Friday, January 24

‘பபூன்’- திரைவிமர்சனம்

காரைக்குடி பகுதியில் நாடக குழு ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும் குமரன் (வைபவ்) மற்றும் முத்தையா(ஆத்தங்குடி இளையராஜா) இருவரும் தற்போதய காலசூழ்நிலையில் நாடக தொழில் மக்களி டையே ஆதரவை இழந்து வருவதால் அயல்நாடு சென்று சம்பாதிக்க முடிவெடுக்கின்றனர் ஆனால் வெளிநாடு செல்லுவதற்கான பணம் இல்லாததால் ஒரு கடத்தல் கும்பலிடம் தற்காலிகமாக லாரி ஓட்டுநராக குமரனும், முத்தையாவும் வேலைக்கு சேர்கின்றனர்.அவர்கள் செல்லும் லாரியில் போதைப்பொருள் இருப்பதை காவல் துறை கண்டுபிடித்துவிட, அவர்களிடமிருந்து தப்பித்து செல்லுகின்றனர், இறுதியில் அவர்களை காவல்துறை கண்டுபிடித்ததா? கடத்தல் கும்பலிலிருந்து அவர்கள் தப்பித்தார்கள்? – என்னும் வினைகளுக்கு விடை தரும் படம்தான் ‘பபூன்’.

தான் நடிக்கும் படங்களில் தன் பங்கை குறைவில்லாமல் வெளிப்படுத்தி நடிக்கும் வைபவ் இந்த படத்திலும் வாழ்க்கை போராட்டத்தில் போராடி வெற்றிபெறும் இளைஞனை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாய் நடித்துள்ளார் பாடகரான ஆத்தங்குடி இளையராஜாவுக்கு இது அறிமுக படம். தொடர்ந்து பல படங்கள் இவருக்கு கிடைக்க அஸ்திவாரம் போட்டுள்ளார் இலங்கைச் சேர்ந்த அகதிப்பெண்ணாக  நாயகி அனேகா நடித்துள்ளார் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியுள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஆடுகளம் நரேன்,மதுரை எம் பி விஸ்வநாதன் இவர்களின் நடிப்பும் குறையின்றி உள்ளது .

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ போன்ற படங்களில் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அசோக் வீரப்பன், ‘பஃபூன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார் .அதிரடி அரசியல் கதைக்களம் கொண்ட படமாக பஃபூனை உருவாய்க்கிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசையும் தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவும் வெற்றிகிருஷ்ணனின் படத்தொகுப்பும் இயக்குனரின் பங்குக்கு மேலும் வலு சேர்த்துள்ளது .

நாடக கலைஞர்களின் வாழ்வியல் சார்ந்த பின்புலங்களை பற்றி பேசும் காட்சிகளுடன் கதையோட்டம் பயணித்திருந்தால் இன்னுமும் ரசிகர்களை பஃபூன் கவர்ந்திருப்பான் என்றே சொல்லலாம்.

Spread the love