Monday, August 31

செய்திகள்

வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை & சேவா பாரதி இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில்  ஏழை எளிய மக்களுக்காக  “நடமாடும் மருத்துவ முகாம் ஊர்தி” சேவையை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை & சேவா பாரதி இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்காக “நடமாடும் மருத்துவ முகாம் ஊர்தி” சேவையை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

செய்திகள்
வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை & சேவா பாரதி இணைந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவ வசதி இல்லாத, மிகவும் பின்தங்கிய கிராமப்புற, ஏழை எளிய மக்களுக்காக இன்று "நடமாடும் மருத்துவ முகாம் ஊர்தி" சேவையை வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் Dr. ஐசரி K. கணேஷ் அவர்கள் தலைமை வகித்தார், தென் பாரத ஆர்.எஸ்.எஸ் மக்கள் தொடர்பு அமைப்பாளர் திரு பிரகாஷ் அவர்கள் சிறப்புரையாற்றினார், கனரா வங்கி இயக்குனர் திருமதி நளினி பத்மநாபன், சேவா பாரதி மாநில தலைவர் திரு ரபு மனோகர் உள்ளிட்டோர் வரவேற்புரையாற்றினர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்....
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிரந்த அங்கீகாரம் கிக்பாக்சிங் விளையாட்டிற்கும், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்திற்கும் (பதிவு எண் L-30-31523) வழங்கப்பட்டது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிரந்த அங்கீகாரம் கிக்பாக்சிங் விளையாட்டிற்கும், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்திற்கும் (பதிவு எண் L-30-31523) வழங்கப்பட்டது

சினிமா, விளையாட்டு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிரந்த அங்கீகாரம் நமது கிக்பாக்சிங் விளையாட்டிற்கும், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்திற்கும் (பதிவு எண் L-30-31523) வழங்கப்பட்டது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்... தமிழ்நாட்டில் கிக்பாக்ஸிங் விளையாட்டிற்கு வழிகாட்டி,ஊக்கமளித்து அங்கீகாரம் வழங்கிய தமிழ்நாடு விளையாட்டு துறையை இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் முன்னணியில் கொண்டு வரும் தொலைநோக்கு சிந்தனையில் பெரும்பணி ஆற்றிக் கொண்டிருக்கும் *மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் *திரு.உதயநிதி ஸ்டாலின் * அவர்களுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக்பாக்சிங் சங்கத்தின் சார்பாகவும், வீரர் & வீராங்கனைகள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம...
மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் முயற்சியில் மாநகராட்சி, அரசு மற்றும் இதர பள்ளி மாணவர்கள் உட்பட 200 குழந்தைகள் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அறிவியல் பயணம்

மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் முயற்சியில் மாநகராட்சி, அரசு மற்றும் இதர பள்ளி மாணவர்கள் உட்பட 200 குழந்தைகள் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அறிவியல் பயணம்

கல்வி, செய்திகள்
மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் முயற்சியில் மாநகராட்சி, அரசு மற்றும் இதர பள்ளி மாணவர்கள் உட்பட 200 குழந்தைகள் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அறிவியல் பயணம் ,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், சினிமா துறை பிரபலங்கள் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் சென்னை, பிப்ரவரி 12: மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளி தனது சமூகப் பணிகளில் ஒரு பகுதியாக சுமார் இருநூறு மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) அழைத்துச் செல்கிறது. அதில் பெரும்பாலானோர் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆவர். இடைநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு பாரபட்சமின்றி நடைமுறை அறிவியல் அறிவை வழங்கும் நோக்கத்தில், குயின் மீரா பள்ளி தனது சிறு மாணவர் குழுவுடன் சேர்த்து பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் படிக்கும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ...
முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்

சினிமா, செய்திகள்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை தேவரின் வரலாற்று திரைப்படமான தேசிய தலைவர் திரைப்படத்தின் நாயகன் மற்றும் கழக சிறுபான்மை பிரிவை சேர்ந்த ஜெ.எம்.பஷீர் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அவர்.தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகைப்படமும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படமும் இணைத்து உருவாக்கிய பிரம்மாண்ட காலண்டர் ஒன்றை முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கினார் அதில் உருவாக்கி இருந்த புகைப்படம் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது முதல்வர் ஸ்டாலின் இந்த கேலண்டரை ஆர்வமுடன் பார்த்து பாராட்டினார்....
பெண்கள் தான் படைப்பு கடவுள்; என் தாயும், மனைவியும் வணங்க வேண்டியவர்கள்! – நடிகர் சிவகுமார்

