Tuesday, May 26

Author: admin

ஜீவி-2 படத் தயாரிப்பில் மும்முரம் காட்டிவரும் மாநாடு படத் தயாரிப்பாளர்

ஜீவி-2 படத் தயாரிப்பில் மும்முரம் காட்டிவரும் மாநாடு படத் தயாரிப்பாளர்

சினிமா
வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது. அதேசமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது. கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி.. இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது.. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும்...
நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது

நடிகர் மனோபாலா, பூச்சி முருகனுக்கு சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது

சினிமா
பிரபல நடிகர் மற்றும் இயக்குநருமான மனோபாலாவுக்கும், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம் கெளரவித்துள்ளது. இதுதவிர, திரைத்துறைக்கு இத்தனை வருடங்களாக மனோபாலா ஆற்றியுள்ள சிறப்பான சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் அவருக்கு வழங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல உயர் கல்வி நிறுவனமான சவுத் வெஸ்டர்ன் அமெரிக்க பல்கலைக்கழகம், டாக்டர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் எனும் கௌரவ முனைவர் பட்டத்தை மனோபாலாவின் நீண்டகால திரைப்பணிக்காக வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றிவரும் பூச்சி முருகனுக்கும் அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மனோபாலாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி உ...
ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ டிரைலர் வெளியீடு

ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘பயணிகள் கவனிக்கவும்’ டிரைலர் வெளியீடு

சினிமா
நடிகர் விதார்த் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'பயணிகள் கவனிக்கவும்' படத்தின் முன்னோட்டம் வெளியானது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களது இணையப்பக்கத்தில் வெளியிட்டனர். இயக்குநர் எஸ். பி. சக்திவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'பயணிகள் கவனிக்கவும்'. இந்த திரைப்படத்தில் நடிகர் விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, மாசூம் சங்கர், சரித்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஷாம்நாத் நாக் இசை அமைத்திருக்கிறார். மலையாளத்தில் 'விக்ருதி' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தின் தமிழ் பதிப்பான 'பயணிகள் கவனிக்கவும்' படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் த...
அசத்தலான குடும்ப சித்திரமாக, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் “ஓ மை டாக்” திரைப்படம், பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது !

அசத்தலான குடும்ப சித்திரமாக, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் “ஓ மை டாக்” திரைப்படம், பிரபலங்கள் மற்றும் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது !

சினிமா
பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டு மழையில், அமேசான் ஒரிஜினல் திரைப்படம் “ஓ மை டாக்” ! அமேசான் பிரைம் வீடியோ சமீபத்தில் உலகளவில் ஒரு அசத்தலான ஃபேமிலி எண்டர்டெய்னராக, 'ஓ மை டாக்', படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு சிறு நாய்க்குட்டி சிம்பா மற்றும் ஒரு குட்டிப்பையன் அர்ஜுன் (ஆர்ணவ் விஜய்) பற்றிய அழகான கதையை சொல்லும் இப்படம் பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது. ஒரு திரைக்குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை சேர்ந்தவர்களில், பழம்பெரும் நடிகர் விஜய் குமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகியோர் இப்படத்தில் முதல்முறையாக இணைந்து நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்கள். இப்படம் பார்வையாளர்களிடம் மட்டுமில்லாமல், திரைத்துறை பிரபலங்களிடமிருந்தும் பெரும் அன்பைப் பெற்று வருகிறது, அவர்கள் இணையமெங்கும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் படத்தைப் பற்றிய பாராட்டு வார்த்தைகளைப் பகி...
ஆஹா தமிழில் ஜீவியின் செல்ஃபியை தொடர்ந்து ஐங்கரன் வெளியாகிறது

ஆஹா தமிழில் ஜீவியின் செல்ஃபியை தொடர்ந்து ஐங்கரன் வெளியாகிறது

சினிமா
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது. இரண்டு படங்களில் டிரைலர்களை பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் உரக்கக் கத்தி, தங்கள் ஆரவாரத்தை வெளிப்...
Infiniti Film Ventures வழங்கும், CS அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் டப்பிங் பணிகள்  பூஜையுடன், துவங்கியது !

