள படத்தை தொடர்ந்து இப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.இப்படத்தை சதீஷ் நாயர் தனது யெல்லோ பியர் புரொடக்ஷன்ஸ் ( Yellow Bear Production LLP ) பேனரில் தயாரித்துள்ளார்.அவர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.யெல்லோ பியர் புரொடக்ஷன்ஸ் மற்றும் டைம்ஸ் மியூசிக் இடையேயான படத்தின் இசை உரிமைக்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது.
தனது வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான நாள் என்றும், படம் முழுவதும் பெரும் ஆதரவாக இருந்ததற்காக தனது குடும்பத்தினர் அனைவருக்கும் தனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள், பத்திரிகை மற்றும் மீடியா நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
படத்தின் முக்கிய பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும், வந்தனா ஶ்ரீனிவாசன், சின்மயி, மாலதி, ஷாம், கல்பனா, ஹர்மோனிஸ், ப்ரியா ஹமேஷ், தீபாலி சாத்தே, பூமி திரிவேதி, பிஜேஷ் ஷந்திதியா, டாக்டர் அபர்ணா, ரம்ய நம்பீசன், வைக்கம் விஜயலக்ஷ்மி, ரிமி டோம்னி பாடியுள்ளார்கள்.தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
“SN Musicals” மூலம் பல சுயாதீன பாடல்களை தந்த இசையமைப்பாளர் சதீஷ் நாயர் இப்படத்திற்கு இசைமைக்கிறார். பாடல்களுக்கான வரிகளை தமிழில் யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R ,
தெலுங்கில் ராகெண்டு ( rakendu ), இந்தியில் ராஷ்மி விராக் ( Rashmi Virag ), மலையளத்தில் ஹரி நாராயண் ( Hari Narayan ) எழுதியுள்ளனர்.
பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார்.
ரெஜினா பன்மொழி திரைப்படமாக தமிழில் படமாக்கப்பட்டு இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.
[5:09 pm, 21/09/2022] Pro Johnson Mano: Times Music has bagged the Music Rights of the film ‘REGINA’