பெண்கள் தான் படைப்பு கடவுள்; என் தாயும், மனைவியும் வணங்க வேண்டியவர்கள்! – நடிகர் சிவகுமார்

சினிமா, செய்திகள்
பெண்கள் தான் படைப்பு கடவுள்; என் தாயும், மனைவியும் வணங்க வேண்டியவர்கள்! - நடிகர் சிவகுமார் இன்று பரிசு வாங்கிய சண்முகசுந்தரம் (மரபு விதை சேகரிப்பு) நம்மாழ்வார் ரமேஷ் (இயற்கை வேளாண்மை பயிற்சி செய்தவர்) மாலதி ரமேஷ், ரவிக்குமார், மூர்த்தி, (அண்ணா பல்கலைக்கழகம்) பெண்கள் விவசாய கூட்டுறவு குழு இவர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இறுதியில் பெண்கள் கலக்கி விட்டார்கள். ராஜ்கிரன் கூறியது போல், சக்தி இல்லை என்றால் எதுவுமே இல்லை. நானும் அதைப் பற்றி தான் பேசப் போகிறேன். நான் பத்து மாத குழந்தையாக இருக்கும்போது எனது அப்பா இறந்து விட்டார். புகைப்படம் இல்லாததால் அப்பா கருப்பா சிகப்பா என்று தெரியாது. அப்பா இருந்திருந்து அம்மா இறந்திருந்தால் இன்று நான் அனாதையாக இருந்திருப்பேன். இந்த மேடையில் நின்று இருக்க மாட்டேன். சூர்யா கார்த்தி பிறந்திருக்க மாட்டார...
உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!

உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!

சினிமா, செய்திகள்
சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும் - நடிகர் கார்த்தி சிவராமன் சார், அனந்த் சார் மற்றும் இஸ்மாயில் சார் இவர்கள் தான் இந்த என்.ஜி.ஓ-க்கு முதலீடு என்று கூறுவேன். சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை, அனுபவம் எல்லாம் சேர்ந்து தான் இதை வழிநடத்தி செல்கிறார்கள். ராஜ்கிரன் ஐயா, பொன்வண்ணன் சார் மற்றும் பாண்டிராஜ் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க போவதில்லை. ஏனென்றால், என்னுடைய சிந்தனையில் பாதியைக் கொண்டவர்கள். மேலும், எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்து பரிசு பெற்று எங்களைச் சிறப்பித்த விவசாய பெருமக்களுக்கு நன்றி. இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்வதில்லை. எந்த விஷயங்களையும் நாம் தேடி தெரிந்து கொள்வதும் இல்லை. தினேஷ்-ன் நவீன உழவனை பின்பற்றுபவர்களுக்கு நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கலாம். உழவன...
44 கி.மீ தூரத்தை தனிநபராக குறைவான நேரத்தில் கடந்து சாதனை படைத்த 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா

44 கி.மீ தூரத்தை தனிநபராக குறைவான நேரத்தில் கடந்து சாதனை படைத்த 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா

விளையாட்டு
அதிவிரைவு தனிநபர் ஸ்கேட்டிங் மராத்தான்! - உலக சாதனை நிகழ்த்திய சென்னை மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா ”ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா, கூடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா” என்று பாரதியார் விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் எழுதிய கவிதை, இன்று ஒவ்வொரு குழந்தைகளுக்கும் விளையாட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. படிப்பு மட்டும் ஒருவர் முன்னேற்றத்திற்கு போதாது, அவற்றுடன் கூடுதல் திறன் வேண்டும், அதிலும் விளையாட்டு திறன் என்பது மிக மிக முக்கியம், என்பதை தற்போதைய காலக்கட்டம் நிரூபித்து வருகிறது. இத்தகைய காலக்கட்டத்தில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள், வெற்றி, தோல்விகளை தாண்டி, சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுகிறார்கள். அந்த வகையில், சென்னையை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஏ.ஜே.ரபியா சக்கியா, தனிநபர் ...
ஒரே இரவில் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகம் உருவாகிவிடவில்லை. பல கற்றல், தோல்விகளுக்கு பின்பே இது உருவாகி இருக்கிறது.- ரம்யாவுடைய ‘Stop Weighting’ புத்தக வெளியீட்டு நிகழ்வில் நடிகர் கார்த்தி  பாராட்டு