Infiniti Film Ventures வழங்கும், CS அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன், துவங்கியது !

சினிமா
Infiniti Film Ventures வழங்கும், இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில்,நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் டப்பிங் பணிகள் எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது ! விஜய் ஆண்டனியின் “ரத்தம்” படத்தின் முழு பணிகளும் கச்சிதமான ஒழுக்கத்துடன் நடந்தேறி வருகிறது. Infiniti Film Ventures நிறுவனத்தின் திறமையான திட்டமிடல் பணியில் காட்டும் தீவிரம், ஆகியவற்றால் தயாரிப்பு சரியான வேகத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில் தான், இப்படத்தின் இந்திய ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். வெளிநாட்டு படப்பிடிப்பை படக்குழு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் இன்று (ஏப்ரல் 23, 2022) காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது. “ரத்தம்” படத்தை இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார் மற்றும் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ...
ஆதிராஜன் தயாரித்து இயக்கும் “மாஸ்க்”!!

ஆதிராஜன் தயாரித்து இயக்கும் “மாஸ்க்”!!

சினிமா
சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் 'அருவா சண்ட' , இளையராஜா இசையில் 'நினைவெல்லாம் நீயடா', படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் "மாஸ்க்". சமீபத்தில் மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மைத்துனரும் சிறுவயதிலேயே தேசிய விருது பெற்றவருமான விஜய ராகவேந்திரா இப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.தற்போது சசிகுமாருடன் "காமன் மேன்" படத்தில் நாயகியாக நடித்து வருபவரும், தெலுங்கு கன்னட திரையுலகின் முன்னணி நடிகையுமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடிக்கிறார்.மாஸ்க்கில் நடிப்பிலும், கவர்ச்சியிலும் வேறுவிதமான ஹரிப்ரியாவைப் பார்க்கலாம். தென்னிந்திய மொழிப் படங்களில் பிரபலமான மேக்னா நாயுடு ஒரு பாடலுக்கு அசத்தலாக நடனமாடியிருக்கிறார்.மற்றும் ஐஸ்வர்யா, விஷால் ஹெக்டே, மது உட்பட பலர...
Olympia Movies S. அம்பேத் குமார்  வழங்கும்,இயக்குநர் கணேஷ்  K பாபு இயக்கத்தில்,கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில்,  “டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

Olympia Movies S. அம்பேத் குமார்  வழங்கும்,இயக்குநர் கணேஷ்  K பாபு இயக்கத்தில்,கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில்,  “டாடா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

சினிமா
Olympia Movies சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார், பல தரமான திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார்,  அவை தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில்  உள்ளன. அவற்றில் ஒன்று அவரது “புரடக்சன்: 4”, இப்படத்தினை அறிமுக இயக்குநர் கணேஷ் K பாபு இயக்குகிறார், இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஒரு அழகான காதல் திரைப்படமாக உருவாகும் இப்படம் பார்வையாளர்களுக்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும். நடிகர் கவினுக்கென ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவரது ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் தலைப்பான “டாடா” இன்று  கோலகலமாக வெளியிடப்பட்டது. பட தலைப்பு குறித்து இயக்குநர் கணேஷ் K பாபு கூறுகையில், அனைவருக்க...
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது சாதனைகளுக்காக விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார்

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது சாதனைகளுக்காக விருது பெற்று உரையாற்றிய ராதிகா சரத்குமார்

சினிமா
திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளா ராதிகா சரத்குமார், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும்...
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் “சாணிக்காயிதம்”  திரைப்படத்தின் உலகளாவிய சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ !

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் “சாணிக்காயிதம்”  திரைப்படத்தின் உலகளாவிய சிறப்புக் காட்சி வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ !

சினிமா
பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள சாணிக்காயிதம் திரைப்படத்தினை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். எல்லை இல்லா வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள்,  டிவி தொடர்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, ஆகியவையுடன் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பில் உள்ள பொருட்களை இணையம் மூலம் தேர்வு செய்யும் வசதியுடன்,   விரைவாகவும் இலவசமாகவும் நேரடியாக விநியோகம் செய்தல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபை...