Wednesday, June 19

ஆதார்- திரை விமர்சனம்

ஒரு கார்பரேட் கம்பெனியை காப்பாற்ற, அதிகாரம், அரசியல், பணம் இவற்றை பயன்படுத்துதன் மூலம் ஒரு சாமன்யனின் வாழ்க்கை எப்படி நிலைகுலைகிறது என்பதே இப்படத்தின் மையக்கதை

அன்றாடம் வேலை செய்து உழைத்து தன மனைவி மக்களை காப்பாற்றும் நாயகனை அதிகாரவர்க்கமும் பணபலமும் சேர்ந்து உண்மையை பொய் என சொல்ல சொல்லும் கதையில் நிறைவான நடிப்பை தந்து ரசி கர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் கருணாஸ் .மனைவியை இழந்து கைக்குழந்தையோடு சட்டப் போராட்ட த்துடன் சரியான தீர்வு தேட நினைக்கும் நாயகனை அதிகாரவர்க்கம் சமாளிக்கிறதே தவிர, அவருக்கு சரியான நீதியை தரவில்லை ,இப்படிப்பட்டமொத்த திரைக்கதையையும் சுமந்து படம் முழுவதும் கருணாஸ் திறம்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

சென்னையில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்க்கும் பச்சை முத்து (கருணாஸ்) தன் மனைவியை (ரித்விகா) மகப்பேற்றுக்காக மருத்துவமனையில் சேர்கிறார். குழந்தை பிறந்த பிறகு அவரது மனைவி காணாமல் போகிறார்,அவருக்கு உதவியாக இருந்த இனியாவும் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். பச்சை குழந்தையுடன் காவல்நிலையம் செல்லும் கருணாஸ் அங்கு தன் மனைவியை காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். இதே சூழ்நிலையில் விலையுயர்ந்த கார் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தில் சிக்குகிறது. இதை மறைக்க பார்க்கும் கார் கம்பெனி என்ற மற்றொரு புகாரும் வருகிறது. இந்த இரண்டு புகார்களையும் காவல்துறை எப்படி விசாரிக்கிறது ?அப்போது அவர்கள், சொல்லும் ஒரு அதிர்ச்சி தகவலை நம்ப மறுக்கிறார் பச்சைமுத்து(கருணாஸ்) இறுதியில் அவர் மனைவிக்கு என்னதான் ஆனது ?சூழ லுக்கு என்னதான் காரணம்? இப்படிப்பட்ட விடை அறியா கேள்விகளுக்கு விடை தருகிறது வெள்ளித்திரையின் எஞ்சிய கதை

கதையில் முக்கிய கதாபாத்திரமாக வரும் அருண்பாண்டியனின் நடிப்பு மிகவும் தத்ரூபமாக உள்ளது அவர் கதாநாயகனாய் நடித்த காலங்களில் கூட வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தி துள்ளார். ரித்விகா, இனியா, உமா ரியாஸ் கான் என இவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களின் தன்மையை உணர்ந்து நிறைவாய் நடித்துள்ளார்கள்

கருத்தாழமிக்க கதைக்கு மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு சிறப்பான ஒளி வடிவம் கொடுத்துள்ளது .சாமான்யனின் கதை வாழ்வியலை யதார்த்தமான படமாக்கி தந்தமைக்காக இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாரை நெஞ்சார பாராட்டலாம், இயக்குநரின் கதையோட்டத்திற்க்கு ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும், ஆர்.ராமரின்படத்தொகுப்பும் பக்கபலமாய் உள்ளது .

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிப்பில் முத்திரை பதித்திருக்கும் கருணாஸ் மற்றும் படக்குழுவினருக்கு விருதுகள் பல காத்திருக்கின்றன என்று உறுதியாய் சொல்லலாம் .

Spread the love