Saturday, April 25

Author: admin

அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’

அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் ‘ஜுனியர்’

சினிமா
நடிகர் கிரீட்டி நடிக்கும் முதல் படம் ‘ஜுனியர்’ கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும், அரசியல்வாதியும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டியின் மகனான கிரீட்டி நடிகராக அறிமுகமாகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று மாலை அவர் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘ஜுனியர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட திரையுலகில் நடிகர் கிரீட்டி புதுமுக நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான தொடக்க விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னணி நட்சத்திர இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, '' கிரீட்டி நடிகராக அறிமுகமாவதற்கு தன்னுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார். அவர் கடினமாக உழைத்து பெரிய உயரத்தை எட்டுவார்'' என பாராட்டினார். இவர் திரைத்துறையில் அறிமுகமாகும் போது பெயரிடப்படாத அந்தப் படத்தின் டீசர் வெளியாக...
சாருஹாசன், மோகனை தொடர்ந்து கதையின் நாயகனாக ‘பவுடர்’ மூலம் நிகில் முருகனை கதைநாயகனாக களமிறக்கும் விஜய்ஸ்ரீ ஜி

சாருஹாசன், மோகனை தொடர்ந்து கதையின் நாயகனாக ‘பவுடர்’ மூலம் நிகில் முருகனை கதைநாயகனாக களமிறக்கும் விஜய்ஸ்ரீ ஜி

சினிமா
பல வெற்றிப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்று நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சாருஹாசனை 'தாதா 87' திரைப்படம் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியவரும், பல வெள்ளி விழா படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற நடிகர் மோகனை வைத்து 'ஹரா' படத்தை இயக்கி வருபவருமான விஜய்ஸ்ரீ ஜி, 26 வருடங்களாக வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக கேமராவிற்கு பின் இருந்த நிகில் முருகனை கேமராவிற்கு முன் 'பவுடர்' படம் மூலம் அறிமுகப்படுத்துகிறார். இந்த மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் தன்னையும் கதையையும் நம்பி மட்டுமே இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி துணிச்சலான முயற்சிகளில் ஈடுபடுவது ஆகும். படத்தை பற்றி விஜய்ஸ்ரீ ஜி கூறுகையில், அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரு முகமூடி அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். அதை தான் பவுடர் குறிக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்து தப்பாக கணிக்கக்கூடாது. பவ...
 ‘தி சான்ட்மேன்: ஆக்ட் III ‘ எனும் ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன்

 ‘தி சான்ட்மேன்: ஆக்ட் III ‘ எனும் ஆடியோ நாடகத்தில் குரல் கொடுத்திருக்கும் ஸ்ருதிஹாசன்

சினிமா
நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், சர்வதேச அளவில் பிரபலமாகியிருக்கும் ஆடியோ நாடகமான 'தி சான்ட்மேன்: ஆக்ட்'எனும் தொடரின் மூன்றாம் பாகத்தில் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார். கிராபிக் நாவல்களையும் ஆடியோ நாடகங்களையும் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான டிசி நிறுவனம், பிரத்யேகமாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிடும் நாடகங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் பெயரிலான ஆடியோ நாடகத்திற்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' எனும் ஆடியோ நாடகத்தின் மூன்றாம் பாகத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், வேர்ல்ட்ஸ் எண்ட் இன் ( World End Inn) ல் ஒரு வீட்டு பணிப்பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இது தொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், '' இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்...
இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு காரை பரிசளித்த ‘ஆதார்’ பட தயாரிப்பாளர்

இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு காரை பரிசளித்த ‘ஆதார்’ பட தயாரிப்பாளர்

சினிமா
'ஆதார்' படத்தின் விமர்சனங்களை தொகுத்து ஆல்பமாக வெளியிட விருப்பம் -இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேச்சு நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான திருமதி சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார். ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை தமிழக முழுவதும் வெளியிட்ட சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேசுகையில், '' ‘ஆதார்’ படத்தினை இயக்கும் வாய்ப்பளித்த என்னுடை...
மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் சஞ்ஜீவன்

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் சஞ்ஜீவன்

சினிமா
தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம் சஞ்ஜீவன் மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார். இப்படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கையாள, ஸ்டண்டை ஃபயர் கார்த்தி மேற்கொண்டுள்ளார். இப்படத்தை பற்றி இயக்குனர் மணி சேகர் கூறியதாவது, நான் இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர்...
திருவிளையாடல் படத்திற்குப் பிறகு பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு தான் 3 தலைமுறைகளும் திரையரங்கிற்கு வர ஆர்வமாக இருக்கிறார்கள் – நடிகர் விக்ரம்

