விரைவில் வெளிவரவுள்ள பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட ‘சாணி காயிதம்’ தமிழ் ஆக்ஷன்-திரைப்படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது
ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பேனரின் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வரும் இச்சித்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
பிரைம் உறுப்பினர்கள் மே 6 முதல் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இத்திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்
மும்பை, இந்தியா—26 April, 2022 —அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளிவரவுள்ள தமிழ் அதிரடி சித்திரமான சாணி காயிதம் படத்தின் டிரெய்லரை பிரைம் வீடியோ இன்று வெளியிட்டது. கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மற்றும் பழிக்குப் பழி வாங்கும் கதைக்களம் கொண்ட இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. சாணி காயிதம் திரைப்படம் பிரைம் வீடியோவில் 6 May முதல் பிரத்யேகமாக 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் திரையிடப்படும். இப்படம் தெலுங்கில் சின்னி என்றும் ம...









