தாய் மகன் பாசத்தை பேசிய படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் , அதனோடு ஒப்பிட்டுப்பார்க்கையில் தந்தை மகன் பாசம் சம்பந்தப்பட்ட படங்கள் குறைவு என்றே சொல்லலாம் , இந்த விமானம் தந்தை மகன் பாசத்தில் மூழ்கி திளைத்த படம், சென்னையில் கட்டணக் கழிப்பறை நடத்தி அதன் வாழ்க்கையை நகர்த்தும் வீரய்யா என்னும் மாற்றுத்திறனாளியாக சமுத்திரக்கனி உள்ளார் ,அவருடன் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளரும் மகனாக துருவனும் உடன் உள்ளார் (ராஜு ). பள்ளியில் நான்காவது படிக்கும் துருவனுக்கு விமானத்தில் பயணிக்க வேண்டும், பைலட் ஆக வேண்டும் என்று ஏராளமான ஆசைக்கனவுகள் ஏராளம் , எப்பாடுபட்டாவுது மகனின் ஆசைகனவை நனவாக்கியே தீரவேண்டும் என நினைக்கும் சமுத்திரக்கனியால் இறுதியில் மகனின் ஆசைக்கனவை நிறைவேற்ற முடிந்ததா ? இல்லையா?என்பதே மீதி படத்தின் கதை.

பாசமுள்ள ஏழை தந்தையாக நடுத்தர ஏழை மக்களில் ஒருவராக சமுத்திரக்கனி முழுக்கதையினையும் தாங்கி சிறப்பாக நடித்துள்ளார் , இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது அவருக்கு மிகவும் பொருந்தக்கூடியது என்பதால் எளிதாக நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார் ,விமானத்தின் மீது எல்லையில்லா பற்று கொண்ட சிறுவனாக மாஸ்டர் துருவன் இயல்பாக நடித்துள்ளார் இவர்களுடன் அனுசுயா மொட்டை ராஜேந்திரன், ராகுல் ராமகிருஷ்ணா, மீரா ஜாஸ்மின் போன்றோரும் நடித்துள்ளார்கள்
தந்தை – மகன் பாசஉணர்வினை கலைநயத்துடன் காட்சிபடித்தி சிவ பிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சரண் அர்ஜூன் இசையமைத்துள்ளார். பாடல்கள் சினேகன்,பிரபாகரின் வசனங்கள் பல இடங்களில் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் படி உள்ளது.
யதார்த்தமான வாழ்வியல் கதைகளை நேசித்து பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த விமானம் நிச்சயம் பிடிக்கும்.