திருவிளையாடல் படத்திற்குப் பிறகு பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு தான் 3 தலைமுறைகளும் திரையரங்கிற்கு வர ஆர்வமாக இருக்கிறார்கள் – நடிகர் விக்ரம்

சினிமா
பொன்னியின் செல்வன் – 1 படத்திற்கு இணையதள சர்வர் முடங்கும் அளவிற்கு வரலாறு காணாத முன்பதிவு நடக்கிறது – லைகா தமிழ்குமரன் பொன்னியின் செல்வன் – 1 பத்திரிகையாளர் சந்திப்பு  நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, மொத்த குழுவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கு சென்றாலும் அந்த மாநிலத்திற்கான பாரம்பரிய நடனங்களோடு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள். நாளைக்கு படம் வெளியாகிறது. நேரம் நெருங்க நெருங்க பயமாக இருக்கிறது. ஆனால், படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த வாய்ப்பு கொடுத்த மணி சாருக்கு நன்றி என்றார். நடிகர் விக்ரம் பேசும்போது, ஆங்கில படங்களில் பிரேவ் ஹார்ட் போன்ற பல படங்களில் பல கனவு பாத்திரங்கள் இருக்கின்றது. ஆனால், அதைவிட நமது நாட்டில் எண்ணற்ற வீரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதில் என்னுடைய கனவு கதாபாத்திரமான ஆதித்ய கரிகாலன் பாத்திரத்தையே மணி சார் எனக்கு கொட...
21 படங்களுக்கு மேல் பல கதாபாத்திரங்களில் நடித்துவரும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

21 படங்களுக்கு மேல் பல கதாபாத்திரங்களில் நடித்துவரும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார்

சினிமா
21 படங்களுக்கு மேல் பல கதாபாத்திரங்களில் நடித்துவரும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். அது மட்டுமின்றி தற்போது 21 படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். நாயகனாகவும், முதன்மை கதாபாத்திரமாகவும், வில்லனாகவும் பல பாத்திரங்களில் நடித்து வருவதாக பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் பத்திரிகை ஊடக நண்பர்களோடு கலந்துரையாடும் நிகழ்வில் நடிகர் சரத்குமார்கூறியுள்ளார்.  ...
‘பனாரஸ்’ ஒரு வித்தியாசமான டைம் லைன் காதல் கதை

‘பனாரஸ்’ ஒரு வித்தியாசமான டைம் லைன் காதல் கதை

சினிமா
  '’பனாரஸ்’ காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்” மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரவிச்சந்திரன். ‘கே.ஜி.எஃப்’, ‘கே..ஜி..எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப்படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’. ‘புயூட்டிஃபுல் மனசுகுலு’,’பெல்பாட்டம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கியுள்ள இப்படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை அத்வைதா குருமூர்த்தி கவனிக்க, அஜனீஷ்...
“மஞ்சக்குருவி” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

“மஞ்சக்குருவி” படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

சினிமா
V.R Combines விமலா ராஜநாயகம் தயாரிப்பில், சௌந்தர்யன் இசையில், "மஞ்சக்குருவி" படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குனர்கள் பேரரசு, ரவி மரியா, சண்முகசுந்தரம், ஹரிதாஸ் ரைட்டர் வெங்கடேஷ், தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர். பத்திரிகையாளர் சங்க தலைவி கவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஒரு ராஜாளி பறவையை 'மஞ்சக்குருவி'யாக மாற்றுவதுதான் படத்தின் கதை. அண்ணன், தங்கை பாச போராட்டம் கதையின் உயிரோட்டம். கிஷோர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். வில்லனாக குங்ஃபூ மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் அரங்கன் சின்னதம்பி, இசை...
சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட, பொன்னியின் செல்வன்  திரைப்படத்திற்கு பிறகு அவர்களை பற்றி தெரியவரும்-சரத்குமார் பேச்சு

சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட, பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு அவர்களை பற்றி தெரியவரும்-சரத்குமார் பேச்சு

சினிமா
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் குறித்தும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் இன்று பத்திரிகை ஊடக நண்பர்களோடு கலந்துரையாடினார் நடிகர் சரத்குமார். இந்நிகழ்வில் சரத்குமார் கூறியதாவது... பலராலும் பல காலம் முயற்சி செய்த பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்னமும், லைகா புரொடக்‌ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பல பெரிய நடிகர்களை ஒருங்கிணைத்து இந்த படத்தை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார்கள். முழு நாவலையும், கதாபாத்திரங்களையும் எட...