மறந்துபோன உறவுகள மனசுல வரவழைக்கும் கார்த்தி நடிக்கும் விருமன்
நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிப்பான ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கிராமத்து நாயகனாக கார்த்தி நடிக்கும் “விருமன்” படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக்குழு உற்சாகமாக உள்ளது.
இந்த படத்தில் கார்த்தி, அறிமுகம் அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைத்துள்ளார். கலை: ஜாக்கி, Pro: ஜான்சன், இணை தயாரிப்பு:ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்.
படத்தின் இசை மற்றும் டிரெயலர் வெளியீடு குறித்த...