ஒரே இரவில் ‘ஸ்டாப் வெயிட்டிங்’ புத்தகம் உருவாகிவிடவில்லை. பல கற்றல், தோல்விகளுக்கு பின்பே இது உருவாகி இருக்கிறது.- ரம்யாவுடைய ‘Stop Weighting’ புத்தக வெளியீட்டு நிகழ்வில் நடிகர் கார்த்தி பாராட்டு

இலக்கியம், செய்திகள்
”நடிகர் கார்த்தி மற்றும் சுஹாசினி மணிரத்னம், ரம்யாவுடைய 'Stop Weighting' புத்தகத்தை சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி 2023-ல் வெளியிட்டார்கள் பன்முக ஊடக ஆளுமையான ரம்யா, ஊடகங்கள் மற்றும் ஆரோக்கிய உடற்பயிற்சி அரங்கில் தனது பாராட்டுக்குரிய பயணத்திற்காக மில்லியன் கணக்கானவர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். முதன்முறையாக, அவர் தனது முதல் புத்தகமான 'ஸ்டாப் வெயிட்டிங்' மூலம் ஒரு எழுத்தாளராக தனது புதிய அவதாரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அவர் எப்படி தன் ஆரோக்கியம் குறித்தான கட்டுபாட்டை கையில் எடுத்து சரியான வாழ்க்கை முறையாக அதை மாற்றியுள்ளார் எனவும் அதில் அவரது நம்பிக்கைகள், அவரது கதைகள், அவர் செய்த தவறுகள் என நேர்மறையான வகையில் வாசகர்கள்  எளிதில் கனெக்ட் செய்து கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா பப்ளிஷ் செய்துள்ளது. சரியான டயட் உணவு மு...
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்களுக்கான கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு மாணவர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா

ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்களுக்கான கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு மாணவர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா

கல்வி, செய்திகள்
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்களுக்கான கல்லூரி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி மாணவர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவை அவர்களின் வளாகத்தில் கொண்டாடியது. காலை 9-10 மணி முதல் ரங்கோலி போட்டியுடன் விழா தொடங்கியது, இதில் 15 துறைகள் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் பிஎஸ்சி சிஎஸ், ஷிப்ட் 1 மற்றும் பிகாம் சிஎஸ் ஷிப்ட் 2. பொங்கல் தயாரிப்பு போட்டி காலை 10-11:30 மணி, பி.காம் சிஎஸ், ஷிப்ட் 1 மற்றும் பிகாம் சிஏ, ஷிப்ட் 2ல் வெற்றி பெற்றனர். காலை 11:30 மணிக்கு பாரம்பரிய நடன வடிவங்கள், ஸ்டால்கள் மற்றும் விளையாட்டுகளுடன் நிகழ்வு தொடங்கியது. கும்மி, தப்பு, கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் போன்ற நடன வடிவங்கள் அரங்கேற்றப்பட்டன. ஸ்டால்களில் உண்ணக்கூடிய உணவுகள், பாரம்பரிய உணவுகள், நாஸ்டால்ஜிக் சாக்லேட்டுகள், அவர்களின் குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தும் வகையில், பாத்திரங்கள், பாரம்பரி...
டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தின விழாவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில்  அவரது  திருவுருவ படத்திற்கு மரியாதை

டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தின விழாவையொட்டி தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை

சினிமா, செய்திகள்
தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், மக்கள் திலகமாக போற்றப்பட்டவருமான பொன்மன செம்மல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 106- வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு, இன்று 17.1.2023 காலை 10.30 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மூத்த நடிகர் ராஜேஷ், தளபதி தினேஷ் மற்றும் M.A. பிரகாஷ் ஆகியோர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்....