கிராமத்தில் வறுமையில் வாழ்கையை நடத்தும் குணசேகரன் (சித்தார்த்), செல்வந்தன் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் சென்னைக்கு வருகிறார், சென்னையில் பல வேலைகளைசெய்து பார்க்கிறார் அவரால் எந்த வேலையிலும் நீடித்து இருக்க முடியாத சூழலில் இறுதியாக பென்ஸ் கார் ஒன்றிற்கு டிரைவராக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆள் கடத்தல் தலைவன் ராஸின் (அபிமன்யு சிங்) ஆட்கள், தொழிலதிபர் அருண் வைத்தியநாதனின் மகளை (திவ்யான்ஷா கௌஷிக்) கடத்தும்போது குணசேகரன் காப்பாற்றுகிறார் ,மனிதர்கள் மீது அவநம்பிக்கையுடன் உள்ள பெண்ணான (திவ்யான்ஷா) அவருடன் ஏற்பட்ட சந்திப்பிக்குபின், இருவரது வாழ்க்கையிலும் நிறைய திருப்பங்கள் ஏற்படுகின்றன,மேலும் இவர்கள் இருவரும் வில்லன் கும்பலிடம் இருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனாய் நடித்துள்ள சித்தார்த் இந்த படத்தில் காதல், ஆக்ஷன் என இரண்டு அம்சங்களிலும் நிறைவாக நடித்துள்ளார், தைரியம் நிறைந்த கதாபாத்திரத்தில், கதாநாயகியாக திவ்யான்ஷா, நாயகன் சித்தார்த்துக்கு ஈடு கொடுத்து நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த் போன்றோரும் கொடுத்த கதாப்பாத்திரத்திற்க்கு ஏற்ப நன்கு நடித்துள்ளார்கள்.

இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக வாஞ்சிநாதன் முருகேசனும் படத்தொகுப்பாளராக ஜி.ஏ.கௌதமும் ,காதல் ஆக்ஷன் நிறைந்த முழு நீள பொழுதுப்போக்கு படத்துக்கு தேவையான அளவில் நன்கு பணியாற்றியுள்ளார்கள் அதேபோல் ஆக்ஷன் காட்சிகளை தினேஷ் காசியும் நன்கு அமைத்துள்ளார், நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசைதனி கவனம் பெறுகிறது,குறிப்பாக ‘நிரா நிரா’ என்னும் பாடல் ரசிக்கும்படி உள்ளது .

இளைஞர்கள் மற்றும் அனைத்து பார்வையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்ற வகையில் வர்த்தரீதியிலான பல அம்சங்கள் கொண்ட படமாக இயக்குநர் கார்த்திக் ஜி.க்ரிஷ் இப்படத்தினை உருவாக்கியுள்ளார். இது அவருக்கு இரண்டாவது படமாகும்.

காதல் ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படமாகிய ‘டக்கர்’ இளம் ரசிகர்களை கவரும் .
