காவல்துறையில் நேர்மையாக பணிபுரிந்து வரும் அதர்வா, ஒரு ஆபரேஷனில் தன்னிச்சையாக செயல்பட்டதால் பணி நீக்கம் செய்யப்பட , அவர் செய்த வேலைக்குத் தண்டனையாக, காவல் நிலையங்களையே கண்காணிக்கும் சிறப்பு வேலையை ரகசியமாக கொடுக்கிறார் போலீஸ் கமிஷனர் அழகம்பெருமாள்.வெளியே ரெஸ்ட்டாரண்ட் போல காணப்படும் ஒரு இடத்தில் சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அன்பு தாசன், அறந்தாங்கி நிஷா கூட்டணியில் ஐக்கியமாகிறார் அதர்வா.அங்கிருந்து அவர் நகரத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கிறார். இந்த சூழ்நிலையில் அதர்வா அந்தப் பணியில் இருக்கும் போது ஒரு குழந்தைக் கடத்தலைப் பற்றி விசாரிக்கச் செல்லும்போது குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அந்தக் கட த்தல் கூட்டத்தை பற்றிய விசாரணையில் ஈடுபடும்போது அந்த கூட்டத்துடன் உள்ள வேறு தொடர்புகளை கண்டுபிடிக்கிறார். கடத்தல், குற்றங்களைச் செய்யும் மைக்கேலாக ராகுல் தேவ் ஷெட்டி என்பதையும்,, அவராலேயே பாதிக்கப்பட்டவர்தான் தனது அப்பா சத்தியமூர்த்தி (அருண் பாண்டியன்) என்பதையும் .அதர்வா அறிகிறார் இறுதியில் குழந்தைகள் எப்படி? எதற்காக கடத்தப்படுகிறார்கள்? கடத்தல் கூட்டத்துக்கும் நாயகனுக்கும் ஆன மோதலில் யார்வென்றார்கள் ? என்ற கேள்விகளுக்கு விடை தருகிறது விகளுக்கு எஞ்சிய படத்தின் கதை.
ட்ரிகர் படத்தில் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் அதிரடி ஆக்ஷன் மற்றும் எமோஷன் காட்சிகளில் விறுவிறுப்பான காவல் துறை அதிகாரியாக அதர்வா சிறப்பாக நடித்திருக்கிறார். அதர்வாவுக்கு ஜோடியாக ஜனனியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்து இருக்கிறார் . இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகளோ , டூயட் பாடல்களோ இல்லை
அதர்வாவின் தந்தையாக சத்தியமூர்த்தி என்னும் கதாப்பாத்திரத்தில் அருண் பாண்டியன் மறதி நோயால் பாதிக்கப்பட்ட முதியவராக கண்களால் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ,ராகுல் தேவ் ஷெட்டி தன்னுடைய அசத்தலான நடிப்பின் மூலம் மிரட்டியுள்ளார்
கூர்கா, டார்லிங் ,100 போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார், இவர் அதர்வாவுடன் இணையும் இரண்டாவது படம் இது . கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவும் ஜிப்ரனின் பின்ணனி இசையும் ரூபனின் படத்தொகுப்பும் இயக்குனரின் வேகத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது
ஆக்ஷன் திரில்லர் கதைகளை விரும்பும் இளையதலைமுறையினருக்கு ட்ரிகர் ஏமாற்றம் தராது.