Saturday, February 8

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பிரண்டை துவையலை எளிதாக செய்வது எப்படி?

பிரண்டை துவையல்
தேவையான பொருட்கள்
.
தோல் சீவிய பிரண்டை – ஒரு கப்
புளி           –         எலுமிச்சை அளவு
பூண்டு      –          ஒன்று
இஞ்சி       –         சிறிதளவு
வரமிளகாய் –  காரத்திற்கு ஏற்ப
நல்எண்ணெய் –  2 டேபிள் ஸ்பூன்
கடுகு                  – சிறிதளவு
.
செய்முறை 
வாணலில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும் . பின் பிரண்டையை  போட்டு சிறிது அதன் நிறம் மாறும் வரை வதக்கவும் பிறகு புளியும் சேர்த்து வதக்கவும், இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்சியில் அரைத்து கொள்ளவும் . பின் அதே வாணலில் சிறுது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து பிறகு ,அரைத்த பிரண்டை விழுதை சேர்த்து, மீதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு பின் இறக்கவும். சுவையான பிரண்டை துவையல் ரெடி . இட்லி,தோசை , மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் .
 பிரண்டை, முடக்கத்தான் கீரை நம் நரம்பு, எலும்பு மற்றும் மூட்டுக்கு நல்லது . இயற்கை கொடுத்தை உண்ணுவோம் , ஆரோக்கியமான உடல் நலத்துடன் இருப்போம் .
Spread the love